மேலும் அறிய

எண்ணற்ற திட்டம்... வேலைவாய்ப்பு... பாமக பொது நிழல் நிதிநிலை அறிக்கை - அன்புமணி அசத்தல்

தமிழகத்தில் கனிம வளத்தினை முறைபடுத்த வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடி உள்ளது.

விழுப்புரம்: தமிழகத்தில் கனிம வளத்தினை முறைபடுத்த வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடி உள்ளது கடனிற்கு மட்டும் ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி வட்டி மட்டும் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், அசலை இதுவரை அடைக்கவில்லை என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே தைலாபுரம் தோட்டத்தில்  பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ் பாமக-வின் பொது நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார்.

தமிழ்நாட்டு மக்களுக்கான திட்டங்களை வகுப்பதிலும், நிதிநிலை அறிக்கையை தயாரிப்பதிலும் தமிழக அரசுக்கு வழிகாட்ட வேண்டும் என்ற உன்னத நோக்குடன் 2003 - 2004ம் ஆண்டு முதல் நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக தயாரித்து வெளியிட்டு வருகிறது. இந்தாண்டு 23-வது நிழல் நிதிநிலை அறிக்கையை பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட, மூத்த செய்தியாளர் ஒருவர் பெற்றுக்கொண்டார்.

அப்போது பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ், கவுரவத் தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்கத்தலைவர் பு தா அருள்மொழி, பொதுச் செயலாளர் வடிவேல் ராவணன், பொருளாளர் திலகபாமா, முன்னாள் அமைச்சர் ஏ கே மூர்த்தி, எம்.எல்.ஏ சிவகுமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிதிநிலை அறிக்கையின் படி, கல்வி, மருத்துவம், விவசாயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என அரசுக்கு பாமக வலியுறுத்தியுள்ளது. அதன்படி நிழல் பட்ஜெட்டில் கல்வி, மருத்துவத்துக்கு 6 விழுக்காடு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண்துறைக்கு 65 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கல்வி, மருத்துவம், விவசாயத்துக்கு மொத்த செலவில் மூன்றில் ஒரு பங்கை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

மே 1-ம் தேதி முதல் மதுவிலக்கு அமல்படுத்தப்படும். இரு மொழி.கொள்கை தொடரும். தொகுதிக்கு ஒரு அரசு கலைக்கல்லூரி அமைக்கப்படும். தமிழகத்தில் 6 புதிய மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும். ரூ.318-க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும். வேலையில்லா இளைஞர்களுக்கு மாதம் ரூ 5 ஆயிரம் வழங்கப்படும். டிஎன்பிஎஸ்சிக்கு நிலையான தேர்வு அட்டவணை உருவாக்கப்படும். பேருந்து கட்டணம் உயர்த்தப்படமாட்டாது.

கோயம்பேடு பேருந்து முனையம் பூங்காவாக மாற்றப்படும். கிளாம்பாக்கத்துக்கு மெட்ரோ ரயில் சேவை கொண்டுவரப்படும். மேகேதாட்டு அணை கட்டுவது தடுக்கப்படும். வேளாண்மைத்துறைக்கு ரூ 65,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மாதாமாதம் இனி மின் கட்டணம் கணக்கீடு செய்யப்படும். கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கைகளுக்கு 1 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். அங்கீகரிக்கட்ட பத்திரிக்கையாளர்களுக்கு 90 சதவீத மானியத்தில் மடி கணினி வழங்கப்படும் போன்ற கோரிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

இதனைத் தொடர்ந்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் பேசுகையில், 

தமிழகத்தின் வளர்ச்சிக்காக திமுகவும் அதிமுகவும் எதிர்கட்சியாக இருந்தபோது நிழல் நிதி நிலை அறிக்கை வெளியிட்டது கிடையாது என்றும் தொடர்ந்து பாமக தான் வெளியிட்டு வருவதாக தெரிவித்தார். தமிழகத்தில்
கனிம வளத்தினை முறைபடுத்த வேண்டும் என்றும் தமிழ்நாட்டின் கடன் 15 லட்சம் கோடி உள்ளது கடனிற்கு மட்டும் ஆண்டிற்கு ஒரு லட்சம் கோடி வட்டி மட்டும் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள், அசலை இதுவரை அடைக்கவில்லை என தெரிவித்தார்.
 
