CM Stalin Speech: ''மோடி.. மோடி.. ஜெய் ஸ்ரீராம்''- முதல்வர் ஸ்டாலின் பேசும்போது அதிர்ந்த அரங்கம்! பூரிப்பில் பாஜக
முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போது, மோடி.. மோடி... ஜெய் ஸ்ரீராம் என்று பாஜகவினர் முழக்கமிட்டனர். ஒன்றிய அரசு என்று முதல்வர் கூறும்போது பாஜக தொண்டர்கள் கத்தி, கூச்சலிட்டனர்.
![CM Stalin Speech: ''மோடி.. மோடி.. ஜெய் ஸ்ரீராம்''- முதல்வர் ஸ்டாலின் பேசும்போது அதிர்ந்த அரங்கம்! பூரிப்பில் பாஜக Modi Modi Jai Shri Ram Slogan at Trichy Airport New Terminal Opening During CM MK Stalin Speech CM Stalin Speech: ''மோடி.. மோடி.. ஜெய் ஸ்ரீராம்''- முதல்வர் ஸ்டாலின் பேசும்போது அதிர்ந்த அரங்கம்! பூரிப்பில் பாஜக](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/02/bc04210bf910178756601bde679131ea1704181581226332_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
மோடி.. மோடி... ஜெய் ஸ்ரீராம் என்று முதல்வர் ஸ்டாலின் பேசும்போது என பாஜகவினர் முழக்கமிட்டது திருச்சி விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.
அவர் கூறும்போது, ’’தொட்ட துறை அனைத்திலும் சிகரம் தொட்ட மாநிலம் தமிழ்நாடு. அத்தகைய தமிழ்நாட்டின் இதயப் பகுதியான திருச்சியில் தற்போது பன்னாட்டு விமான நிலையத்தில் புதிதாக 2ஆவது முனையம் அமைக்கப்பட்டுள்ளது.
புதிய முனையத்தைத் திறந்து வைத்துள்ள பிரதமர் மோடிக்கு நன்றி. மதுரை விமான நிலையத்தை பன்னாட்டு விமான நிலையமாக மாற்ற வேண்டும். சென்னை மெட்ரோ இரண்டாவது கட்ட திட்டத்துக்கான மத்திய அரசின் நிதியை விடுவிக்க வேண்டும்.
தமிழக அரசின் கோரிக்கைகளில் அரசியல் எதுவும் இல்லை. திரும்பத்திரும்பக் கேட்பதாக நினைக்க வேண்டாம்.. அரசியலுக்காக அல்ல. சென்னை, தென் மாவட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மத்திய அரசு உடனடியாக நிதி வழங்க வேண்டும்’’ என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.
முதல்வர் பேசிக் கொண்டிருக்கும்போது, மோடி.. மோடி... ஜெய் ஸ்ரீராம் என்று பாஜகவினர் முழக்கமிட்டனர். ஒன்றிய அரசு என்று முதல்வர் கூறும்போது பாஜக தொண்டர்கள் கத்தி, கூச்சலிட்டனர். இந்த சம்பவம் திருச்சி விமான நிலைய அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)