Ponmudi Case Verdict : பொன்முடி, கெளதமசிகாமணி விடுதலை! செம்மண் வழக்கு: எதிர்பாராத திருப்பம், கண்ணீருடன் வெளியேறிய மகன்!
செம்மண் எடுத்த பகுதி ஏற்கனவே பள்ளமான பகுதி நீருப்பிக்கப்பட்டுள்ளதால் விடுதலை செய்து நீதிபதி மணிமொழி உத்தரவுவிட்டார்!

விழுப்புரம் : வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் அளவிற்கு அதிகமாக செம்மண் எடுத்ததாக பொன்முடி கெளதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் மீது தொடரப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேரும் அரசு தரப்பில் போதிய அளவு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டவை ஏற்புடையதல்ல என்றும் செம்மண் எடுத்த பகுதி ஏற்கனவே பள்ளமான பகுதி நீருப்பிக்கப்பட்டுள்ளதால் போதிய சாட்சிகள் இல்லாத காரணத்தினால் பொன்முடி கெளதமசிகாமணி உள்ளிட்ட 7 பேர் விடுதலை விடுதலை செய்து நீதிபதி மணிமொழி உத்தரவு .
விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ., அவரது மகன் பொன்.கவுதமசிகாமணி, ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அரசு தரப்பு சாட்சிகளின் விசாரணை கடந்த அக்டோபர் மாதம் முடிவடைந்தது.
இவ்வழக்கில் 57 சாட்சிகளில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இந்நிலையில் இவ்வழக்கில் அனைத்து தரப்பு சாட்சி விசாரனை மற்றும் இரதரப்பு விசாரனை முடிந்து ஏப்ரல் 2 ஆம் தேதி தீர்ப்பு அளிக்கப்பட உள்ளதாக கடந்த மார்ச் 2 ஆம் தேதி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி மணி மொழி அறிவித்திருந்தார்.
அதன் படி இன்று இவ்வழக்கு விசாரனை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தீர்ப்பிற்காக விசாரனைக்கு வந்தது. அப்போது வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி அவரது மகன் கெளதமசிகாமணி, கோதகுமார், சதானந்தம் உள்ளிட்ட ஏழு பேர் விழுப்புரம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகினர். இவ்வழக்கில் தீர்ப்பினை இன்று மாலை 3 மணிக்கு அளிக்கப்படுமென தெரிவித்து நீதிபதி மணிமொழி தெரிவித்தார்.
இந்நிலையில், 3 மணிக்கு பொன்முடி உள்ளிட்டோர் ஆஜரானா நிலையில் அரசு தரப்பில் போதிய அளவு ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது ஏற்புடையதல்ல என்றும் செம்மண் எடுத்த பகுதி ஏற்கனவே பள்ளமான பகுதி நீருப்பிக்கப்பட்டுள்ளதால் விடுதலை செய்து நீதிபதி மணிமொழி உத்தரவுவிட்டார்.
நீதிமன்றத்தில் இருந்து வெளியே கண்ணீருடன் பொன்முடி மகன் கெளதம் சிகாமணி கண்ணீருடன் வெளியே வந்தார். இவ்வழக்கில் அரசு தரப்பிற்கு கார்த்திகேயன் என்ற வழக்கறிஞரும் பொன்முடி தரப்பில், அனந்த நாராயணன் என்ற வழக்கறிஞர்கள் ஆஜராகினர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















