மேலும் அறிய

கேரளாவின் வறுமை ஒழிப்பு: அரசு ஏன் கணக்கெடுப்பை மறுக்கிறது? அன்புமணி ராமதாஸ் கேள்வி

கேரள அரசின் இந்த சாதனை தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்பித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் வறுமை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது.

கொடிய வறுமையை ஒழித்த கேரள அரசு: திட்டம் வகுக்க உதவிய சர்வே,  சீனி சக்கரை அரசு இனியாவது தேவையை  உணருமா? பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில்.,

கேரளத்தில் கொடிய வறுமையில் வாடிய 64,006 குடும்பங்கள் வறுமையின் பிடியிலிருந்து மீட்கப்பட்டு இருப்பிடம், வாழ்வாதாரம் மற்றும் மருத்துவ வசதிகள் ஏற்படுத்தித் தரப்பட்டிருக்கின்றன. இதன் மூலம் இந்தியாவில்  கொடிய வறுமையை  ஒழித்த முதல் மாநிலம் என்ற பெருமையை  வரும் நவம்பர் ஒன்றாம் தேதி, கேரள மாநிலம் உருவாக்க நாளில், அம்மாநிலம் பெறவிருக்கிறது. இதற்காக கேரள அரசுக்கு பாராட்டுகள்.

கேரள அரசின் இந்த சாதனைக்கு காரணமாகவும், ஆதாரமாகவும் இருந்தது அம்மாநிலத்தில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பு ஆகும்.  கேரளத்தில் கொடிய வறுமையை ஒழிக்க முடிவு செய்த  அம்மாநில அரசு, அதற்கான காரணிகளை கண்டறிய  மாநிலம் முழுவதும் கணக்கெடுப்பு நடத்தியது. அந்தக் கணக்கெடுப்பில் மாநிலம் முழுவதும் 64,006 குடும்பங்கள் வறுமையில்  வாடுவதாகவும்,  அக்குடும்பங்களில் ஒரு லட்சத்து 3,099  பேர் இருப்பதும் தெரியவந்தது. அதனடிப்படையில் மைக்ரோ திட்டங்கள் வகுக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டதன் பயனாகத் தான் அங்கு வறுமை ஒழிக்கப்பட்டுள்ளது.

கேரள அரசின் இந்த சாதனை தமிழ்நாட்டுக்கு மிகப்பெரிய பாடத்தைக் கற்பித்திருக்கிறது. தமிழ்நாட்டிலும் வறுமை தலைவிரித்தாடிக் கொண்டிருக்கிறது. ஆனால்,  வறுமையை ஒழித்து வருவதாக  விளம்பரமும், ஆரவாரமும் மட்டுமே செய்யும்  திமுக அரசு, இன்று வரை  வறுமையை  ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எதையும் எடுக்கவில்லை. இன்னும் கேட்டால் தமிழ்நாட்டில் வறுமையில் வாடும் குடும்பங்கள் எத்தனை? என்ற புள்ளிவிவரம் கூட அரசிடம் இல்லை. அதற்குக் காரணம்  தரவுகளைத் திரட்ட எந்தக் கணக்கெடுப்பையும்  திமுக அரசு நடத்தாதது தான்.

பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கண்டறிந்து தீர்வு காண பொருளாதாரக் கணக்கெடுப்பு அவசியம். அதைத் தான் கேரள அரசு செய்திருக்கிறது.  சமூக ஏற்றத்தாழ்வுகளைக் கண்டறிந்து தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பு கட்டாயம். இவை அனைத்தையும் ஒன்றாக கண்டறிந்து  தீர்வு காண சாதிவாரி கணக்கெடுப்பு எனப்படும்  சமூக, பொருளாதார சாதிவாரி கணக்கெடுப்பு அடிப்படையானத் தேவை ஆகும். அதைத் தான் தமிழ்நாட்டில் மேற்கொள்ள வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால், அதன் தேவையை உணர  திமுக அரசு மறுக்கிறது.

அடிப்படையில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது சமூகத்தின் குறைகளையும், நோய்களையும் கண்டறிவதற்கான  ஆய்வு தான். அதைச் செய்யாமல் சமூகத்தின் நோய்களுக்கும், குறைகளுக்கும்  மருத்துவம் செய்ய முடியாது. அந்த அடிப்படையில் இந்த ஆய்வை மேற்கொள்ள வேண்டியது  தமிழக அரசின் கடமை.  ஆனால்,  அதை செய்தால் தங்கள் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட சமூக அநீதிகள் அனைத்தும் அம்பலமாகிவிடும் என்று அஞ்சுகிறது. அதனால் தான் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த திமுக அரசு மறுத்து வருகிறது.

