மேலும் அறிய

செவிலியர் போராட்டம்: முதல்வர் ஜோசப் விஜய் வில்லனா? - தினகரன் கேள்வி

பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்துச் சென்று செவிலியர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்திருப்பது அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகம் - டிடிவி தினகரன்

நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது செய்யப்பட்டதற்கு கடும் கண்டனத்தை தெரிவிப்பதாக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:

பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த செவிலியர்கள் நேற்று இரவோடு இரவாக காவல்துறையினரால் வலுக்கட்டாயமாகக் கைது செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. தங்களின் உரிமைகளுக்காகப் நியாயமான முறையில் போராடி வரும் செவிலியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டிய தவெக அரசு, காவல்துறையை ஏவல்துறையாக மாற்றி, போராட்டக் களத்தில் மின்சாரத்தைத் துண்டித்தும், பந்தல்களை அகற்றியும், போராட்டத்தில் ஈடுபட்ட செவிலியர்களுக்குக் காயம் ஏற்படும் அளவிற்கு அவர்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றும் அராஜகப் போக்கில் ஈடுபட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

முறையான முன் அனுமதி பெற்று அமைதியான முறையில் போராடிக் கொண்டிருந்த செவிலியர்களின் பிரதிநிதிகளைப் பேச்சுவார்த்தை எனும் பெயரில் அழைத்துச் சென்று, அவர்களைக் கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்திருந்தது செவிலியர்களுக்கு தவெக அரசு இழைத்திருக்கும் மாபெரும் துரோகமாகும். தேர்தலுக்கு முன்பு போராட்டக் களத்திற்குச் சென்று ஆதரவு தெரிவித்து, தங்களது தேர்தல் அறிக்கையில் செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்வோம் என்று வாக்குறுதி அளித்துவிட்டு, தற்போது ஆட்சிக்கு வந்ததும் அதே கோரிக்கையை முன்வைத்துப் போராடி வரும் செவிலியர்களைக் காவல்துறையை வைத்து அடக்கி ஒடுக்குவதும், போராட்டக் களத்தில் இருந்த செவிலியர்களைப் பார்த்து காவலர் ஒருவரே, “வேண்டாம், உங்க உயிர் முக்கியம்” என மிரட்டுவதும், சினிமாவில் தான் ஹீரோ; நிஜத்தில் தான் ஒரு வில்லன் என்பதை முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவிக்க முற்படுகிறாரா? என்ற கேள்வியை எழுப்புகிறது.

எனவே, கொரோனா போன்ற பெருந்தொற்றுக் காலத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்களின் உயிரைக் காக்க முன்களத்தில் நின்று பணியாற்றிய செவிலியர்களின் பணிப் பாதுகாப்பு, பணி நிரந்தரம், சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளைப் பேச்சுவார்த்தையின் மூலம் நிறைவேற்றிட முன்வர வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை அரசு  மருத்துவமனையின் சன்னல்களில் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு !
மதுரை அரசு  மருத்துவமனையின் சன்னல்களில் கொசுவலை பொருத்தப்பட்டுள்ளதா? - நீதிமன்றம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு !
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Tamilnadu Power Cut: தமிழகத்தில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை? - மின் வாரியம் லிஸ்ட் இதோ
தமிழகத்தில் நாளை (13-10-2026) எங்கெல்லாம் முழு நேர மின் தடை? - மின் வாரியம் லிஸ்ட் இதோ
TN Weather Update: அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை.. சென்னை, டெல்டாவில் சம்பவம் இருக்கு.. டெல்டா வெதர்மேன்!
TN Weather Update: அடுத்த 72 மணி நேரத்தில் வடகிழக்கு பருவமழை.. சென்னை, டெல்டாவில் சம்பவம் இருக்கு.. டெல்டா வெதர்மேன்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்
Abhijeet Dipke : ”பாட்டி இறந்ததை சொல்லலயா?”பொய் சொன்னாரா அபிஜீத் திப்கேவீடியோ ஆதாரத்துடன் வந்த போலீஸ்
Car bike accident : மொத்தமாக பறந்த பைக்! நூலிழையில் தப்பிய இளைஞர்! பகீர் சிசிடிவி காட்சி
Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
ஒரே சார்ஜில் 625 கி.மீட்டர் மைலேஜ்... அறிமுகமாகியது வால்வோவின் புதிய Volvo EX90 மின்சார கார்! விலை எம்புட்டு?
’சத்துணவிற்கான கொண்டக்கடலை, பச்சை பயிறு கொள்முதலில் சுணக்கம்’ கேக் வாங்க டெண்டர் விட்ட தவெக அரசு..!
’சத்துணவிற்கான கொண்டக்கடலை கொள்முதலில் சுணக்கம்’ கேக் டெண்டருக்கு துரிதம்..!
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
SK 27: சிவகார்த்திகேயன் படத்திற்கு இசையமைக்கும் சாய் அபியங்கர்..! அப்போ ப்ளாக்பஸ்டர் கன்ஃபர்மா?
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
மனுக்களால் திணறிய ஆட்சியரகம்: ஒரே நாளில் குவிந்த 380 கோரிக்கைகள்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
திமுக தோத்ததுக்கு SIR காரணமில்ல.. ஸ்டாலினே சொல்லிட்டாரு.. வெளுத்து வாங்கிய மாணிக்கம் தாகூர்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
நள்ளிரவில் ஆசை ஆசையாக வந்த அருள் பாண்டி.. அதற்கு நோ சொன்ன கள்ளக்காதலி.. இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
Embed widget