தமிழ்நாட்டில் அரசு துறையில் 1.20 கோடி பேர் காத்திருக்கும் நிலை உள்ளதால் பாமக நிதி நிலை அறிக்கையில் அடுத்த 4 ஆண்டுகளில் 7.50 லட்சம் பேருக்கு அரசு வேலை வழங்கப்படும் என கூறினார். அரசு நிர்வாகத்தில் செயற்கை நுண்னறிவு திறன் தொழில்நுட்பம் அரசு நிர்வாகத்தில் பயன்படுத்தபடும் என்றும் உள்ளாட்சி அமைப்புகளில் பிற்படுத்தபட்ட வகுப்பினருக்கு 50 சதவிகித இட ஒதுக்கீடு செய்யவேண்டும் ,ஜனவரி 25 உலகத் தமிழ்மொழி நாளாக கடைபிடிக்கப்படும் தமிழத்தில் மாநில பாட திட்ட பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பயிற்று மொழியாக்க சட்டமாக்க வேண்டும் என தெரிவித்தார்.
 
சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த 400 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் தமிழ்நாட்டில் இடஒதுகீட்டின் பயன்கள் குறித்து வெள்ளையறிக்க வெளியிடப்படும் என்றும் தமிழ்நாட்டில் அனைத்து மது பீர் ஆலைகள் மூடப்படும் என தெரிவித்தார். தமிழகத்தில் மும்மொழிக்கொள்கைக்கு இடமில்லை 2 லட்சம் கோடி வரியில்லாத வருவாய் ஈட்டத் திட்டம், தொழில் முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் , மேகதாது அணை தடுக்கபடும், மின் திட்டங்களை விரைவுபடுத்த 2 லட்சம் மடிக்கணினி திட்டம் பத்திரிக்கையாளர்களுக்கு செயல்படுத்தபடும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

தலைப்பு செய்திகள்

TVK:
TVK: "பண்ணையார் வீட்டுக் குழந்தை உளறல் நிதி.." உதயநிதியை விளாசிய தவெக!
பாபநாசத்தில் நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் 
பாபநாசத்தில் நலிவுற்ற விவசாயிகள் சங்க மாநில, மாவட்ட நிர்வாகிகள் அவசர ஆலோசனை கூட்டம் 
RTI Act: RTI புதிய அரசாணை...விஜய்க்கு பறந்த கோரிக்கைகள்.. வாபஸ் பெற்ற தவெக அரசு!
RTI Act: RTI புதிய அரசாணை...விஜய்க்கு பறந்த கோரிக்கைகள்.. வாபஸ் பெற்ற தவெக அரசு!
2 மாதங்களில் கிலோவுக்கு ரூ.40 உயர்வு! ரேஷனில் ரூ.50-க்கு சன்னரக அரிசி தருக: அன்புமணி கோரிக்கை!
2 மாதங்களில் கிலோவுக்கு ரூ.40 உயர்வு! ரேஷனில் ரூ.50-க்கு சன்னரக அரிசி தருக: அன்புமணி கோரிக்கை!

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
RTI Act: இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
இதுதான் விஜயின் வெளிப்படைத்தன்மையா? புதிய அரசாணையால் RTI ஆர்வலர்கள் ஆவேசம் - குவியும் எதிர்ப்பு
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
CM Joseph Vijay: சொல்ல முடியாத சோகம்.. கரூர் சம்பவத்தின் ஓராண்டு.. வேதனையுடன் அஞ்சலி செலுத்திய விஜய்!
Chennai Airport: போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
போரூர் பைபாஸ் டூ சென்னை ஏர்போர்ட்டிற்கு நேரடி மேம்பால சாலை - அடையாறு ஆறின் மீது திட்டம்
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Virat Kohli: சண்டே ஜாலிடே.. 86வது சதத்தை விளாசினார் கோலி! செஞ்சுரி மெஷின் இஸ் பேக்!
Tasmac: 43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
43 டாஸ்மாக் கடைகளை தூக்கியே ஆகனும்..! தலைமை செயலாளருக்கே லெட்டர் போட்ட ரயில்வே, ஏன்? எங்கே?
Toyota Innova flex fuel: 1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
1 கிமீ-க்கு ரூ.25 செலவில் சொகுசுப் பயணம்.! இன்னோவா 100% Flex Fuel அறிமுகம்; நிதின் கட்கரி முக்கிய தகவல்
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
IND vs WI: 296 ரன்கள் டார்கெட்.. இமாலய இலக்கை நோக்கி இந்தியா! வெற்றியுடன் தொடங்குமா கில் படை?
Mahindra Thar OG Review: புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
புதிய மஹிந்திரா தார் OG உண்மையிலேயே கெத்து காட்டுதா.? அதன் நிறை, குறைகள பற்றி தெரிஞ்சுக்கோங்க
Embed widget