Mudalur Muscoth Halwa: ஊட்டி வர்க்கி...மணப்பாறை முறுக்கை தொடர்ந்து முதலூர் மஸ்கோத் அல்வாவுக்கு கிடைக்கப்போகும் உலக அங்கீகாரம்?
தூத்துக்குடி முதலூர் மஸ்கோத் அல்வாவுக்கு விரைவில் புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Mudalur Muscoth Halwa: தூத்துக்குடி முதலூர் மஸ்கோத் அல்வாவுக்கு விரைவில் புவிசார் குறியீடு வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
புவிசார் குறியீடு:
ஒரு இடத்தில் விளையக்கூடிய பொருள்கள் அல்லது தயாரிக்கக் கூடிய பொருள்களில் தரம், தனித்துவத் தன்மை ஆகியவற்றின் அடிப்படையில் புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அதாவது, சந்தையில் விற்பனையில் உள்ள பாரம்பரியமிக்க பொருட்களின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டுச் சந்தை விற்பனையை அதிகரிப்பதும் மற்றும் பாரம்பரிய பொருட்களைப் போல போலியான பொருட்கள் உருவாகுவதை கட்டுப்படுத்துவதும் தான் புவிசார் குறியீடு வழங்குவதன் நோக்கமாகும். தற்போது தமிழ்நாட்டில் 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. அதாவது இந்தியாவிலேயே அதிக பொருட்களுக்கு புவிசார் குறியீடுகள் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. அதன்படி, மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, காஞ்சிபுரம் பட்டு, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, சேலம் சுங்குடிச் சேலை, பழனி பஞ்சாமிர்தம், கன்னியாகுமரி மட்டி வாழைப்பளம், திருவண்ணாமலை ஜடேரி நாமக்கட்டி உள்ளிட்ட 56 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைக்கப் பெற்றுள்ளது.
மஸ்கோத் அல்வா:
இந்நிலையில், தூத்துக்குடி முதலூர் மஸ்கோ அல்வாவிற்கும் விரைவில் புவிசார் குறியீடு கிடைக்கப் பெறுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 1966ஆம் ஆண்டில் இருந்து மஸ்கோத் அல்வா விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஜோசம் ஆபிரகாம் என்பவர் தேய்காய்ப்பாலுடன் முந்திரி பருப்பு, கோதுமை மாவு, உலர் திராட்சை, ஏலக்காய் ஆகியவற்றை கொண்டு மஸ்கோ அல்வா தயார் செய்தார். இந்த அல்வாவுக்கு மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்தது. பல ஆண்டுகளை கடந்த ஜோசம் ஆபிரகாம் அவரது மகன் ஜெயசீலன் என தொடர்ந்து இந்த தொழிலை செய்து வந்த நிலையில், தற்போது அவரது பேரன் சைமன் ஜசக் என்பவர் நடத்தி வருகிறார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், "எனது தாத்தா தனது மூத்த மகள் தேவகனியுடன் சேர்த்து இருக்கும்போது, இலங்கையில் இந்த அல்வாவை பற்றி அறிந்தார். பின்னர், அவர் தூத்துக்குடி முதலூருக்கு வந்து மாஸ்கோத் அல்வாவை விற்பனை செய்ய தொடங்கினார். அன்று முதல் இன்று வரை முதலூர் மஸ்கோத் அல்வா நாடு முழுவதும் தெரியும்படி மக்களால் உண்ணப்படுகிறது. தற்போது வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப ஆன்லைன் மூலம் நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்கு டோர் டெலிவர் செய்யப்பட்டு வருகிறது. எனினும் அதற்கு புவிசார் குறியீடு கிடைக்கவில்லை. இதனால் மஸ்கோத் அள்வாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்க விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. விரைவில் அல்வாவிற்கு புவிசார் குறியீடு கிடைக்கும்” என்றார்.
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

