மேலும் அறிய

காவலர்களை குற்றவாளிகள் தாக்கினால் துப்பாக்கியால் சுடுவதில் எந்தவித தயக்கமும் காட்ட வேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு

"நெல்லை சரக பகுதியில் ஜாதிய ரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளை தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளோம்"

தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சைலேந்திர பாபு தலைமையில் திருநெல்வேலி மாநகர காவல் ஆணையாளர் அவினாஷ்குமார், திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி பிரவேஷ்குமார், முன்னிலையில் திருநெல்வேலி மாநகர மற்றும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கு ஆலோசனை கூட்டம் திருநெல்வேலி மாநகர காவல் அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. தொடர்ந்து திருநெல்வேலி சரகத்திற்குட்பட்ட மாவட்டங்களில் உள்ள நகர்புற காவல் நிலையங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள  இருசக்கர ரோந்து வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் ஆயுதப்படை மைதானத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. தொடர்ந்து மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு அறையை திறந்து வைத்தும், அங்குள்ள போலீசாரின் குடும்பத்தினரை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். மேலும், புதிதாக கட்டப்பட்ட திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை மற்றும் மாநகர ஆயுதப்படை அலுவலகத்தை நேரில் சென்று பார்வையிட்டார். மாவட்டத்தில் புதிதாக நிலைய வரவேற்பாளர் பணியில்  அமர்த்தப்பட்ட‌ 33 பேருக்கு பணிநியமண ஆணைகளை வழங்கினார். மேலும் திருநெல்வேலி மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்கள்  11 பேருக்கு நற்சான்றிதழ் மற்றும் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

காவலர்களை குற்றவாளிகள் தாக்கினால் துப்பாக்கியால் சுடுவதில் எந்தவித தயக்கமும் காட்ட வேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு

அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த டிஜிபி சைலேந்திரபாபு கூறும் பொழுது, "தமிழக முதலமைச்சர் அறிவுறுத்தலின் பேரில் நகர்ப்புற பகுதிகளில் கூடுதல் ரோந்து பணி மேற்கொள்வதற்காக 400 ரோந்து வாகனங்கள் காவல்துறை செயல்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி நெல்லை சரகம் மற்றும் நெல்லை மாநகர் பகுதிகளில் நகர்ப்புற பகுதிகளில் ரோந்து பணிகளை மேற்கொள்ள 69 ரோந்து வாகனங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வாகனங்கள் மூலம் செயின் பறிப்பு,பெண்களுக்கு எதிரான குற்றங்கள் போன்றவற்றை தடுக்க மற்றும் கண்காணிக்க காவலர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என தெரிவித்தார்.இந்த ஆண்டு தமிழக முழுவதும் 23 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காவலர்களை குற்றவாளிகள் தாக்கினால் துப்பாக்கியால் சுடுவதில் எந்தவித தயக்கமும் காட்ட வேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகம் முழுவதும் கஞ்சா விற்பனை தொடர்பாக 9,207 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 12,635 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 23 கோடி ரூபாய் அளவில் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நபர்களின் 4003 நபர்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்ய பயன்படுத்தப்பட்ட 2384 சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் கஞ்சா விற்பனைக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கஞ்சா நடமாட்டம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. நெல்லையில் மட்டும் 257  வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 1241 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1 கோடி அளவிலான கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 565 பேரில் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

காவலர்களை குற்றவாளிகள் தாக்கினால் துப்பாக்கியால் சுடுவதில் எந்தவித தயக்கமும் காட்ட வேண்டாம் - டிஜிபி சைலேந்திரபாபு

தமிழகம் முழுவதும் 3967 ரவுடிகள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரகத்தில் மட்டும் 777 ரவுடிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெல்லை சரக பகுதியில் ஜாதிய ரீதியிலான மோதல்கள் மற்றும் கொலைகளை தடுக்க மூன்று அடுக்கு கண்காணிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளோம். முதல் அடுக்கில் காவல் நிலைய அளவில் ஆய்வாளர்கள் மற்றும் சிறப்பு பிரிவு போலீசார் கண்காணிப்பு பணியை மேற்கொள்வார்கள் இரண்டாம் அடுக்கில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது மாநகர காவல் ஆணையாளர்கள் தலைமையிலான கண்காணிப்பு பணி நடைபெறும் அதேபோல் மூன்றாவது அடுக்கில் சென்னை தலைமை அலுவலகத்தில் இருந்து நேரடியாக கண்காணிப்பு பணி மேற்கொள்ள இந்த திட்டத்தின் மூலம் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் குற்றவாளிகளை கைது செய்ய செல்லும் போது குற்றவாளிகளால் காவல்துறையினர் தாக்குதலுக்கு உள்ளாகும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும் போது காவலர்களை குற்றவாளிகள் கொலை வெறி தாக்குதல் நடத்துவதாக இருந்தால் துப்பாக்கியால் சுடுவதற்கும் எந்தவித தயங்கமும் காட்ட கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பணியின் போது இறந்து போன காவலர்களின் குடும்பங்களுக்கு வாரிசு வேலை என்பது 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. தற்போது முதல்வர் உத்தரவின் பேரில் 1132 பேருக்கு நிலைய வரவேற்பு அதிகாரி என்கிற பதவி வழங்கப்பட்டுள்ளது. போக்சோவில் இந்தாண்டு 4400 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது போன்ற வழக்குகளில் உடனடியாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. கூலிப்படைக்கு எதிரான நடவடிக்கைகள் தமிழகம் முழுவதும் எடுக்கப்பட்டு சிறப்பு படை உருவாக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் கூலிப்படை முற்றிலுமாக ஒழிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்தார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி
Embed widget