மேலும் அறிய

New Year Celebration: தமிழக கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை.. காவல்துறை விதித்த புதிய கட்டுப்பாடு!

தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையில் டிசம்பர் 31 ம் தேதி இரவு மற்றும் ஆங்கில புத்தாண்டு அன்று கொண்டாட தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையில் டிசம்பர் 31 ம் தேதி இரவு மற்றும் ஆங்கில புத்தாண்டு அன்று கொண்டாட தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது. கடற்கரையில்  புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லாததால் அவரவர் வீட்டிலையே கொண்டாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவிக்கையில், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக்கூடாது எனவும், மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார். மேலும், புத்தாண்டில் தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து டிசம்பர் 31 ம் தேதி முதல் அடுத்த நாள் அதிகாலை வரை பொதுமக்கள் ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அன்று இரவு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தால் காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

 

அதேபோல், டிசம்பர் 31 ம் தேதி நீண்ட தூரம் பயணிப்போர் இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என்றும், கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வோர் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்தி பயணம் செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

பொதுமக்கள் அனைவரும் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார். 

முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை அறிவித்திருந்தது. அதன்படி புத்தாண்டு அன்று கொண்டாட்டம் என்று மக்கள் ஒன்றுகூடுவதை தவிரக்க வேண்டும். மெரினா, எலியாட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூட வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. அதேபோல் ரிச்சர்ட்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்களில் வர்த்தக் ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றில் DJ இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
Breaking News LIVE: தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கு - நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்
Breaking News LIVE: தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கு - நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்
11th Result Subject Wise: கம்யூட்டர் சயின்ஸ் தான் டாப்.. பிளஸ் 1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!
கம்யூட்டர் சயின்ஸ் தான் டாப்.. பிளஸ் 1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!
11th Result District Wise: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; முதல், கடைசி இடத்தில் எந்த மாவட்டங்கள் தெரியுமா?
11th Result District Wise: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; முதல், கடைசி இடத்தில் எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Savukku Shankar | Arvind Kejriwal Master Plan | ”டெல்லிக்கு கிளம்புங்க உதய்”பறந்து வந்த அழைப்பு..Rahul Gandhi Marriage | ராகுலுக்கு டும்..டும்..டும்..அக்கா பிரியங்கா ஹேப்பி!  MARRIAGE UPDATEVaaname Ellai | மாறும் LIFESTYLE : PHYSIOTHERAPHY படிப்புக்கு பெருகும் வேலைவாய்ப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
Lok Sabha Election: 5ம் கட்ட மக்களவைத் தேர்தல் - எந்தெந்த மாநிலங்களில் எத்தனை தொகுதிகளில்? ராகுல் டூ ஸ்மிருதி
Breaking News LIVE: தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கு - நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்
Breaking News LIVE: தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கு - நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி ஆஜர்
11th Result Subject Wise: கம்யூட்டர் சயின்ஸ் தான் டாப்.. பிளஸ் 1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!
கம்யூட்டர் சயின்ஸ் தான் டாப்.. பிளஸ் 1 தேர்வில் பாட வாரியாக தேர்ச்சி விகிதம் இதோ!
11th Result District Wise: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; முதல், கடைசி இடத்தில் எந்த மாவட்டங்கள் தெரியுமா?
11th Result District Wise: பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியீடு; முதல், கடைசி இடத்தில் எந்த மாவட்டங்கள் தெரியுமா?
Suchithra: ”அந்த கூட்டம் தான் காரணம்” -  சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனுஷை கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..
”அந்த கூட்டம் தான் காரணம்” - சுச்சி லீக்ஸ் விவகாரத்தில் தனுஷை கிழித்தெடுத்த பாடகி சுசித்ரா..
90ஸ் கிட்ஸ் ரியூனியன்: மதுரையில் அசர வைத்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு !
90ஸ் கிட்ஸ் ரியூனியன்: மதுரையில் அசர வைத்த அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்கள், ஆசிரியர்கள் சந்திப்பு !
TN 11th Exam Results: பிளஸ் 1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி; வழக்கம்போல மாணவிகளே அதிகம்!
TN 11th Exam Results: பிளஸ் 1 தேர்வில் 91.17% பேர் தேர்ச்சி; வழக்கம்போல மாணவிகளே அதிகம்!
Latest Gold Silver Rate: தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 280 குறைவு
தொடர்ந்து குறையும் தங்கம் விலை.. சவரனுக்கு ரூ. 280 குறைவு
Embed widget