New Year Celebration: தமிழக கடற்கரையில் புத்தாண்டு கொண்டாட தடை.. காவல்துறை விதித்த புதிய கட்டுப்பாடு!
தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையில் டிசம்பர் 31 ம் தேதி இரவு மற்றும் ஆங்கில புத்தாண்டு அன்று கொண்டாட தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள கடற்கரையில் டிசம்பர் 31 ம் தேதி இரவு மற்றும் ஆங்கில புத்தாண்டு அன்று கொண்டாட தமிழ்நாடு காவல்துறை தடை விதித்துள்ளது. கடற்கரையில் புத்தாண்டை கொண்டாட அனுமதி இல்லாததால் அவரவர் வீட்டிலையே கொண்டாட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு தெரிவிக்கையில், மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்கக்கூடாது எனவும், மீறினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்படுவார்கள் என்று எச்சரிக்கையும் விடுத்துள்ளார். மேலும், புத்தாண்டில் தமிழ்நாடு அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை தவறாமல் பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். பொது இடங்களில் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் எவரேனும் ஈடுபட்டால் அவர்கள் மீது காவல்துறையினர் தக்க நடவடிக்கை எடுப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து டிசம்பர் 31 ம் தேதி முதல் அடுத்த நாள் அதிகாலை வரை பொதுமக்கள் ரயில், பேருந்து போன்ற பொது போக்குவரத்தை மட்டுமே பயன்படுத்த வேண்டும். அன்று இரவு சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வோர் அருகில் உள்ள காவல்நிலையத்தில் தகவல் தெரிவித்தால் காவல்துறையினர் மூலம் கண்காணிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
#BREAKING தமிழ்நாடு கடற்கரைகளில் டிச.31ம் தேதி இரவு பொது மக்கள் கூடி புத்தாண்டு கொண்டாட தடை- டிஜிபி சைலேந்திரபாபுhttps://t.co/wupaoCQKa2 #NewYear2022 #sylendrababu pic.twitter.com/GZtDtQnkxL
— ABP Nadu (@abpnadu) December 29, 2021
அதேபோல், டிசம்பர் 31 ம் தேதி நீண்ட தூரம் பயணிப்போர் இருசக்கர வாகனங்களில் பயணிக்க வேண்டாம் என்றும், கார் உள்ளிட்ட வாகனங்களில் பயணம் செய்வோர் 3 மணி நேரத்திற்கு ஒருமுறை வாகனத்தை நிறுத்தி பயணம் செய்யவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் அனைவரும் விபத்தில்லா புத்தாண்டை கொண்டாட காவல்துறையினருக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தமிழ்நாடு அரசு சில கட்டுப்பாடுகள் மற்றும் நெறிமுறைகளை அறிவித்திருந்தது. அதன்படி புத்தாண்டு அன்று கொண்டாட்டம் என்று மக்கள் ஒன்றுகூடுவதை தவிரக்க வேண்டும். மெரினா, எலியாட்ஸ், பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கூட வேண்டாம் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. அதேபோல் ரிச்சர்ட்டுகள், பண்ணை வீடு, அரங்குகள், கிளப்களில் வர்த்தக் ரீதியான நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகள் ஆகியவற்றில் DJ இசை நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்