மேலும் அறிய

Rain Alert: புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது - 15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

Rain Alert: தமிழ்நாட்டின் 15 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Rain Alert: தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி  உருவாகியுள்ளதாக, மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி:

தெற்கு அந்தமான் கடல்  பகுதிகளில் நிலவி வரும்  வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில், குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என மணடல வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி, புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.  இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில்  காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 16ஆம் தேதி வாக்கில் நிலவக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

15 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு:

இதுதொடர்பான அறிக்கையில், 

14.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி  மற்றும் காரைக்கால் பகுதிகளில்  அநேக  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருவள்ளூர், சென்னை, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது.

15.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

16.11.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒருசில பகுதிகளில் மிதமான-கனமழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸாகவும்  இருக்கக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

தமிழக கடலோரப்பகுதிகள்: 
 14.11.2023: தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் மற்றும் இலங்கை கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

வங்க கடல் பகுதிகள்: 

14.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
15.11.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
16.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் அதை ஒட்டிய மத்தியகிழக்கு-தெற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 
17.11.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.  மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்” என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand arrest:  புஸ்ஸி ஆனந்த் ARREST! அதிரடி காட்டிய POLICE!  காரணம் என்ன?Vijay With RN Ravi: ஆளுநருடன் விஜய் நேருக்கு நேர் மாளிகையில் நடந்தது என்ன? வெளியான பரபரப்பு தகவல்!Manmohan Singh Death | நவீன இந்தியாவின் சிற்பி.. மன்மோகன் சிங் காலமானார் | CongressAnna University Rape Issue | ”யார் அந்த சார்?”EA MALL-ல் நடந்தது என்ன? தமிழகத்தை அதிரவிடும் போஸ்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
Bussy Anand Arrest: ஆளுநரைச் சந்தித்த விஜய்! புஸ்ஸி ஆனந்தை கைது செய்த போலீஸ் - ஏன் இப்படி?
"தூக்கு" பரங்கிமலை கொலை வழக்கு.. ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை!
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
Gautam Gambhir: இந்திய அணியை நாசமாக்கிய கம்பீர்! 5 மாதங்களில் இத்தனை தோல்விகளா...
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
யார் அந்த சார்? ஆட்டத்தை ஆரம்பித்த அதிமுக! தாக்குதலைத் தொடங்கிய தவெக! என்ன செய்யும் திமுக?
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
ABP Impact: பள்ளி பாடப் புத்தகங்களில் நல்லகண்ணுவின் வரலாறு: அமைச்சர் அன்பில் சூசகம்!
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
TVK VIJAY: ”ஆளுநரை சந்தித்து பேசியது என்ன?” தவெக விஜய் வெளியிட்ட அறிக்கை - திமுக மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளா?
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
பரபரப்பான மதுரை... செல்லூர் ராஜூ கைது
IND vs AUS: பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி; டியர் டீம் இந்தியா! உங்களுக்கு இப்போது என்ன தேவை?
IND vs AUS: பாக்சிங் டே டெஸ்ட் தோல்வி; டியர் டீம் இந்தியா! உங்களுக்கு இப்போது என்ன தேவை?
Embed widget