மேலும் அறிய

Central Govt On NLC: அப்ப விவசாயம்..! நெய்வேலியில் என்.எல்.சி விரிவாக்கம் தொடரும், இன்னும் 2600 ஏக்கர் தேவை - மத்திய அரசு திட்டவட்டம்..!

நெய்வேலியில் என்.எல்.சியின் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தும் திட்டம் இல்லை என, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நெய்வேலியில் என்.எல்.சியின் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தும் திட்டம் இல்லை என, மத்திய அரசு நாடாளுமன்றத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

”நெற்பயிர்கள்  அறுவடைக்கு தயாராக இருந்த நிலங்களில் இயந்திரங்களை இறக்கி, என்.எல்.சி நிறுவனம் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை மேற்கொண்டதை,  அவ்வளவு எளிதாக தமிழக மக்கள் யாரும் மறந்து இருக்க மட்டார்கள். நீதிமன்றமும் கூட கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தது. இந்நிலையில் நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை நிறுத்தும் திட்டம் இல்லை எனவும், கூடுதல் நிலம் தேவைப்படுவதாகவும் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.”

அன்புமணி ராமதாஸ் கேள்வி:

”பூஜ்ஜிய கார்பன் உமிழ்வை அடைவதற்கான லட்சிய இலக்கைக் கருத்தில் கொண்டு, நெய்வேலியில் உள்ள இரண்டாவது சுரங்கத்தை விரிவாக்கம் செய்யும் முடிவை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெறுமா என” மாநிலங்களவையில் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பினார். 

மத்திய அரசு திட்டவட்டம்:

அன்புமணியின் கேள்விக்கு நிலக்கரி மற்றும் சுரங்க மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், நெய்வேலியில் உள்ள இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தை விரிவாக்கம் செய்யும் திட்டத்த திரும்பப் பெறும் திட்டம் இல்லை. இரண்டாவது சுரங்கம் உள்ளிட்ட அனைத்து சுரங்கங்களும், உற்பத்தி நிலையங்களும் தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து தென் மாநிலங்களுக்கும் மின்சாரம் வழங்கும் நோக்கில் செயல்படுகின்றன. எனவே, நெய்வேலியில் தற்போதுள்ள சுரங்கங்கள் மற்றும் உற்பத்தி நிலையங்கள் தொடர்ந்து இயங்கும்” என விளக்கமளித்துள்ளார்.

சி.வி. சண்முகம் கேள்வி 

இதனிடையே,  நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் இன்னும் சில சுரங்க நடவடிக்கைகளுக்காக அருகிலுள்ள பகுதிகளை கையகப்படுத்துகிறது என்பது உண்மையா?  என அதிமுக உறுப்பினர் சி. வி. சண்முகம் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார்.

”2,600 ஏக்கர் தேவை”

சி.வி. சண்முகத்தின் கேள்விக்கும் நிலக்கரி மற்றும் சுரங்க மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில் ”சுரங்க விரிவாக்க பணிகளுக்காக அடுத்த 5 ஆண்டுகளில் 1054 ஹெக்டேர் அதாவது 2604.4 ஏக்கர் நிலம் தேவைப்படுகிறது. தொடர்ச்சியான மின்சார உற்பத்திக்காக நிலம் கையகப்படுத்தப்பட்டு வருகிறது.  இது மாநிலத்தின் முன்னேற்றத்திற்கு பங்களிக்கும். நில கையகப்படுத்தும் சட்டத்தின் அடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தால், சுரங்க விரிவாக்கத்திற்கான நிலம் கையகப்படுத்தப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பு வழங்குவதற்கான முழு முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு மாற்றப்பட்ட பலன்களை பெற்றுக்கொள்ளவும் நில உரிமையாளர்கள் ஒப்புதல் தெரிவித்து வருகின்றனர்.  விவசாய நிலத்திற்காக நாட்டிலேயே அதிக இழப்பீடு வழங்கும் நிறுவனம் என்.எல்.சி தான். சுரங்க விரிவாக்க பணிகளுக்காக யாரேனும் ஒரு ஏக்கர் நிலம் மற்றும் வீட்டை இழந்தால், அவருக்கு ரூ.75 லட்சம் இழப்பீடாக வழங்கப்படுகிறது” என அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

அடுத்து என்ன?

என்.எல்.சி சுரங்க விரிவாக்க பணிகள் திரும்பப் பெறப்படாது, கூடுதல் நிலங்கள் கைப்பற்றப்படும் என மத்திய அரசு திட்டடமாக தெரிவித்து இருப்பது விவசாயிகள் இடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே அளித்த வாக்குறுதிபடியே பலருக்கு அரசு வேலைவாய்ப்பையோ உரிய இழப்பீடையோ வழங்கவில்லை என நிலம் வழங்கியவர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

விவசாயம் பாதிப்பு:

