மேலும் அறிய

Pugar Petti: அடிக்கடி பூட்டி இருக்கும் வி.ஏ.ஓ. அலுவலகம்! எப்போது நிரந்தர தீர்வு கிடைக்கும்? மக்கள் வேதனை

Chengalpattu News: சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் தொடர்பாக பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை

அடிக்கடி பூட்டிய படி கிடக்கும் சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலகம். அரசு விதிகளை மதிக்காமல் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர். நடவடிக்கை எடுப்பாரா செங்கல்பட்டு கோட்டாட்சியர்? என்று கேள்வி எழுப்புகின்றனர் அப்பகுதி மக்கள்

ரஹ்மத்துல்லா - சதுரங்கப்பட்டினம், செங்கல்பட்டு அனுப்பி வைத்த புகார்  . செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம்  சதுரங்கப்பட்டினம் வருவாய் கிராமத்தில் சுமார் 18000- க்கும் அதிகமான மக்கள் வாழ்ந்து வருகின்றனர். சதுரங்கப்பட்டினம் கிராமத்தில் வருவாய் கிராம நிர்வாக அலுவலகம் செயல்பட்டு வருகிறது. கிராம நிர்வாக அலுவலகம் அடிக்கடி பூட்டப்பட்டு இருப்பதால் பொதுமக்கள் தங்களுடைய தேவைகளை பெற்றுக் கொள்ள முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் ரகமதுல்லா நம்மிடம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் பேசுகையில் : தமிழக அரசாணையின்படி கிராம நிர்வாக அலுவலர் பணிபுரியும் பகுதியிலேயே வசிக்க வேண்டும். ஆனால் சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் உமாபதி அவர்கள் வெளியூரில் வசிப்பதால் அலுவலகத்திற்கு தாமதமாக வருவதாகவும் மாலையில் முன்னதாகவே அலுவலகத்தை பூட்டி விடுவதாகவும் அரசு பணிக்காக வெளியில் சென்றால் எங்கே செல்கிறோம் எப்போது அலுவலகம் திறக்கப்படும் என்று அறிவிப்பு பலகையில் குறிப்பிடாமல் சென்று விடுவதாகவும், ஏழை எளிய பொதுமக்களிடம் கடுகடுப்பாக நடந்து கொள்வதாக  பொதுமக்கள் புலம்புவதாக ரஹமதுல்லா தெரிவித்துள்ளார். 

 மாவட்ட நிர்வாகம் தலையிட கோரிக்கை

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் கணிசமான வாக்காளர்கள் உடைய பெயர்கள் பெயர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதற்கு கிராம நிர்வாக அலுவலரே முதன்மையான காரணம் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தெரிவிக்கின்றனர். சதுரங்கப்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் தொடர்பாக பல புகார்கள் கொடுக்கப்பட்டும் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது மாவட்ட நிர்வாகம் தலையிட்டு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்கள் தங்கள் தேவைகளை தங்கு தடை இன்றி பெற்றுக்கொள்ள உதவி செய்ய வேண்டும் என்பது பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!

உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?

கவலையே வேண்டாம். 

சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.

நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EX MLA Kathiravan: ”EX MLA கிட்டயே கட்டணமா?” போலீசாருடன் வாக்குவாதம் காரை குறுக்கே நிறுத்தி சண்டைPrashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
மேலும் ஒரு மகுடம்.. பிரதமர் மோடிக்கு விருது கொடுக்க லைன் கட்டும் உலக நாடுகள்!
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
TVK Protest: உத்தரவிட்ட தவெக தலைவர் விஜய்... ஓடிவந்த தொண்டர்கள்... ஸ்தம்பித்த சேலம் மாநகர்..
"பதஞ்சலி உணவு பூங்கா.. விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்" தேவேந்திர பட்னாவிஸ் புகழாரம்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
அதிர்ச்சி.. 2 லட்சம் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆப்சென்ட்- முறைகேடு செய்து பிடிபட்ட 29 பேர்!
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
Rajinikanth: அந்த ஸ்டைலை பாருங்கய்யா.. நாட்டுக்கே ரஜினிகாந்த்தான் நாட்டாமை! இது எப்போ நடந்துச்சு?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
அப்பா இந்து.. அம்மா முஸ்லிம்..கிறஸ்துமஸில் பிறந்த பிரபலம்! யாரு அந்த ஹீரோயின்?
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
சாட்டையை சுழற்றிய அமைச்சர் அன்பில்; பள்ளிகளில் பாலியல் குற்றம் செய்த 23 பேர் டிஸ்மிஸ்!
Pakistan Train Hijack: ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
ரயிலை கடத்திய தீவிரவாதிகள்.. பணயக்கைதியாக பிடிக்கப்பட்ட பயணிகள்.. பாகிஸ்தானில் ஷாக்!
Embed widget