PM Modi Chennai Visit: தமிழ்நாட்டிற்கு வரும் பிரதமர் மோடி..! எத்தனை மணிக்கு எங்கெல்லாம் செல்கிறார்..? முழு அட்டவணை
PM Modi Chennai Visit Schedule: ஒருநாள் பயணமாக தமிழ்நாடு வரும் பிரதமர் மோடியின் முழு பயண விவரங்களை கீழே விரிவாக காணலாம்.
PM Modi Chennai Visit Schedule: ஒருநாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடியின், முழு பயண விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்...
பிரதமர் மோடி தமிழகம் வருகை:
ஒருநாள் பயணமாக நாளை தமிழகம் வரும் பிரதமர் மோடி, சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய ஒருங்கிணைந்த முனையக் கட்டடத்தை நாட்டிற்கு அர்பணிக்கிறார். தொடர்ந்து சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடைபெறும் விழாவில், சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கிவைக்கிறார்.
அதோடு, தாம்பரம்-செங்கோட்டை இடையிலான விரைவு ரயில் சேவையைத் தொடங்கி வைப்பதுடன், ரூ.294 கோடி மதிப்பில் திருத்துறைப்பூண்டி- அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி.மீ. தொலைவுக்கு அமைக்கப்பட்டுள்ள அகல ரயில் பாதையை நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இறுதியாக, மயிலாப்பூர், ஆர்.கே.மடம் சாலையில் உள்ள ராமகிருஷ்ண மடத்தின் 125-வது ஆண்டு விழாவில் பங்கேற்கும் பிரதமர், மாலை 6.30 மணியளவில் பல்லாவரம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரூ.3,700 கோடி மதிப்பிலான சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு:
பிரதமரின் வருகையை முன்னிட்டு, சென்னையில் ரயில், விமானம், பேருந்து நிலையங்களில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பாதுகாப்புப் பணியில் 22 ஆயிரம் காவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சென்னை மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மோடியின் பயண விவரம்:
பிற்பகல் 01.35: ஐதராபாத் விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மோடி சென்னைக்கு புறப்படுகிறார்
பிற்பகல் 2:45 : சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்
பிற்பகல் 2:50 : சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை வழியாக புறப்படுகிறார்
பிற்பகல் 2:55 : விமான நிலையத்தின் புதிய முனையத்திற்கு வருகை தருகிறார்
மாலை 3:00 - 3:15 : சென்னை விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைக்கிறார்
மாலை 3:20 : விமான நிலையத்தின் முனையத்தில் இருந்து புறப்படுகிறார்
மாலை 3:25 : சென்னை விமான நிலையம் வந்தடைகிறார்
மாலை 3:30 : எம்ஐ-17 ஹெலிகாப்டரில் பயணம் செய்கிறார்
மாலை 3:50 : ஐஎன்எஸ் அடையாறு ஹெலிபேடுக்கு வந்தடைவார்
மாலை 3:55 : அடையாறில் இருந்து சாலை மார்க்கமாக புறப்படுகிறார்
மாலை 4:00 : சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடைவார்
மாலை 4.00 - 4:20 : சென்னை - கோவை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைப்பார்
மாலை 4:25 :சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படுகிறார்
மாலை 4:40 : மயிலாப்பூரில் உள்ள ராமகிருஷ்ண மடத்திற்கு வருகை தருகிறார்
மாலை 4:45 - 5:45 : ராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறைவு விழாவில் கலந்து கொள்வார்
மாலை 5:45 :ராமகிருஷ்ண மடத்தில் இருந்து புறப்படுகிறார்
மாலை 5:55 : அடையாறு ஹெலிபேட் வந்தடைவார்
மாலை 6:00 : அடையாறு ஹெலிபேடில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்படுவார்
மாலை 6:20 : சென்னை விமான நிலையம் வருகை தருவார்
மாலை 6:25 : சென்னை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக கிளம்புகிறார்
மாலை 6:30 : சென்னை ஆல்ஸ்டோம் கிரிக்கெட் மைதானத்திற்கு வருகை
மாலை 6:30- 7:30 : பல்வேறு அரசு நலத்திட்டங்களை துவக்கி வைத்தல்/ அடிகட்டு நாட்டுதல்
மாலை 7:35 : நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் இருந்து புறப்படுவார்
மாலை 7:40 : சென்னை விமான நிலையத்திற்கு வருகை தருவார்
மாலை 7:45 : சென்னை விமான நிலையத்தில் இருந்து இந்திய விமானப்படை விமானம் மூலம் மைசூருக்கு புறப்படுவார்