NEET EXAM: தி.மலையில் 9 இடங்களில் விறுவிறுப்பாக நடந்த நீட்! இத்தனை ஆயிரம் மாணவர்கள் எழுதினார்களா?
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 இடங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் 3847 மாணவர்கள் தேர்வு எழுதினார். அதில் 150 நபர்கள் தேர்வு எழுதவில்லை.
நாடு முழுவதும் 2024- 2025 ஆம் கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வு இன்று நடைபெறுகிறது. நீட் தேர்வை தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் உட்பட நாடு முழுவதும் 24 லட்சம் பேருக்கு எழுதுகின்றனர்.
திருவண்ணாமலை நிலவரம்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் 9 மையங்களில் 4 ஆயிரத்து 005 மாணவ மாணவிகள், இன்று நடைபெறும் நீட் தேர்வை எழுதுகின்றனர். தமிழகத்தில் இன்று எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., உள்ளிட்ட இளநிலை மருத்துவ படிப்புகளில் மாணவர்கள் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது. தேசிய தேர்வு முகமை இந்த தேர்வை நடத்துகிறது.
தேர்வு மையங்கள்:
திருவண்ணாமலை எஸ்.கே.பி. வனிதா இன்டர்நெஷனல் பள்ளி,கண்ணம்மாள் இன்டர்நெஷனல் பள்ளி, ஜீவா இன்டர்நெஷனல் பள்ளி, எஸ் கேவி இன்டர்நெஷனல் பள்ளி, விக்னேஷ் பள்ளி, விருச்சம் இன்டர்னேஷனல் பப்ளிக் பள்ளி, துலிப் இன்டர்நெஷனல் பள்ளி, சேஷாமால் வித்யா மந்திரி பள்ளி ஆகிய பள்ளிகளில் என மொத்தம் 8 இடங்களில் நீட் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்:
இன்று நடைபெற்ற நீட் தேர்வில் மாணவர்கள் பல்வேறு பகுதிகள் மற்றும் மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு மையத்திற்கு காலை 8 மணிக்கு வந்துவிட்டனர். பிறகு காலை 11;30 மணிக்கு மேல் மாணவர்களை பலகட்ட சோதனைகள் பிறகு அனுமதிக்கப்பட்டனர். அதில் மாணவர்கள் தலையில் அணிந்து இருந்த ரிப்பனையும் அங்கு இருந்த தேர்வு அதிகாரிகள் கழட்டி வைக்க கூறினார். பிறகு தேர்வுக்கு வரும் மாணவ மாணவிகள், அரசு வழங்கிய ஒரு அடையாள அட்டை, ஹால் டிக்கெட், 2 புகைப்படம் மட்டுமே கொண்டு வந்ததை சரிபார்த்து உள்ளே அனுப்பினார்.
அதில் ஒரு சில மாணவர்கள் பேனா, பென்சில், எடுத்து வந்ததையும் ஆசிரியர்கள் அதையும் வைத்துவிடு வருவதற்கு தெரிவித்தனர். 2.00 மணிக்கு தேர்வு தொடங்கி மாலை 5:20 மணி வரை நடந்தது . இத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள், தேர்வு மையத்திற்கு காலை 11:30 மணியிலிருந்து அனுமதிக்கட்டனர் . பகல் 1:30 மணி வரை மட்டுமே மாணவர்களை அனுமதிக்கட்டனர். பயோ மெட்ரிக் வருகை பதிவு செய்ய வேண்டும் என்பதால், அதன் பிறகு வரும் தேர்வர்கள் விதிகள்படி அனுமதிக்கப்படவில்லை. வழக்கமான சோதனைகளுக்கு பிறகு தேர்வர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும் இன்று தேர்வில் 4007 மாணவ ,மாணவிகள் என தேர்வு எழுத்துவதற்கான ஹால் டிக்கெட் வழங்கப்பட்டது. இதில் 3847 மாணவ ,மாணவியர்கள் தேர்வு எழுதினார். இதில் 158 மாணவ மாணவியர் தேர்வு எழுதவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.