Rain Alert : இன்று தமிழகத்தில் 15 மாவட்டங்களில் கனமழை.. எந்தெந்த மாவட்டங்களில்? எத்தனை நாட்களுக்கு? முழு விவரம்..
தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் இன்று தஞ்சாவூர், திருவாரூர், நாகை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக,
05.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
06.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, இராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
07.11.2022 மற்றும் 08.11.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையை பொறுத்தவரை: அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இடிமின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு மதுராந்தகம், ஸ்ரீபெரம்புத்தூர் பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
RMC_Chennai_Autonowcast_Taluk_Experimental 2022-11-05-06:07:41 அடுத்த 3 மணி நேரத்திற்குள்ளாக மதுராந்தகம்,ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது pic.twitter.com/UmUmvXv48q
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) November 5, 2022
கடந்த 48 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
தொண்டையார்பேட்டை (சென்னை) 14, டிஜிபி அலுவலகம் (சென்னை), மேட்டுப்பாளையம் (கோவை) தலா 12, வேதாரண்யம் (நாகப்பட்டினம்), காயல்பட்டினம் (தூத்துக்குடி) தலா 10, பெரம்பூர் (சென்னை) 9, கயத்தார் ARG (தூத்துக்குடி), கடம்பூர் (தூத்துக்குடி), கயத்தாறு (தூத்துக்குடி), சென்னை கலெக்டர் அலுவலகம் (சென்னை), ஸ்ரீவைகுண்டம் (தூத்துக்குடி) தலா 8 செ.மீ பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
08.11.2022: தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.