மேலும் அறிய

Meera Mitun Granted bail: வருது வருது விலகு விலகு... வேங்கை வெளியே வருது... மீரா மிதுனுக்கு ஜாமின்!

மீரா மிதுனின் நண்பர் அபிஷேக்குக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பட்டியலின மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கில் நடிகர் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மீரா மிதுனின் நண்பர் அபிஷேக்குக்கும் ஜாமீன் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். இவர், சர்ச்சையாக பேசி அடிக்கடி வழக்குகளில் சிக்கிக்கொள்வார். முக்கியமாக, கடந்த மாதம் பட்டியலினத்தவர்கள் குறித்து மிகவும் சர்ச்சையாக பேசினார். இதுதொடர்பாக விசிகவின் வன்னியரசு புகார் அளித்த நிலையில், அவர் மீது தடுப்புச் சட்டம் உள்பட 7 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தன்னை யாரும் கைது செய்ய முடியாது என்று மீரா மிதுன் போலீசாருக்கு சவால் விட்டார். இதனைத் தொடர்ந்து, அவரை ஆகஸ்ட் 14ஆம் தேதி கேரளாவில்  சென்னை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர். அவரின் நண்பர் ஷாம் அபிஷேக்கையும் கைது செய்த போலீசார், இருவரையும் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.

Meera Mitun Granted bail: வருது வருது விலகு விலகு... வேங்கை வெளியே வருது... மீரா மிதுனுக்கு ஜாமின்!

இந்த நிலையில், நட்சத்திர ஹோட்டல் ஊழியரை ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பான வழக்கில், எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் இன்று ஆஜரானார். அப்போது அவர், தற்கொலைக்கு தூண்டும் வகையில் எழும்பூர் காவல்துறையினர் மனதளவில் டார்ச்சர் செய்வதாக நீதிபதியிடம் புகார் கூறினார். மேலும், தன் மீது வேண்டுமென்றே எந்த காரணமும் இல்லாமல் போலீசார் அடுத்தடுத்து வழக்குகள் போடுவதாகவும், தனக்கு ஜாமீனே கிடைக்கக் கூடாது என்று செயல்படுவதாகவும் கூறினார். உங்கள் மீது காரணத்தோடுதான் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக நீதிபதி கூறினார்.

மேலும், வழக்குகள் குறித்து போலீசார் தன்னிடம் முறையாக தகவல் தெரிவிக்கவில்லை என்றும், தன் சார்பாக வாதா வக்கீல் வரவில்லை எனவும் குற்றம்சாட்டினார். இதுதொடர்பாக போலீசார், மீராமிதுன் வக்கிலீடம் தகவல் தெரிவித்ததாக கூறினர். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கு அவருக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.மீரா மிதுன் மீது போடப்பட்ட மொத்த  4 வழக்குகளில் இதுவரை 3 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. பட்டியலினத்தவர்களை இழிவாக பேசிய வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைக்கவில்லை. இதனால் அவர் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதற்கிடையே  வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட மீரா மிதுன் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவில், ‘என்னைப் பற்றி அவதூறாக 
 செய்தி பரப்பியவர்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் பேசியபோது, வாய் தவறி பட்டியலின மக்களை பற்றி பேசிவிட்டேன். நான் பேசியது தவறுதான். ஆனால், நான் சொல்லாத வார்த்தைகளை பேசியதாக புகார் அளித்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பட்டியலின மக்களோடு நான் நட்புடன் இருக்கிறேன். மேலும் பல படங்களில் நடிப்பதற்காக தயாரிப்பாளர்களுக்கு கால்ஷீட் கொடுத்துள்ளேன். இந்த நிலையில் என்னை சிறையில் அடைத்துள்ளதால் தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, எனக்கு ஜாமீன் வழங்க வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தோற்றது கொரோனா... தொடங்கியது ஐபிஎல்... தடுப்பூசி தரப்போவது டெல்லியா... ஐதராபாத்தா?

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
Donald Trump: பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Vidaamuyarchi Boxoffice: அஜித்திற்கு கை கொடுத்ததா வீக் எண்ட்? விடாமுயற்சியின் கம்பேக்?  4 நாட்களில்  மொத்த வசூல் என்ன?
Vidaamuyarchi Boxoffice: அஜித்திற்கு கை கொடுத்ததா வீக் எண்ட்? விடாமுயற்சியின் கம்பேக்? 4 நாட்களில் மொத்த வசூல் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மணிப்பூர் CM திடீர் ராஜினாமா! காலைவாரிய பாஜக MLA-க்கள்! அமித்ஷாவுடன் மீட்டிங்ஆயிரம் ஜன்னல் வீடு! 7 தலைமுறை... 600 பேர்! ஒரே இடத்தில் கூடிய குடும்பம்”பாஜக ரொம்ப கொடூரம்” கடும் கோபத்தில் ஸ்டாலின்! அண்ணாமலை ரியாக்‌ஷன்Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
ADMK: அதிமுகவில் வெடித்தது பிரச்னை ”எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா புகைப்படங்களே இல்லை” ஈபிஎஸ்-க்கு எதிராக செங்கோட்டையன் அதிருப்தி
Donald Trump: பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
பறந்துகொண்டே பெயரை மாற்றிய ட்ரம்ப்...அமெரிக்க வளைகுடா ஆனது மெக்சிகோ வளைகுடா...
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Manipur Crisis: பாஜகவின் ராஜதந்திரம் - அமலாகும் குடியரசு தலைவர் ஆட்சி? மணிப்பூரின் புதிய முதலமைச்சர் யார்?
Vidaamuyarchi Boxoffice: அஜித்திற்கு கை கொடுத்ததா வீக் எண்ட்? விடாமுயற்சியின் கம்பேக்?  4 நாட்களில்  மொத்த வசூல் என்ன?
Vidaamuyarchi Boxoffice: அஜித்திற்கு கை கொடுத்ததா வீக் எண்ட்? விடாமுயற்சியின் கம்பேக்? 4 நாட்களில் மொத்த வசூல் என்ன?
Valentines Day:
Valentines Day: "சேரா காதல்தான்.. ஆனால் தீராக்காதல்" காலத்திற்கும் அழியா ஒரு தலைக் காதல் படங்கள்!
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
PM Modi Foreign Visit: ஃப்ரான்ஸ் டூ அமெரிக்கா - ட்ரம்ப் உடன் டின்னர், இன்று தொடங்கும் பிரதமர் மோடியின் பயணம் - முழு விவரம்
Thaipusam 2025: நாளை தைப்பூசம்! களைகட்டும் முருகன் கோயில்கள்! லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
Thaipusam 2025: நாளை தைப்பூசம்! களைகட்டும் முருகன் கோயில்கள்! லட்சக்கணக்கில் குவியும் பக்தர்கள்!
Watch Video: என்னடா வாழ்க்கை இது..! துக்க வீடான திருமண வீடு, 23 வயது இளம்பெண்ணுக்கு இப்படி ஒரு மரணமா?
Watch Video: என்னடா வாழ்க்கை இது..! துக்க வீடான திருமண வீடு, 23 வயது இளம்பெண்ணுக்கு இப்படி ஒரு மரணமா?
Embed widget