அறை எண் 1701 - விடிய விடிய காத்திருந்த முக்கிய நிர்வாகி! அழைப்பு வராததால் அப்செட்!
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். அவர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.

மத்திய அமைச்சர் அமித் ஷா தங்கியிருக்கும் ஐடிசி க்ராண்ட் சோழா ஹோட்டலில் முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வம் முன்னதாகவே ரூம் புக் செய்து, அழைப்பார் என்று விடிய விடிய காத்திருந்தும் அழைப்பு இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக நேற்று சென்னை வந்தார். அவர் சென்னை கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார்.
இதையடுத்து இன்று அதிமுக – பாஜக கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைக்காக அவர் தங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்கெனவே எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் சந்திப்பு நடத்திவிட்டு வந்தார். ஆனால் அப்போது கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனவும் மக்கள் பிரச்சினைகளை பற்றியே பேசினேன் எனவும் இபிஎஸ் தெரிவித்திருந்தார்.
அதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் சட்டப்பேரவையிலேயே அடுத்த முறை அமித்ஷாவை சந்தித்தால் நீட் விவகாரம் பற்றி பேச வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
இது இப்படியிருக்க தற்போது தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை பற்றிய செய்திதான் ஹாட் டாப்பிக்காக இருக்கிறது. அதிமுகவை கூட்டணியில் இணைக்க பாஜக எந்த அளவுக்கும் இறங்கும் என்ற அளவில் அக்கட்சி செயல்பட்டு வருகிறது. இதற்காகத்தான் இபிஎஸ் கோரிக்கையை ஏற்று பாஜகவின் மாநிலத் தலைவரை தூக்கும் அளவுக்கு பாஜக இறங்கியுள்ளது என்ற பேச்சும் அடிபடுகிறது.
பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு தேர்தலை அக்கட்சி அறிவித்துள்ளது. அதில் யார் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற குழப்பமும் நிலவி வருகிறது.
இந்நிலையில் அதிமுக கூட்டணியை இறுதி செய்ய அமித்ஷா கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியுள்ளார். இபிஎஸ் மற்றும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் இன்று அமித்ஷாவை சந்தித்து கூட்டணியை இறுதி செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது ஒருபக்கம் இருந்தாலும் பாஜக மறுபக்கம் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமமுகவுடன் கூட்டணி வைத்து வருகிறது. அமித்ஷா ஓபிஎஸ் மற்றும் டிடிவியுடன் ஒன்று சேர வேண்டும் என வலியுறுத்தியதாகவும் அதற்கு இபிஎஸ் வளைந்து கொடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.
சரி அதை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றுதான் தற்போது பாஜக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க காத்திருக்கிறது என விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அமித்ஷா தங்கியிருக்கும் அதே நட்சத்திர ஓட்டலில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்சும் ரூம் எடுத்து தங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அறை எண் 1701ல் ஏற்கெனவே ரூம் புக் செய்து விடிய விடிய காத்திருந்தும் மத்திய அமைச்சர் அமித்ஷாவிடம் இருந்து அழைப்பு வராததால் ஓபிஎஸ் அப்செட்டில் இருப்பதாக தெரிகிறது.
யார் யாரை சந்தித்து எப்போது கூட்டணி இறுதியாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்தார்.





















