Omni Bus Strike: பேச்சுவார்த்தையில் உடன்பாடு; பேருந்துகள் ஓடும் - போராட்டத்தை வாபஸ் பெற்ற ஆம்னி பேருந்து உரிமையாளர்கள்
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக தென் மாநில ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் போராட்டம் வாபஸ் பெறுவதாக ஆம்னி பேருந்து கூட்டமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு போக்குவரத்து அதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் இந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.
இன்றுடன் விடுமுறை நாள் முடிவுக்கு வருகிறது. இதனால் சொந்த ஊர்களுக்கு சென்ற மக்கள் இன்று சென்னை திரும்ப உள்ளனர். இந்நிலையில் இன்று மாலை 6 மணி முதல் ஆம்னி பேருந்துகள் இயங்காது என தென் மாநில ஆம்னி பேருந்துகள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகளின் கூடுதல் கட்டணம் வசூளிக்கப்படுவதாக கூறி 102 ஆம்னி பேருந்துகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. அந்த பேருந்துகள் அனைத்தையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் ஆம்னி பேருந்த்களுக்கு கட்டண நிர்ணயம் இல்லாத போதிலும் மக்கள் எந்த விதத்திலும் பாதிக்காத வண்ணம் கட்டணம் வசூல் செய்யப்பட்டு வருவதாகவும் கூறி இந்த திடீர் அறிவிப்பை வெளியிட்டுனர். அதனை தொடர்ந்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் அழைப்பு விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக ஏபிபி நாடுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்த அமைச்சர் சிவசங்கர், “
வெளி மாநில பதிவு எண் கொண்ட வாகனங்களை இங்கு இயக்கக் கூடாது என அறிவுரை வழங்கப்பட்டது. அதையும் மீறி சிலர் பேருந்துகளை இயக்கி வருகின்றனர். அதேபோல் விடுமுறை நாட்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கக் கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் வர இருக்கும் நிலையில் இந்த பிரச்சனை எழ கூடாது என்பதற்காக இப்படி சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.