மேலும் அறிய
Advertisement
உயிருக்கு போராடிய சிறுவனை, உடனடியாக மீட்டு காரில் அழைத்துச்சென்ற எம்எல்ஏ..! பொதுமக்கள் பாராட்டு..!
திருக்கழுக்குன்றம் அருகே சாலை விபத்தில் உயிருக்கு போராடிய சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்த சட்டமன்ற உறுப்பினர் பாலாஜிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
திருக்கழுக்குன்றம் அருகே சாலை விபத்தில் உயிருக்கு போராடிய இருளர் இன சிறுவனை மீட்டு தனது காரில் அழைத்து சென்று சிகிச்சை அளித்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த கொத்தமங்கலம் இருளர் பகுதியை சேர்ந்தவர் நரேன் குமார். நேற்று மதியம் நரேஷ்குமார் குத்தி மங்கலம் சாலையில் நடந்து சென்றார் அப்போது அவ்வழியாக சென்ற ஒரு இருசக்கர வாகனம் சிறுவன் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட நரேன் குமார் படுகாயமடைந்தார். இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் வருவதற்கு சற்று நேரம் காத்திருந்தனர் அப்போது நரேன் குமார் ரத்த காயங்களுடன் அடிபட்டு துடித்துக்கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் அவ்வழியாக காரில் வந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி இதை பார்த்ததும் உடனடியாக கீழே இறங்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சிறுவனை மீட்டு தனது காரில் ஏற்றிக்கொண்டு திருக்கழுக்குன்றம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்.
அங்கு நரேன் குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை முடியும் வரை அங்கே காத்திருந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ் எஸ் பாலாஜி, நரேன் குமாரின் உடல் நிலை குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த பிறகு அங்கிருந்து சென்றார். மேலும் நரேன் குமாருக்கு ஆறுதல் தெரிவித்துள்ளார். விபத்து குறித்து புகாரின் அடிப்படையில் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்போது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிருக்கு போராடி இருந்த சிறுவனை தன்னுடைய காரில் ஏற்றிக்கொண்டு சென்று சிகிச்சை அளித்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினரின் மனிதாபிமான செயல் பொதுமக்களிடையே பாராட்டைப் பெற்றது.
உயிருக்கு போராடிய சிறுவனை தன்னுடைய காரில் அழைத்துச் சென்ற எம்எல்ஏ @VckBalaji pic.twitter.com/zBpWIBQ2mk
— Kishore Ravi (@Kishoreoviya) June 16, 2021
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வேலைவாய்ப்பு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion