மேலும் அறிய

Vanni Arasu: அலைமோதும் கூட்டம்.. இரவு 11 மணி வரை மக்கள் பணி.. வன்னி அரசுக்கு குவியும் பாராட்டு!

தான் பொறுப்பேற்ற நாள் முதல் அமைச்சர் வன்னி அரசு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார்.

தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சர் வன்னி அரசு இரவு 11 மணி வரை தலைமைச் செயலகத்தில் மக்களை சந்திப்பதாக சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது. 

முதல்முறையாக அமைச்சரவையில் விசிக

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. ஆனால் பெரும்பான்மை இல்லாமல் தவித்த அக்கட்சிக்கு திமுக கூட்டணியில் இருந்த விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் ஆதரவு தெரிவித்தது. ஆரம்பத்தில் இருந்தே கூட்டணி ஆட்சி என்ற கொள்கையில் விடாப்பிடியாக இருந்த முதலமைச்சர் விஜய் தங்கள் அரசு அமைய ஆதரவு கொடுத்த விடுதலை சிறுத்தைகள், காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்து வரலாற்று நிகழ்வை ஏற்படுத்தினார். 

இதில் முதல்முறையாக விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைச்சரவையில் பங்கேற்றது. அக்கட்சி சார்பில் திண்டிவனம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வன்னி அரசுவை அமைச்சராக்கி விசிக திருமாவளவன் அழகு பார்த்தார். தமிழ்நாடு அரசின் சமூக நீதித்துறை அமைச்சராக வன்னி அரசு பொறுப்பேற்றுள்ளார். 

வன்னி அரசுக்கு குவியும் பாராட்டு

இந்த நிலையில் தான் பொறுப்பேற்ற நாள் முதல் அமைச்சர் வன்னி அரசு தமிழ்நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கும் சென்று ஆய்வு நடத்தி வருகிறார். மேலும் பொதுமக்களின் குறைகளை உடனுக்குடன் கேட்டு நடவடிக்கை எடுத்து வருகிறார். இதற்கு மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் செயல்படும் ஆதி திராவிட நலத்துறைகளின் விடுதிகள், தன் தொகுதி சார்ந்த அம்மா உணவகம் பலவற்றில் வன்னி அரசு ஆய்வு செய்தார். 

மேலும் திண்டிவனம் தொகுதியில் அவரே நேரடியாக சென்று மனுக்களைப் பெற்று தன்னால் முடிந்த நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க உத்தரவிட்டு வருகிறார். மேலும் நரிக்குறவர் இன மக்கள் தலைமைச் செயலகத்தில் வன்னி அரசுவை சந்தித்தபோது அவர்களின் குழந்தைகளை மடியில் அமர்த்தி, வந்திருந்த அனைவருக்கும் இருக்கை அளித்து மரியாதை செலுத்தியது வைரலானது.

அதிகாரத்தில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என நினைப்பவர்களுக்கு அவர் ஒரு உதாரணமாக திகழ்ந்து வருவதாக இணையவாசிகள் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த மகத்தான வாய்ப்பை உண்டாக்கிய முதலமைச்சர் விஜய்க்கும் பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். 

Also Read: உயிரியல் பூங்கா உங்க அப்பன் வீட்டு சொத்தா? .. தத்தி முதல்வர் விஜய்.. சரமாரியாக திமுக விமர்சனம்!

புகார் கொடுக்க குவியும் மக்கள்

இந்த நிலையில் சென்னை தலைமைச் செயலகத்தில் வன்னி அரசு இரவு 11 மணி வரை மக்களை சந்தித்து வருகிறார் என வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது.  இதனிடையே தலைமைச் செயலகத்தில் வன்னி அரசுவின் அறையில் மக்கள் கூட்டம் தினந்தோறும் குவிந்து வருகிறது. மாலை 4 மணிக்கு மேல் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும் நிலையில் இரவு 11 மணி வரையும் வன்னி அரசு மக்களை சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களைப் பெற்று நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வருவதாக சொல்லப்படுகிறது. தன்னை காண வரும் மக்களுக்கு எந்தவித கெடுபிடியோ, அப்பாயின்மென்ட் வேண்டும் என்ற நடைமுறையே இருக்க வேண்டாம் என உத்தரவிட்டுள்ளாராம். இதனைக் தலைமைச் செயலக ஊழியர்களே ஆச்சரியமாக பார்ப்பதாக அங்கு பணியாற்றுபவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு வாசிகளே தயாரா இருங்க... இன்றிரவு வரப்போகும் அந்த திடீர் மாற்றம்!
சென்னை, காஞ்சி, செங்கல்பட்டு வாசிகளே தயாரா இருங்க... இன்றிரவு வரப்போகும் அந்த திடீர் மாற்றம்!
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
Udhayanidhi Stalin: விவசாயிகள் பிரச்னை.. சட்டசபையில் சும்மா விடமாட்டோம்.. விஜய்க்கு உதயநிதி எச்சரிக்கை!
Udhayanidhi Stalin: விவசாயிகள் பிரச்னை.. சட்டசபையில் சும்மா விடமாட்டோம்.. விஜய்க்கு உதயநிதி எச்சரிக்கை!
போதையில் வீழ்வது தனிமனித இழப்பல்ல... தேசத்தின் வீழ்ச்சி! ஆரோவில்லில் ஒலித்த மோடியின் குரல்!
போதையில் வீழ்வது தனிமனித இழப்பல்ல... தேசத்தின் வீழ்ச்சி! ஆரோவில்லில் ஒலித்த மோடியின் குரல்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
பெருக்கெடுக்காத காவிரி..! பொங்கிய திமுக, விவசாய விரோதி விஜய் - DMK தலைவர் ஸ்டாலின் காட்டம்
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
‘என்னாச்சு, என்னாச்சு CM சார் என்னாச்சு..’ தஞ்சையில் தவெக அரசுக்கு எதிராக களத்தில் இறங்கிய உதயநிதி..!
TN Cabinet: காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
காங்., ஷாக்.. ”4 பேர் நீக்கம், 3 பேர் இலாகா மாற்றம், புதுசா 3 பேர்” CM விஜய் அமைச்சரவை மாற்றம் அப்டேட்
Car Accident: 7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
7 பைக்குகளை முட்டி மோதிய சிறுவன், காருக்கு அடியில் சிக்கிய முதியவர் - நையப்புடைத்த பொதுமக்கள்
Nexon Rival: நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
நெக்ஸான் தான் வேண்டுமென அடம் பிடிக்காதிங்க - அம்சங்கள், மைலேஜ்- டஃப் கொடுக்கும் மூன்று SUV-க்கள்
TVK Vs DMK:
"கொத்தூஸ் ஐடி விங் கவனத்திற்கு" திமுகவிற்கு டேட்டாக்களுடன் பதிலடி கொடுத்த தவெக..! எது உண்மை?
TN Weather News: 6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
6 மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை, சென்னையை சூழந்த கருமேகங்கள் -தமிழக வானிலை அறிக்கை
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
திமுகவுக்கு ஓட்டு போட மாட்டீங்க.. பொருள் மட்டும் வேணுமா?.. மக்களை சாடிய அனிதா ராதாகிருஷ்ணன்!
Embed widget