ஏற்கனவே முப்போகும் விளையும் நிலங்களை கையக்கப்படுத்தி தான், நெய்வேலி நிலக்கரி சுரங்க விரிவாக்க பணிகளை என்.எல்.சி நிர்வாகம் செய்து வருகிறது. அண்மையில் கூட நெற்பயிர் அறுவடைக்கு தயாராக இருந்த நிலங்களில் இயந்திரங்களை இறக்கி பணிகள் முன்னெடுத்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி கடும் கண்டனங்கள் குவிந்தன.  இந்த செயலை கடுமையாக விமர்சித்த உயர்நீதிமன்றம் நிலத்தை தோண்டி, நிலக்கரி, மீத்தேன் ஆகியவற்றை எடுத்துக்கொண்டால் விவசாயத்தில் ஏற்படும் வெற்றிடத்தை எப்படி தான் நிரப்புவது. அரிசி மற்றும் காய்கறிக்காக அடித்துக்கொள்வதை நம் தலைமுறையிலேயே பார்க்க தான் போகிறோம் எனவும் எச்சரித்தது.   இந்நிலையில் விரிவாக்கத்திற்காக புதியதாக கையகப்படுத்தும் நிலங்களும் விவசாய மற்றும் குடியிருப்பு பகுதிகளாக தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், நெய்வேலி சுற்றுவட்டார பகுதியில் இனி விவசாயம் என்பதே அரிதான தொழிலாக மாற வாய்ப்புள்ளது. 

போராட்டங்கள் தொடருமா?

கடந்த பல ஆண்டுகளாகவே என்.எல்.சிக்கு எதிராக விவசாய அமைப்புகள் மற்றும் பாமக கடுமையாக போராடி வருகின்றன. விளைநிலங்களை பறித்துக்கொண்டு உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் அகதிகளாக மாற்றுவதாக குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. விவசாயம் சீரழிக்கப்பட்டு அப்பகுதியே பாலைவனமாக மாற்றப்படுவதாகவும், முப்போகும் விளையும் நிலங்களை அழித்து சுரங்க பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை எனவும் அன்புமணி ராமதாஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் விரிவாக்க பணிகள் தொடரும் என மத்திய அரசு கூறி இருப்பதால், பாமக மற்றும் விவசாய அமைப்புகள் போராட்டங்களை முன்னெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

CSK vs RR LIVE Score: ஜெய்ஸ்வால் அவுட்; ஆரவாரத்தில் ரசிகர்கள்; முதல் விக்கெட்டினை கைப்பற்றிய சென்னை!
CSK vs RR LIVE Score: ஜெய்ஸ்வால் அவுட்; ஆரவாரத்தில் ரசிகர்கள்; முதல் விக்கெட்டினை கைப்பற்றிய சென்னை!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar asset | Mamata Banerjee Dance | முரசு கொட்டியவுடன் மேடையில் VIBE-ஆன மம்தா வைரலாகும் வீடியோRevanth Reddy Playing Football | ”அரசியலில் மட்டுமல்ல கால்பந்திலும் பிஸ்தா” அசத்தும் ரேவந்த் ரெட்டிEdappadi Palanisamy | அடேங்கப்பா..70 கிலோ கேக்கா?பிறந்தநாள் கொண்டாட்டத்தில் EPS  தொண்டர்கள் ஆரவாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CSK vs RR LIVE Score: ஜெய்ஸ்வால் அவுட்; ஆரவாரத்தில் ரசிகர்கள்; முதல் விக்கெட்டினை கைப்பற்றிய சென்னை!
CSK vs RR LIVE Score: ஜெய்ஸ்வால் அவுட்; ஆரவாரத்தில் ரசிகர்கள்; முதல் விக்கெட்டினை கைப்பற்றிய சென்னை!
"சர்ப்ரைஸ் இருக்கு.. மைதானத்தில் காத்திருங்க" ரசிகர்களுக்கு சிஎஸ்கே நிர்வாகம் வேண்டுகோள்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
TN Headlines: சவுக்கு சங்கர் மீது பாய்ந்த குண்டாஸ்! பல மாவட்டங்களில் கனமழை - இதுவரை ஒரு ரவுண்ட் அப்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
CWC 5: நான் யாருக்கும் மாற்று இல்லை, வெங்கடேஷ் பட்டை மீட் பண்ணதில்லை.. மாதம்பட்டி ரங்கராஜ் பளிச்!
TN Weather Update: பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
பலத்த காற்றுடன் கனமழை எச்சரிக்கை.. எந்தெந்த மாவட்டங்களில்?
Virat Kohli: முக்கிய சாதனையை இன்று எட்டி பறிக்கப்போகும் விராட் கோலி.. முதல் வீரர் இவர்தானாம்..!
முக்கிய சாதனையை இன்று எட்டி பறிக்கப்போகும் விராட் கோலி.. முதல் வீரர் இவர்தானாம்..!
Breaking News LIVE: ராகுல் காந்தியின் வயதைவிட குறைவான சீட்டுக்களைத்தான் காங்கிரஸ் ஜெயிக்கும் - மோடி
ராகுல் காந்தியின் வயதைவிட குறைவான சீட்டுக்களைத்தான் காங்கிரஸ் ஜெயிக்கும் - மோடி
Anu Mohan: 2024-ஆம் ஆண்டில் உலகளவில் காத்திருக்கும் பேரழிவு..குண்டை தூக்கிப்போடும் அனுமோகன்
2024-ஆம் ஆண்டில் உலகளவில் காத்திருக்கும் பேரழிவு..குண்டை தூக்கிப்போடும் அனுமோகன்
Embed widget