மேலும் அறிய

ஊதிய சிக்கல்! செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதா? - அன்புமணி ராமதாஸ்

2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம்  14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

தமிழ்நாட்டில்தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு சுரண்டுகிறது என்றும் உச்சநீதிமன்ற கண்டனத்திற்குப் பிறகாவது தொகுப்பூதிய  செவிலியர்களுக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என பா.ம.க.  தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

’’தமிழ்நாட்டில்  தொகுப்பூதியம் பெறும் ஒப்பந்த செவிலியர்களை தமிழக அரசு சுரண்டுகிறது.  செவிலியர்களை அளவுக்கு அதிகமாக உழைப்புச் சுரண்டல் செய்கிறீகள். ஒப்பந்த  செவிலியர்களை நிரந்தர செவிலியர்களாக நியமிக்கவும் மறுக்கிறீர்கள். அவர்களின் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கவும் மறுக்கிறீர்கள்:” என்று தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருக்கிறது. சமூகநீதி பேசும் திமுக அரசு செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதற்காக  வெட்கித் தலைகுனிய வேண்டும்.

தமிழக மருத்துவத்துறையில் பத்தாண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட தொகுப்பூதிய செவிலியர்களுக்கு நிரந்தர செவிலியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்று கடந்த ஏப்ரல் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்த நிலையில், அதை செயல்படுத்த வேண்டிய அரசு,  அதற்கு பதிலாக உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. அந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையின் போது தான்  உச்சநீதிமன்றம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளது.

செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதாக  உச்சநீதிமன்றம் கூறியிருப்பது முற்றிலும் சரியானது.  2015-ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம்  14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம்  போட்டித்தேர்வு நடத்தி தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிலைப்பு செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள  8 ஆயிரம் செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை.

நிரந்தர செவிலியர்கள் செய்யும் அதே பணியைத் தான் இவர்களும் செய்கின்றனர். ஆனால், நிரந்தர செவிலியர்களுக்கு மாதம்  ரூ.62 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் நிலையில்,  தொகுப்பூதிய செவிலியர்களுக்கு ரூ.18 ஆயிரம் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுகிறது. நிரந்தர செவிலியர்களை விட தொகுப்பூதிய செவிலியர்கள் குறைந்த பணியையே செய்வதாகக் கூறி அவர்களின் ஊதியத்தை உயர்த்தவும், பணி நிலைப்பு வழங்கவும் திமுக அரசு மறுத்து வந்தது. பின்னர் சென்னை உயர்நீதிமன்ற ஆணைப்படி, ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள்  பார்த்திபன், பாரதிதாசன் ஆகியோர் தொகுப்பூதிய செவிலியர்களின் பணியை ஆய்வு செய்து, அவர்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என அறிக்கை அளித்த பிறகு தான் அவர்களுக்கு சம ஊதியம் வழங்க உயர்நீதிமன்றம் ஆணையிட்டடது. ஆனால், அதைக் கூட செய்ய திமுக அரசு மறுக்கிறது.

சமூகநீதி சமூகநீதி என்று பேசும் திமுக அரசு, செயல்பாட்டில் அதைக் கடைபிடிப்பதில்லை.  திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதுவரை 33,987 பேருக்கு மருத்துவத் துறையில் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டிருப்பதாக அத்துறையின் அமைச்சர் கூறி வருகிறார். ஆனால், அவர்களில் 6.977 பேர் மட்டும் தான்  மருத்துவத் தேர்வாணையம் மூலம்  தேர்ந்தெடுக்கப்பட நிரந்தரப் பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள சுமார் 27 ஆயிரம் பேரும் தற்காலிக மற்றும் ஒப்பந்தப் பணியாளர்கள் ஆவர். இதுவா சமூகநீதி?

செவிலியர்களின் உழைப்பைச் சுரண்டுவதாக உச்சநீதிமன்றமே கண்டனம் தெரிவித்திருக்கும் நிலையில், தமிழக அரசு அதன் தவறை ஒத்துக் கொண்டு அவர்களை பணி நிலைப்பு  அல்லது  சம வேலைக்கு  சம ஊதியம் வழங்கியிருக்க வேண்டும். ஆனால், சமூகநீதி என்பதற்கான பொருள் திமுக அரசுக்கு தெரியாது என்பதால் தான் அதைச் செய்யாமல் மேல்முறையீட்டு வழக்கை தொடர்ந்து நடத்துகிறது. இப்போதாவது தமது உழைப்புச் சுரண்டலையும்,  சமூக அநீதியையும் ஒப்புக் கொண்டு,  தொகுப்பூதிய  செவிலியர்கள் அனைவருக்கும் சம ஊதியம் வழங்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
வாடகை வீட்டில் சிக்கலா ? இனி கவலை வேண்டாம்..தமிழக அரசு எடுக்கப் போகும் அதிரடி முடிவு
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
ரேஷன் அட்டைதாரர்களுக்கு எச்சரிக்கை: ஆதார் இணைக்காவிட்டால் மாதாந்திர மானியம் நிறுத்தம்!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
புதுச்சேரியில் கல்லூரி மாணவர்களுக்கு விரைவில் இலவசப் பேருந்து சேவை - அமைச்சர் நமச்சிவாயம் அறிவிப்பு!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!
மெட்ரோவுக்கு மேலே பிரம்மாண்ட பாலம்... நடுவில் இப்படி ஒரு பிரச்னையா? அதிகாரிகளின் அதிரடி பிளான்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
உழைக்கும் வர்க்கத்தின் தோழன்... ஹெவி ஃபெர்பார்மன்ஸ் பண்ணும் TVS XL 100 Heavy Duty வாங்கலாமா?
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
IND vs SL 1st Test: சுருண்ட இலங்கை.. இமாலய இலக்கை நிர்ணயிக்குமா இந்தியா? வெற்றி வசப்படுமா?
Hybrid SUV: இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
இனி பட்ஜெட்டில் ஸ்ட்ராங்கான ஹைப்ரிட்னா நாங்க தான்..! பட்டையை கிளப்பும் 3 எஸ்யுவிக்கள் - முழு விவரம்
Trump Threatens Oman: “குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்
“குறுக்கால வந்தா குண்டுமழையால சின்னாபின்னமாக்குவோம்"; ஓமனுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை; எதற்காக.?
Embed widget