மேலும் அறிய
Advertisement
Pongal Dhoti Saree: பொங்கல் பரிசுத்தொகுப்பில் வேட்டி, சேலை வழக்கம்போல வழங்கப்படும் - அமைச்சர் ஆர்.காந்தி
பொங்கல் பரிசுத்தொகுப்பில் வேட்டி, சேலைகள் வழக்கம்போல வழங்கப்படும் என்று அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு சார்பில் ஆண்டுதோறும் வேட்டி மற்றும் சேலை வழங்கப்படுவது வழக்கம். ஆனால், வரும் பொங்கல் பண்டிகைக்கு அரசு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியானது முதல் சர்ச்சை தொடர்ந்து வந்தது. இந்த சூழலில், பொங்கல் பண்டிகைக்கு வழக்கம்போல வேட்டிகள் மற்றும் சேலைகள் வழங்கப்படும் என்று கைத்தறித்துறை அமைச்சர் ஆர்.காந்தி தெரிவித்துள்ளார்.
முன்னதாக, பொங்கல் பரிசுத் தொகுப்பில் வேட்டி, சேலை வழங்காவிட்டால் பெரும் போராட்டம் நடத்தப்படும் என்று அ.தி.மு.க. சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு இடம்பபெறாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர். பொங்கல் பரிசுத்தொகுப்பில் கரும்பு சேர்க்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion