Perarivalan Jailed: 31 ஆண்டுகளாக சிறையில் பேரறிவாளன்.. அற்புதம்மாளுக்கு ஆதரவாக களமிறங்கிய சினிமா இயக்குநர்கள்!
31 ஆண்டுகள் நீடித்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என வெற்றிமாறன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன், இன்றுடன் 31 ஆண்டுகளாக தனது சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார். அவருக்கும், அவரின் தாயார் அற்புதம்மாள் ஆகியோருக்கு ஆதரவாக சமூக ஊடக பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 31 ஆண்டுகள் நீடித்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம். முறையான விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டதிலிருந்து 31 ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்து வருகிறார். நீதிக்கான சமரசமற்ற போரில் அற்புதம்மாள் உடன் துணை நின்று விடுதலையை உறுதி செய்வோம். #31yearsofinjustice #standwitharputhammal என்ற வாசகத்துடன் சமூக ஊடக பிரச்சாரம் இன்று நடைபெற்று வருகிறது.
அன்றாட பிழைப்பிற்கு சிரமப்படுகிறோம்...’ இரட்டை சோகத்தில் மீனவர்கள்!
இதற்கு பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக சினிமா இயக்குநர்கள் வெற்றி மாறன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோர் இது தொடர்பான அறிக்கையை வெளியிட்டு தங்களின் சமூவலைதளத்தில் பகிர்ந்து தங்களின் ஆதரவை தெரிவித்துள்ளனர். 31 ஆண்டுகள் நீடித்த அநீதிக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என வெற்றிமாறன் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
#31YearsOfInjustice #StandWithArputhamAmmal pic.twitter.com/LT7tmCL8FU
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) June 11, 2021
யார் இந்த பேரறிவாளன்?
சென்னை ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, 1991 மே 21-இல் மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்படுகிறார். விடுதலை புலிகளின் தற்கொலைப்படை தாக்குதல் என்கிற அடையாளத்தோடு தொடங்கியது அந்த விசாரணை. இந்தியாவின் உயர் விசாரணை குழுவான சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய குழுக்கள் அமைக்கப்பட்டு, 7 பேர் அடையாளம் காணப்படுகின்றனர். நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் மற்றும் 19 பேர் குற்றவாளிகள் என தீர்மானிக்கிறது சிபிஐ. அப்போது பேரறிவாளனுக்கு 19 வயது. அதற்கு முந்தைய வருடம் வரை பேரறிவாளன், சிறுவன். வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டை தி.க.,வைச் சேர்ந்த குயில்தாசன்-அற்புதம் அம்மாளின் இரண்டாவது மகன்தான் பேரறிவாளன்.
1971 ஜூலை 30-இல் பிறந்த பேரறிவாளன், இயற்கையில் நல்ல அறிவும், அமைதியும் கொண்டவர். இசை மீது தீரா பற்றுக் கொண்டவர். எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன் பொறியியலில் பட்டயப்படிப்பை தேர்வு செய்த அறிவுக்கு அப்போது தெரியாது, அதுதான், தான் செய்த பெரிய தவறு என்பதும், பின்னாளில் அது தான் தனக்கான தண்டனைக்கு காரணமாகப் போகிறது என்பதும். ராஜீவ் கொலை விசாரணைக்கு அமைக்கப்பட்ட புலனாய்வு அலுவலகத்தின் அதிகாரிகள், பேரறிவாளனை தேடி ஜோலார்பேட்டை செல்கின்றனர். அங்கு அவர் இல்லை, பெற்றோர், இருக்கும் இடத்தை தெரிவிக்க, அவர்களுடன் பெரியார் திடலுக்கு வரும் சிபிஐ அதிகாரிகள், ‛இரவு விசாரணையை முடித்து விடியலில் அனுப்பிவிடுகிறோம்...’ என, அங்கிருந்த பேரறிவாளனை அழைத்துச் செல்கின்றனர். இன்றோடு 31 ஆண்டுகள் ஆகிறது. ராஜீவ் கொலைக்கு காரணமான பெல்ட் குண்டை வெடிக்க வைத்த பேட்டரியை வாங்கியது பேரறிவாளன் என்பது தான் சிபிஐ முன் வைத்த குற்றச்சாட்டு. இன்று வரை அதை மறுக்கிறார் பேரறிவாளன்.
ஒன்றல்ல... இரண்டல்ல... இன்றோடு 30 ஆண்டுகள்! பேரறிவாளனும் சிறை கம்பிகளும்!