மேலும் அறிய

TN Rain Alert: அடுத்த 5 நாட்களுக்கு தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. இன்றைய வானிலை நிலவரம்..

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும் இதனால் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்

தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி நிலவுகிறது. இது அடுத்த இரண்டு தினங்களில் இலங்கை கடற்கரையை நோக்கி மெதுவாக நகரக்கூடும்.

இதன் காரணமாக,

19.12.2022 மற்றும் 20.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

21.12.2022: தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.

22.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல்  மிதமான மழை பெய்யக்கூடும்.  

23.12.2022: தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  இராமநாதபுரம்,  புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸ் மற்றும்  குறைந்தபட்ச வெப்பநிலை 22  டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):    ஏதுமில்லை. 

மீனவர்களுக்கான எச்சரிக்கை:  

19.12.2022 : அந்தமான் கடல் பகுதிகள் மற்றும்  அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   வீசக்கூடும்.

20.12.2022 மற்றும் 21.12.2022: குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள்,  மன்னார் வளைகுடா, இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   காலை வரை வீசக்கூடும். 

22.12.2022:  குமரிக்கடல் பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள்,   மன்னார் வளைகுடா  மற்றும்  அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 55   கிலோ மீட்டர் வேகத்தில்   காலை வரை வீசக்கூடும். 

மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு  செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
நாளையில் இருந்து செருப்பு அணியமாட்டேன்; சாட்டையால் அடித்துக்கொள்வேன்: அண்ணாமலை எடுத்த சபதம் 
Pushpa 2 Collection :  கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
Pushpa 2 Collection : கலவரத்திலும் குறையாத வசூல்...புஷ்பா 2 பட பாக்ஸ் ஆபிஸ்
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
விபத்தா? திட்டமிட்ட சதியா? அஜர்பைஜான் விமானத்தை சுட்டு வீழ்த்திய ரஷியா?
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
SLAT 2025 Result: ஸ்லேட் தேர்வு முடிவுகள் வெளியீடு; காண்பது எப்படி? அதென்ன SLAT?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
Jio 5g Unlimited Plan: வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
Jio 5g Unlimited Plan: வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
Embed widget