CM Stalin PMK: #ஸ்டாலின்துரோகம் - 1000 நாள் ஆகியும் அமல்படுத்தவில்லை, வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு எங்கே?
CM Stalin PMK: முதலமைச்சர் ஸ்டாலின் துரோகம் இழைத்துவிட்டதாக, பாமகவினர் முதலமைச்சர் ஸ்டாலினை இணையத்தில் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
CM Stalin PMK: வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு வழங்காததை கண்டித்து, #ஸ்டாலின்துரோகம் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கண்டனம்:
அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன. அவற்றின் மீதான விசாரணையின் முடிவில், “சாதி அடிப்படையில் இட ஒதுக்கீட்டினை வழங்க முடியுமா? இதுதொடர்பாக முறையான தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீட்டை வழங்க முடியுமா என்பன உள்பட ஏழு கேள்விகளை எழுப்பினோம். அதற்கு அரசு அளித்த விளக்கம் போதுமானதாக இல்லை. எனவே, வன்னியர் சமூகத்தினருக்கான இடஒதுக்கீடு செல்லாது” என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
உச்சநீதிமன்றம் தீர்ப்பு
இடஒதுக்கீடு ரத்தை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதன் மீதான விசாரணயின் முடிவில் வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்நிலையில், தீர்ப்பளித்து 1000 நாட்கள் ஆன பின்னரும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு அளிக்க முதலமைச்சர் ஸ்டாலின் மறுப்பதாக கூறி, #ஸ்டாலின்துரோகம் என்ற ஹேஷ்டேக் இணையத்தில் வைரலாகி வருகிறது.
ட்ரெண்டாகும் #ஸ்டாலின்துரோகம்
2021ஆம் ஆண்டில்;
— ARUL Rathinam (@arulgreen) December 24, 2024
ஒரு பக்கம் - வன்னியர் உள் இடஒதுக்கீட்டுக்கு எதிராக வழக்குத் தொடுக்க தீர்மானம்!
மறு பக்கம் - ஆட்சிக்கு வந்தால் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு அளிப்போம் என்கிற போலி வாக்குறுதி!
இதுதான் #திராவிடமாடல்!#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation pic.twitter.com/nQXlXigqDw
உச்சநீதிமன்ற தீர்ப்பு 31.03.2022👇
— Vinoba Bhoopathy (@vinobha) December 24, 2024
"வன்னியர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க தமிழ்நாடு அரசுக்கு சட்டப்படி அதிகாரம் உள்ளது"
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து 1000 நாட்கள் ஆன பின்னரும், வன்னியர்களுக்கு இடப்பங்கீடு அளிக்க மு.க. ஸ்டாலின் மறுப்பது ஏன்?@mkstalin#ஸ்டாலின்துரோகம்… pic.twitter.com/HSxtx02qAh
தமிழக அரசே! திராவிட அரசே!
— 🔔Bell_Boy🔔 (@BellBoy_____) December 24, 2024
மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20% இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு கிடைக்கவில்லை என்பதை ஒப்புக்கொண்ட திமுக! நடைமுறை படுத்த தயங்குவது ஏன்?
#VanniyarReservation #ஸ்டாலின்துரோகம் pic.twitter.com/wCBz0U8bOd
#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation pic.twitter.com/VT4YWqr7Sj
— SA (@TweetsofSA) December 24, 2024
1.சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் தடையில்லை
2. மாநில அரசுக்கு சாதிவாரி சர்வே நடத்துவதும் தடையில்லை
3. 10.5% இடஒதுக்கீட்டை கொடுப்பதுக்கு Census & Survey இரண்டுமே தேவையில்லை
கல்வி &வேலைவாய்ப்பு தரவுகள் மட்டுமே…
தமிழக அரசே!
— பாட்டாளி நவீன் குமார் (@pattali32) December 24, 2024
வன்னியர்களுக்கு தனி
இடப்பங்கீடு கொடு!
இனியும் ஏமாற்றி விடலாம் என்று நினைத்தால் ஒட்டுமொத்த சமுதாயமும் உங்களுக்கு எதிராக திரும்பும் எச்சரிக்கை.. #ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation pic.twitter.com/wwwUthOYxP
உழைக்கும் வர்க்கமான வன்னியர்களுக்கு இடப்பங்கீடு இதோ தந்து விடுகிறேன் தந்து விடுகிறேன் என சட்டசபையில் ஏமாற்றிவிட்டது திமுக அரசு. @News18TamilNadu@polimernews@NewsTamilTV24x7@abpnadu#ஸ்டாலின்துரோகம்#VanniyarReservation pic.twitter.com/KJhxIh5Ydl
— Tamilvanan Govindan (@villagemedia16) December 24, 2024