மேலும் அறிய

லஞ்சமில்லா அரசு வேலை; 125 நாள் ஊரக வேலை! புதுவை இளைஞர்களுக்கு டபுள் ஜாக்பாட்!

புதுச்சேரி : புதுச்சேரி அரசுத் துறைகளில் நீண்ட காலமாக காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் முறைப்படி நிரப்பப்படும் என்று முதலமைச்சர் என். ரங்கசாமி உறுதியளித்துள்ளார்.

புதுச்சேரி : புதுச்சேரி அரசுத் துறைகளில் நீண்ட காலமாக காலியாக உள்ள பணியிடங்கள் அனைத்தும் விரைவில் முறைப்படி நிரப்பப்படும் என்று முதலமைச்சர் என். ரங்கசாமி உறுதியளித்துள்ளார். அதேநேரம், தகுதி வாய்ந்த இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பாதிக்கும் வகையில், விதிகளை மீறி முறையற்ற நியமனங்கள் செய்யும் அதிகாரிகள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கை பாயும் என புதுச்சேரி அரசு அதிரடி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

125 நாள் ஊரக வேலைத் திட்டம் தொடக்கம்

புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில், மத்திய அரசின் புதிய மெகா திட்டமான "விக்சித் பாரத் ரோஜ்கார் மற்றும் ஆஜீவிகா மிஷன் உத்தரவாதம்" (VB-G RAM G) திட்டத்தின் கீழ், 125 நாள் வேலை வழங்கும் திட்டத் தொடக்க விழா வில்லியனூரில் நேற்று நடைபெற்றது. முதலமைச்சர் என். ரங்கசாமி குத்துவிளக்கேற்றி இப்புதிய திட்டத்தைத் துவக்கி வைத்து, மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் உதவிகளை வழங்கினார்.

பின்னர் மேடையில் முதல்வர் ரங்கசாமி பேசியதாவது:

கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் நோக்கில், இதற்கு முன் இருந்த 100 நாள் வேலைத் திட்டம் தற்போது 125 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் தொழிலாளர்களுக்கு தினசரி ஊதியமாக ₹347 வழங்கப்படும். ஏரி, குளம், வாய்க்கால் போன்ற நீர்நிலை மேலாண்மைப் பணிகளுக்கு இதில் முக்கியத்துவம் அளிக்கப்படும்.

இப்புதிய திட்டத்திற்காக மொத்தம் ₹40 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் மாநில அரசின் நிதியாக ₹14 கோடி செலுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரி ஒரு சிறிய யூனியன் பிரதேசம் என்பதால், இத்திட்டத்திற்கான 100 சதவீத நிதியையும் மத்திய அரசே ஏற்க வேண்டும் என்று பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை நேரில் சந்தித்து வலியுறுத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.

5,000 பேருக்கு வேலைவாய்ப்பு

கடந்த ஆட்சிக் காலத்தில் மத்திய அரசின் ஒத்துழைப்போடு சுமார் 5,000 இளைஞர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட்டதைச் சுட்டிக்காட்டிய முதல்வர், தற்போதைய நிதியாண்டிலும் (2026) காலிப்பணியிடங்களை நிரப்பத் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார். சமீபத்தில் புதுச்சேரி தேர்வு முகமை (PEA) மூலம் 388 காலிப் பணியிடங்களுக்கான ஒருங்கிணைந்த பட்டதாரி அளவிலான (CGL 2026) தேர்வுகள் அறிவிக்கப்பட்டு, நடைமுறைகள் முடுக்கி விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதிகாரிகளுக்கு அவசர சுற்றறிக்கை

ஒருபுறம் முறையான வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்படும் நிலையில், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தன்னாட்சி அமைப்புகளில் நடைபெறும் தற்காலிக அல்லது விதிகளை மீறிய முறையற்ற நியமனங்களுக்குப் புதுச்சேரி அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அரசின் நிர்வாக சீர்திருத்தத் துறை அனைத்துத் துறைகளுக்கும் அனுப்பியுள்ள அவசர சுற்றறிக்கையின் முக்கிய அம்சங்கள்:  அனைத்து அரசு நியமனங்களும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் படியும், நடைமுறையில் உள்ள பணி விதிகளின்படியும், வழக்கமான காலிப் பணியிடங்களுக்கு (Regular Vacancies) மட்டுமே மேற்கொள்ளப்பட வேண்டும். தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின் வேலைவாய்ப்பு உரிமையைப் பாதிக்கும் வகையில், விதிகளை மீறி மேற்கொள்ளப்படும் எந்தவொரு 'கொல்லைப்புற நியமனங்களையும்' (Backdoor Entries) நீதிமன்றம் ஏற்காது என சென்னை உயர்நீதிமன்றம் கண்டிப்புடன் சுட்டிக்காட்டியுள்ளது. பணி நியமனக் கோப்புகளைக் கையாளும் உயர் அதிகாரிகள், இடஒதுக்கீடு விதிகள் சரியாகப் பின்பற்றப்படுகிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். விதிகளை மீறினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை பாயும்.

அரசின் இந்த இரு முக்கிய அறிவிப்புகளும் புதுச்சேரி இளைஞர்களிடையே பெரும் நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளன. இவ்விழாவில் தற்காலிக சபாநாயகர் அன்பழகன், அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணராவ், வி.பி. சிவக்கொழுந்து, அரசுச் செயலர் கிருஷ்ணன் மோகன் உப்பு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
Chennai Rail Expansion: சென்னை ரயில் பயணிகளுக்கு மெகா ஜாக்பாட்! ரூ.2100 கோடி செலவில் வரப்போகும் 4 மாஸ் மாற்றங்கள்!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ஆஜராகாத அதிகாரி... கடுப்பான தகவல் ஆணையம்! மனுதாரருக்கு இழப்பீடு கொடுக்க அதிரடி உத்தரவு!
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
ரூ. 45,000 தள்ளுபடி! சாம்சங் S25 எட்ஜ் வாங்க இதுதான் சரியான நேரம் – ஃபிளிப்கார்ட் மாஸ் ஆபரா?
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - காஞ்சிபுரம் ஆட்சியர் அதிரடி அறிவிப்பு!
டிகிரி முடிச்சிருக்கீங்களா? இலவசமாகவே அரசு வேலை வாங்க செம்ம வாய்ப்பு - அதிரடி அறிவிப்பு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget