Watch Video: திடீரென மயங்கி விழுந்த சீமான்.. விரைந்து வந்த 108! செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு!
வெயிலின் தாக்கம் காரணமாக சீமான் மயங்கி விழுந்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் தகவல் கூறியுள்ளனர்
![Watch Video: திடீரென மயங்கி விழுந்த சீமான்.. விரைந்து வந்த 108! செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு! ntk leader Seeman suddenly fainted at the press conference Watch Video: திடீரென மயங்கி விழுந்த சீமான்.. விரைந்து வந்த 108! செய்தியாளர் சந்திப்பில் பரபரப்பு!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/02/2cc33dbc3bea343fcfee752ae8be7063_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நாம் தமிழர் கட்சியின் சீமான், திருவொற்றியூரில் செய்தியாளர் சந்திப்பின்போது திடீரென மயங்கி விழுந்தார். அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தார். இதனைத்தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் அவர் பங்கேற்றார். சந்திப்பு முடியும் தருவாயில் சீமான் தீடீரென மயங்கி விழுந்தார். உடனே 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு முதலுலதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, அதன்பிறகு அவர் இயல்பான நிலைக்கு திரும்பியதை தொடர்ந்து வீடு திரும்பினார். வெயிலின் தாக்கம் காரணமாக சீமான் மயங்கி விழுந்ததாக நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூறியுள்ளனர். சீமான் மயங்கி விழுந்த சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நேரலை: 02-04-2022 திருவொற்றியூர், அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிப்பு - பாதிக்கப்பட்ட மக்களுடன் https://t.co/AIlmpfAc5d
— சீமான் (@SeemanOfficial) April 2, 2022
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)