சமூகநீதி என்றாலும், வறுமை ஒழிப்பு என்றாலும் ஏட்டில் எழுதுவதால் பயனளிக்காது.  சீனி சக்கரை சித்தப்பா என்று  ஏட்டில் எழுதி நக்கினால் இனிக்காது. இந்த உண்மையை  திமுக அரசு உணர வேண்டும்.  உணர்ந்த பின், கடந்த நான்கரை ஆண்டுகளில் இழைக்கப்பட்ட சமூக அநீதிகளுக்கு  பரிகாரம் தேடும் வகையில் தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த  திமுக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Vaiko Slams TVK Vijay:
Vaiko Slams TVK Vijay: "குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?" விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ
Special bus: 2 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்
2 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்
Airtel Vs Jio Vs Vi: ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் - ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?
Airtel Vs Jio Vs Vi: ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் - ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?
TN School Holiday: கொட்டித்தீர்த்த மழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
TN School Holiday: கொட்டித்தீர்த்த மழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

திரை தீ பிடிக்கும்... ஒன்றுசேரும் ரஜினி - கமல்! ரஜினி கடைசி படமா?
Christiano Ronaldo Marriage | 10 வருட காதல்..5 குழந்தைகள்!காதலியை கரம்பிடிக்கும் ரொனால்டோ
அருள் காரை நொறுக்கியது ஏன்? தாக்குதலின் ஆரம்ப புள்ளி! பகீர் CCTV காட்சி
Madhampatti Rangaraj  | ’’அது கட்டாய கல்யாணம்!பணத்துக்காக இப்படியா?’’ மாதம்பட்டி ரங்கராஜ் பகீர் DNA TEST-க்கு வா’’
திமுகவில் வைத்திலிங்கம்?விழும் முக்கிய விக்கெட்டுகள் அதிர்ச்சியில் OPS | Vaithilingam Joins DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vaiko Slams TVK Vijay:
Vaiko Slams TVK Vijay: "குற்ற உணர்ச்சி இல்லை.. ஆத்திசூடி அறியாதவர் கனவுலகில் ஆட்சி செய்கிறாரா?" விஜய்-யை கடுமையாக சாடிய வைகோ
Special bus: 2 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்
2 நாள் தொடர் விடுமுறை.! எதிர்பார்த்து காத்திருந்த மக்களுக்கு போக்குவரத்து துறை சொன்ன குட் நியூஸ்
Airtel Vs Jio Vs Vi: ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் - ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?
Airtel Vs Jio Vs Vi: ஒரே ரீசார்ஜ் ப்ளான்.. முற்றிலும் வித்தியாசமான பலன்கள் - ஏர்டெல்-ஜியோ-வோடாஃபோன் எது பெஸ்ட்?
TN School Holiday: கொட்டித்தீர்த்த மழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
TN School Holiday: கொட்டித்தீர்த்த மழை! பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்
Bihar Elections 2025: 18 மாவட்டங்கள், 121 தொகுதிகள் - 1314 வேட்பாளர்கள், 3.75 கோடி வாக்காளர்கள் -  பீகார் தேர்தல்
Bihar Elections 2025: 18 மாவட்டங்கள், 121 தொகுதிகள் - 1314 வேட்பாளர்கள், 3.75 கோடி வாக்காளர்கள் - பீகார் தேர்தல்
IND Vs AUS T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஸ்கை, கில்லுக்கு ஃபார்ம் வருமா? இன்று 4வது டி20 போட்டி
IND Vs AUS T20: தொடரை கைப்பற்றுமா இந்தியா? ஸ்கை, கில்லுக்கு ஃபார்ம் வருமா? இன்று 4வது டி20 போட்டி
Maruti Suzuki: ஒன்லி ஒன், சூப்பர் ஒன்.. 3 கோடி கார்களை விற்றுத் தீர்த்த மாருதி - கொட்டிக் கொடுக்கும் ஹேட்ச்பேக், செடான்
Maruti Suzuki: ஒன்லி ஒன், சூப்பர் ஒன்.. 3 கோடி கார்களை விற்றுத் தீர்த்த மாருதி - கொட்டிக் கொடுக்கும் ஹேட்ச்பேக், செடான்
Trump Tariff: ட்ரம்ப் போட்ட வரிகள் - ”சந்தேகமும், கேள்விகளும் இருக்கு” அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி
Trump Tariff: ட்ரம்ப் போட்ட வரிகள் - ”சந்தேகமும், கேள்விகளும் இருக்கு” அமெரிக்க உச்சநீதிமன்றம் அதிரடி
Embed widget