Pink Auto: பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம்: அரசு அறிவிப்பு- விண்ணப்பிப்பது எப்படி?
சென்னையில் பெண்களுக்கு 250 சிஎன்ஜி / ஹைபிரிட் ஆட்டோக்கள் வாங்குவதற்கு தலா ரூ. 1 லட்சம் மானியமாக அரசு வழங்கும் என அறிவித்துள்ளது.
பிங்க் ஆட்டோ திட்டத்தின்கீழ் பெண்கள் ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம் மானியம் வழங்கப்படும் என்று அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிப்பதற்கான தகுதி, விண்ணப்பிப்பது எப்படி என்று காணலாம்.
சமூக நலத்துறை சார்பில், சென்னையில் பெண்களுக்கு 250 சிஎன்ஜி / ஹைபிரிட் ஆட்டோக்கள் வாங்குவதற்கு தலா ரூ. 1 லட்சம் மானியமாக அரசு வழங்கும் என அறிவித்துள்ளது.
தேவையான தகுதிகள்
* பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.
* கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
* 25 வயது முதல் 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
* 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
* ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
* சென்னையில் குடியிருக்க வேண்டும்.
விண்ணப்பிப்பது எப்படி?
சென்னை மாவட்ட சமூக நல அலுவலகத்தில் இதற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.
Pink Auto விற்கு விண்ணப்பிக்கலாம் @CMOTamilnadu @mkstalin @mp_saminathan @geethajeevandmk #TNDIPR #TNMediahub #CMMKStalin #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu pic.twitter.com/uSMFDEazA0
— TN DIPR (@TNDIPRNEWS) October 24, 2024
இதற்கான முகவரி:
8வது தளம்,
சிங்காரவேலர் மாளிகை,
சென்னை - 600 001.
250 பெண்களுக்கு 1 லட்ச ரூபாய் மானியம்
இந்தத் திட்டத்தின்கீழ் சென்னையில் உள்ள 250 பெண்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் ஆட்டோ வாங்க மானியமாக வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆட்டோ வாங்க தேவைப்படும் மீதித் தொகைக்கு வங்கிகளுடன் தொடர்பு அளிக்கப்படும்.
சென்னையில் உள்ள தகுதியான பெண் ஓட்டுநர்கள், இத்திட்டத்தின் கீழ் பயனடையலாம். அதற்கு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை சென்னை மாவட்ட சமூக நல அலுவலருக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.