மேலும் அறிய

மக்கள் செய்த துரோகம்.. அமைச்சரை ஓடவிட்டு அடிக்கணும்.. இடும்பாவனம் கார்த்திக் சர்ச்சை பேச்சு

நாம் தமிழர் கட்சி வாக்குக்காக பேசவில்லை. மக்கள் நல்வாழ்வுக்காக களத்தில் வலியை தாங்கிக் கொண்டு நிற்கிறோம். ஆனால் மக்கள் எவ்வளவு பெரிய துரோகம் செய்து விட்டார்கள் என இடும்பாவனம் கார்த்திக் பேசியுள்ளார்.

சீமான் யார் என கேட்ட அமைச்சர் விஜய் பாலாஜியை ஓட விட்டு அடித்திருக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் நிர்வாகி இடும்பாவனம் கார்த்திக் பேசியிருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. 

கோவையில் போதை பழக்கம் பற்றி தகவல் சொன்னதால் கல்லூரி மாணவன் அமுதன் கொலை செய்யப்பட்டது, கர்நாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டது உள்ளிட்ட நிகழ்வுகளை கண்டித்து நாம் தமிழர் கட்சி சார்பில் கோயம்புத்தூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய அக்கட்சியின் மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் இடும்பாவனம் கார்த்திக் தவெக அரசையும், முதலமைச்சர் விஜயையும் கடுமையாக சாடினார். 

அவர் பேசுகையில், போதையின் பிடியில் மாணவர்கள் சிக்கியுள்ளார். வீதிக்கு வீதி தமிழ்நாட்டில் டாஸ்மாக் உள்ளது. அரை நூற்றாண்டுகளாக திமுக, அதிமுக மாறி மாறி ஆண்டும் டாஸ்மாக் கடைகளை மூடவில்லை. இப்போது பொறுப்பேற்ற தவெக அரசும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மது விலக்கு பற்றியும் பேசவில்லை. மகாத்மா காந்தி மது குடிப்பது பழக்க வழக்கம் அல்ல.. நோய் என சொன்னார். தமிழ்நாட்டை ஆண்ட, ஆளும் அரசுகள் போதையின் பிடியில் இருந்து மாணவர்கள், இளைஞர்களை மீட்டெடுப்போம் என சொன்னார்கள். 

போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும்

தவெக ஆட்சிக்கு வந்ததும் 717, ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின் போன்றோர் 500 கடைகளை மூடினார்கள். எனினும் மதுவின் விற்பனை குறையவில்லை. போதை ஒழிப்பை எப்படி செய்வீர்கள். விழிப்புணர்வு ஏற்படுத்துவதை விட்டுவிட்டு போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் என பேசினார். எதையும் செய்யாமல் முதலமைச்சர் விஜய் மராத்தானில் ஓடி போதையை விடு விளையாட்டை எடு என சொல்கிறார். போதையை போட்டு தான் சட்டமன்றத்தில் உட்கார்ந்திருக்கிறார்கள். 

ஐபிஎல் மேட்ச் பார்க்கபோன அமைச்சர் சரத்குமார் பொடியை இடித்துக்கொண்டிருக்கிறார். இப்போது விளக்கம் கேட்டால் குழந்தைக்கு காய்ச்சல் என சொல்கிறார். ஊருக்கே அவர் போதையை போட்டிருக்கிறார் என தெரியும் என கூறினார். 

மக்கள் துரோகம் செஞ்சிட்டாங்க

தொடர்ந்து பேசிய அவர், நாம் தமிழர் கட்சி வாக்குக்காக பேசவில்லை. மக்கள் நல்வாழ்வுக்காக களத்தில் வலியை தாங்கிக் கொண்டு நிற்கிறோம். ஆனால் மக்கள் எவ்வளவு பெரிய துரோகம் செய்து விட்டார்கள்.ஒரு அமைச்சர் சீமான் என்றால் யார் என கேட்கிறார். எவ்வளவு திமிரு, கொழுப்பு அவருக்கு இருக்கும். அந்த அமைச்சரை ஓட விட்டு அடித்திருக்க வேண்டும். அவ்வளவு ஆத்திரம் வருகிறது. அவர் சாகும் வரை அமைச்சராகவா இருக்கப் போகிறாரா?.. இல்லையென்றால் வாழ்நாள் முழுதும் விஜய் தான் முதல்வரா இந்த தேர்தலில் மக்கள் துரோகம் செய்து விட்டார்கள். 16 ஆண்டுகளாக நாங்கள் விலை போகாமல் மக்களுக்கு உண்மையாக இருந்தோம். எதிலும் சமரசம் செய்யவில்லை என இடும்பாவனம் கார்த்திக் பேசினார். 

யார் அந்த அமைச்சர்?

அவர் குறிப்பிட்டு பேசிய அமைச்சர் விஜய் பாலாஜி ஆவார். கடந்த ஜூலை 22ம் தேதி இந்த நிகழ்வு நடைபெற்றது. சேலத்தில் அம்பேத்கர் சிலை அமைப்பது குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்ட அறிக்கை தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கைத்தறி துறை அமைச்சர் விஜய் பாலாஜி சீமான்னா யாருணா என்று கேள்வி எழுப்பியதோடு, எம்.எல்.ஏ, எம்.பி கேட்டால் கூட பதில் சொல்லலாம் சீமான் யார்? என பதில் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement

தலைப்பு செய்திகள்

இன்றைக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
இன்றைக்கு காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
மக்கள் செய்த துரோகம்.. அமைச்சரை ஓடவிட்டு அடிக்கணும்.. இடும்பாவனம் கார்த்திக் சர்ச்சை பேச்சு
மக்கள் செய்த துரோகம்.. அமைச்சரை ஓடவிட்டு அடிக்கணும்.. இடும்பாவனம் கார்த்திக் சர்ச்சை பேச்சு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
CM Vijay: ”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
”எல்லாம் கொடுக்கிறேன், லஞ்சம் மட்டும் வாங்காதீங்க” MLA-க்களுக்கு கார் அறிவித்து CM விஜய் கோரிக்கை
Embed widget