மேலும் அறிய

Rain Alert: கொட்டப்போகும் கனமழை.. தமிழகம் முழுவதும் 7 இடங்களில் ஏற்றப்பட்ட புயல் எச்சரிக்கை கூண்டு; எங்கெல்லாம்..?

Rain Alert: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கவுள்ளதால் தமிழகம் முழுவதும் 7 இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

Rain Alert: வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையைக் கடக்கவுள்ளதால் தமிழகம் முழுவதும் 7 இடங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. 

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை கரையைக் கடக்கவுள்ளதால் காற்றின் வேகம் அதிகரித்துள்ளது. மழைப் பொழிவும் அதிகரித்து வருவதால்,  நாகை, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. அதேபோல், சென்னை, கடலூர், காட்டுப்பள்ளி, எண்ணூர் துறைமுகங்களிலும் 3ஆம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மேலும், வங்ககடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை வலுவிழக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழக- புதுச்சேரி கடற்கரை நோக்கி நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழக்கும் எனவும், காலை 5.30 மணி நிலவரப்படி சென்னைக்கு தென்கிழக்கே 450 கிலோ மீட்டர் தொலைவில் மண்டலம் மையம் கொண்டு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. மேலும், காற்றழுத்த தாழ்வு மண்டலம் தெற்கு ஆந்திரா, வட தமிழகம், புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  இதனால் வங்கக் கடலில், 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது. 

மழைக்கான வாய்ப்பு:

21.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  விழுப்புரம், செங்கல்பட்டு,  காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் மற்றும் இராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

22.11.2022: வடதமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும்,  தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும்  இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், காஞ்சிபுரம், இராணிப்பேட்டை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

23.11.2022 மற்றும் 24.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொருத்தவரை,  24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடிமின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். 

மீனவர்களுக்கு எச்சரிக்கை:

20.11.2022 முதல் 22.11.2022 வரை: ஆந்திர கடலோரப்பகுதிகள், தமிழக - புதுவை கடலோரப்பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள், தென்மேற்கு வங்கக்கடல்   மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

21.11.2022 மற்றும் 22.11.2022:  மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். எனவே மேற்குறிப்பிட்ட நாட்களில் குறிப்பிட பகுதிகளுக்கு மீனவர்கள், மீன் பிடிக்க செல்ல வேண்டாமென மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. கொண்டாட்டம் தேவையா? - விஜயை விளாசிய டிடிவி தினகரன்!
சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு.. கொண்டாட்டம் தேவையா? - விஜயை விளாசிய டிடிவி தினகரன்!
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை! தாம்பரம் மாநகராட்சியின் மெகா திட்டம்! எப்போது கிடைக்கப்போகிறது?
24 மணி நேரமும் குடிநீர் சப்ளை! தாம்பரம் மாநகராட்சியின் மெகா திட்டம்! எப்போது கிடைக்கப்போகிறது?
மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!
மாறுகிறதா பரந்தூர் விமான நிலையம்? காஞ்சிபுரம், செங்கல்பட்டில் புதிய இடம் தேடும் தமிழக அரசு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
பணிந்த அரசு! ’கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் போராடக்கூடாது’ கடும் எதிர்ப்பால் தடை உத்தரவு வாபஸ்!
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
நடுத்தர SUV போர்; டாடா சியரா வருகையால் கியா செல்டோஸ்-க்கு கடும் போட்டி!- யாருக்கு முதலிடம்?
Hyundai Tucson: ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
ரக்கட் ஆன டிசைன், பேக்கேஜ்ட் அம்சங்கள், ஹைப்ரிட் - முற்றிலும் புதிய டக்சன் SUV - விலை என்ன?
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
தோழர்களுக்கே குஜிலிமஸ்தா.! கூட்டணிக்காக கம்யூனிஸ்டுக்கு மிரட்டலா.? TVK அரசை போட்டு தாக்கும் அதிமுக
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
சிபிஐ, சிபிஎம் என்ன தடை செய்யப்பட்ட அமைப்புகளா? - வட்டாட்சியர் செயலுக்கு அன்புமணி ராமதாஸ் கொந்தளிப்பு!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
CM Joseph Vijay: பெரம்பூரில் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை.. 7 புதிய செவிலியர் கல்லூரிகள்.. அறிவிப்புகளை அள்ளி வீசிய முதலமைச்சர்!
Embed widget