Coromandel Express Accident: ஒடிசா ரயில் விபத்து.. தமிழ்நாட்டில் பயணிகள் விவரம் அறிய அவசரகால தொலைபேசி எண்கள் அறிவிப்பு..!
நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விவரங்களை அறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக விவரங்களை அறிய சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் அவசர கட்டுப்பாட்டு அறை எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 044- 25330952, 044- 25330953, 044- 25354771, 044- 25354146 என்ற எண்கள் மூலம் தொடர்பு கொண்டு விபத்து குறித்த தகவல்களை சம்பந்தப்பட்ட ரயில்களில் பயணித்த அறிந்து கொள்ளலாம். இதேபோல் சென்னை எழிலகத்தில் ரயிலில் பயணித்த பயணிகளின் குடும்பத்தினருக்கு உதவ மாநில சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.1070, 044 - 28593990, 9445869848, 9445869843 ஆகிய எண்கள் வழியாகவும் பயணிகளின் தகவலை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் காட்பாடியில் அமைக்கப்பட்டுள்ள அவசர கட்டுப்பாட்டு அறைக்கு 9498651927, ஜோலார்பேட்டை அவசர கட்டுப்பாட்டு அறை 7708061811 ஆகிய எண்கள் மூலம் தகவல் பெறலாம். இதற்கிடையில் இன்று காலை 8 மணியளவில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள அவசர கட்டுப்பாட்டு அறைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று பணிகளை பார்வையிடுவதோடு செய்தியாளர்களையும் சந்திக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக ஒடிசா ரயில் விபத்து காரணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிகழ்ச்சிகள் அனைத்து ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.