மேலும் அறிய

Metro Trains: சென்னை மெட்ரோவில் டிக்கெட் எடுப்பதில் சிக்கல்.. பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு

சென்னையில் மெட்ரோ ரயில்கள் முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக திகழ்கிறது. செல்ல வேண்டிய இடங்களுக்கு விரைந்து செல்ல முடியும் என்பதால் பலரின் முதன்மை விருப்பமாக மெட்ரோ ரயில்கள் உள்ளது. 

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய மொபைல் வழியாக டிக்கெட் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் மெட்ரோ ரயில்கள் முக்கிய போக்குவரத்து சாதனங்களில் ஒன்றாக திகழ்கிறது. விமான நிலையம் முதல் விம்கோ நகர் வரையும் இருவழித்தடங்களில் இயக்கப்படும் மெட்ரோ ரயில்களில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான உள்ளூர் மற்றும் வெளியூர் பயணிகள் பயணிக்கின்றனர். செல்ல வேண்டிய இடங்களுக்கு எந்தவித சிரமுமின்றி விரைந்து செல்ல முடியும் என்பதால் பலரின் முதன்மை விருப்பமாக மெட்ரோ ரயில்கள் உள்ளது. 

இப்படியான நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் மூலம் டிக்கெட் பெறும் வசதி அறிமுகம் செய்யப்பட்டது. இதேபோல் க்யூ ஆர் கோடு மூலம் கட்டணம் செலுத்தி டிக்கெட் பெறும் முறையும் நடைமுறையில் இருந்தது. இதனால் டிக்கெட் கவுண்டர்களில் பயணிகள் காத்திருக்கும் நிலைக்கு முடிவு கட்டப்பட்டது. இந்த வசதிகள் பயணிகள் இடையே மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் மெட்ரோ நிர்வாகம் தற்போது வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”மொபைல் பயன்பாடு உள்ளிட்ட ஆன்லைன் டிக்கெட்டுகள் பெறுவது தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக தற்சமயம் வேலை செய்யவில்லை. எனவே பயணிகள் மெட்ரோ ரயில் நிலைய கவுன்டர்களில் டிக்கெட் வாங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். கோளாறை சீரமைக்கும் பணிகள் விரைவாக நடந்து வருகின்றன. பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு மெட்ரோ நிர்வாகம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று விடுமுறை முடிந்து அலுவலகங்கள், பள்ளி மற்றும் கல்லூரி, பேருந்து மற்றும் ரயில் நிலையங்களுக்கு செல்லும் பயணிகள் எண்ணிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும் என்பதால் தங்கள் பயணங்களை திட்டமிட்டு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!

Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!

Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை

ABP Premium

வீடியோ

DMDK Alliance DMK | Sunita williams Return | நேரலை செய்யும் NASA ஆளே மாறிப்போன சுனிதா மாணவர்கள் நெகிழ்ச்சி சம்பவம்Nagpur Violence | பற்றி எரியும் மகாராஷ்டிரா இந்துக்கள் இஸ்லாமியர்கள் மோதல் படத்தால் வந்த பஞ்சாயத்துADMK Sengottaiyan: சுத்துப்போட்ட எம்எல்ஏ-க்கள்..! செங்கோட்டையனுக்கு செக்! எடப்பாடி பக்கா ஸ்கெட்ச்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
TN Govt: ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் ஊதியம் கிடையாது… பணி நீக்கம்- தமிழக அரசு எச்சரிக்கை!
Trump Vs Canada: கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
கனடாவை காரித் துப்பிய ட்ரம்ப்.. எதிர் வரி போட்டதுக்காக இப்படியா பேசுறது.?
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
பள்ளி மாணவர்களுக்கு ஆங்கிலம், போட்டித் தேர்வு பயிற்சி, ஊக்கத்தொகை- அறிவிப்புகளை குவித்த சென்னை பட்ஜெட்!
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Sunita Williams: அன்று அவமானம்? இன்று இந்தியாவின் மகளா? கொலை, மோடிக்கும் - சுனிதா வில்லியம்ஸ் குடும்பத்திற்குமான பகை
Senthil Balaji: அன்று துரைமுருகன், இன்று செந்தில் பாலாஜி? இரவோடு இரவாக டெல்லி விசிட், பாஜகவிடம் சரண்டர்?

Gold Rate Hike: உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
உன் ஆட்டத்த நிறுத்தவே மாட்டியா.?! புதிய உச்சத்தை நோக்கி உயரத் தொடங்கிய தங்கம்...
Sunita Williams: தரையிறங்கியதுமே பிரச்னை..! 45 நாட்கள், உடலில் இவ்வளவு மாற்றங்களா? சுனிதாவிற்கான சவால்கள்

Sunita Williams Return: 286 நாட்கள் காத்திருப்பு, 17 மணி நேர பயணம், கடலில் தரையிறங்கிய நொடிகள், பூமி திரும்பிய  சுனிதா வில்லியம்ஸ்

Embed widget