மேலும் அறிய

MK Stalin: சமூகநீதி வரலாற்றில் முக்கியமானது தோள்சீலை போராட்டம் - 200வது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் பேச்சு!

MK Stalin: சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டிங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலை போராட்டம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் சமூக நீதி வரலாற்றில் வீரமிகுந்த போராட்டிங்களில் ஒன்றாக பதிவாகியுள்ளது தோள்சீலை போராட்டம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தோள்சீலைப் போராட்டத்தின் 200-ஆவது ஆண்டு நிறைவுப் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், அமைச்சர் மனோ தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதுபோன்ற வீரமிகுந்த போராட்டங்களை இன்றைய இளம் தலைமுறைக்கு தெரியப்படுத்த வேண்டியே இதுபோன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

இன்றைக்கு கல்வியில், வேலைவாய்ப்பில், பொருளாதாரத்தில், நாகரிகத்தில், தமிழ்நாடு எவ்வளவோ உயரங்களைத் தொட்டுவிட்டது. இப்படிப்பட்ட உயரத்தில்தான் 50 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தோமா என்றால் இல்லை. இப்படிப்பட்ட உயரத்தில்தான் 100 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தோமா என்றால் இல்லை; ஒருகாலத்தில் அனைத்து உணவு விடுதிகளுக்கும் அனைவரும் போக முடியாது; பஞ்சமர்களும் குஷ்டரோகிகளும் உள்ளே வரக்கூடாது என்று போர்டு மாட்டியிருப்பார்கள். நாடகக் கொட்டகைக்குள் நுழையத் தடைவிதிக்கப்பட்டிருந்தது. ரயில் நிலையங்களில் உயர் சாதியினர் சாப்பிட தனி இடம் இருந்தது. ரயில் விட்டபோது ஒவ்வொரு வகுப்பினருக்கும் தனித்தனி பெட்டிகள் ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.

வரலாறு கதை

80 வயது கடந்திருக்கக்கூடிய பெரியவர்களைக் கேட்டுப்பாருங்கள். அவர்களுக்குத்தான் இந்த ஒரு நூற்றாண்டு காலத்தில் தமிழ்ச் சமுதாயம் கடந்திருக்கக்கூடிய மாற்றங்கள் தெரியும். எப்படி இருந்த நாம், எப்படி உயர்ந்திருக்கிறோம் என்பது தெரியும். 

ஆற்றங்கரை நாகரீகம்:

கல் தோன்றா, மண் தோன்றா காலத்தே வாளோடு தோன்றிய மூத்தக் குடி, தமிழ்ச் சமுதாயமானது ஈராயிரம் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே பண்பாட்டால் செழித்து நின்றது என்பதை யாரும் மறுக்க முடியாது.

நேற்றைய தினம் கீழடியில் அருங்காட்சியகத்தைத் திறந்துவைத்தேன். ஆற்றங்கரை நாகரிகத்தின் தலைச் சிறந்த நகர நாகரிகமாக வைகைக்கரை நாகரிகத்துக்கு எடுத்துக்காட்டான இடம் கீழடி” என்று கூறினார்.

தோள் சீலைப் போராட்ட வரலாறு 

பெண்கள் மீதான ஒடுக்குமுறை காலங்காலமாக தொடர்ந்து வருகிறது. அதனை எதிர்த்து போராட்டம் இன்றளவும் தொடர்ந்து வருகிறது. பெண்கள் தங்கள் மேலாடை அணியும் உரிமைக்காக போராட்டம் நடத்தினார்கள். மார்ச்,6 ஆம் தேதி தோள் சீலைப் போரட்டம் நடந்தது 200 ஆண்டுகளாகின்றன. பெண்கள் தம் மார்பகங்களை மறைப்பதற்கு கூட போராட வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஒரு குறிப்பிட்டசமூகத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பெண்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை தீர்மானிப்பவர்களாக ஆதிக்க வர்க்கதினர் இருந்திருக்கின்றனர். 

200 ஆண்டுகளுக்கு முன்பு, பிரிக்கப்படாத இந்தியாவின் தென் பகுதியான கேளரம் மற்றும் கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகியவாஇகளை உள்ளடக்கிய திருவிதாங்கூர் சம்ஸ்தானத்தில் தொடங்கிய போராட்டம் இது. இங்கு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தவிர ஏனையோர் தீண்டத்தகாதோராக கருதப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள். பெண்களின் நிலையோ மிகவும் மோசம். உயர்சாதி பெண்களுக்கும் நிறைய கட்டுப்பாடுகள் இருந்தன. ஏனையோர் மார்பகத்தை மறைக்கும்படி ஆடை அணியக் கூடாது.அப்படி செய்தால், முலைவரி கட்ட வேண்டும். இதை எதிர்த்து 1822-1823, 1827-1829, 1858-1859 என் மூன்று கட்டங்களாக தோள் சீலைப் போராட்டம் நடைபெற்றது. 

மேலும் அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், மற்றும் பீட்டர் அல்போன்ஸ், விஜய்வசந்த் எம்.பி. பாலபிரஜாபதி அடிகளார் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay vs Seeman | நாதக சீமானுக்கு செக்! விஜய் எடுத்த அதிரடி முடிவு! தவெகவினர் மரணகலாய்Vijay Thiruma meeting | ஒரே மேடையில் விஜய், திருமா! கடுப்பில் விசிக சீனியர்கள்!ஆதவ் அர்ஜூனா அடாவடி!TVK Vijay : வாக்கு தவறிய விஜய் மறந்துட்டாரா? தைரியம் இல்லையா? வறுத்தெடுக்கும் நெட்டிசன்ஸ்Aadhav arjuna : ”திருமாவுக்கு அடுத்து நான் தான்” திட்டம் தீட்டும் ஆதவ்! கொந்தளிக்கும் விசிக சீனியர்ஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
மகனின் திருமண நிகழ்ச்சியில் மாரடைப்பு.. கோவை செல்வராஜ் மரணம்!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
IND vs SA T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா..வித்தியாசமான ஆடும் 11ல் களம் இறங்கிய இந்தியா!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
நாளை விடியல் எப்படி? ஆட்டம் காணப்போகும் திமுக! அதிர்ச்சியில் தொண்டர்கள்! குழப்பத்தில் தலைமை!
"இந்தியாவுக்கு தகுதி இருக்கு" புகழ்ந்து தள்ளிய ரஷிய அதிபர் புதின்.. மிரண்ட உலக நாடுகள்!
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களே உஷார்... நூதன மோசடி: எச்சரிக்கும் சைபர் க்ரைம் போலீஸ்
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
TNPSC Results: அதிரடி காட்டும் டிஎன்பிஎஸ்சி; 50 நாட்களில் தேர்வு முடிவுகள் வெளியீடு- காண்பது எப்படி?
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
உலகமே அழிந்திருக்கிறது; ஆலமரம் அழியாதா? - உதயநிதியை அட்டாக் செய்த செல்லூர் ராஜூ
Chennai Airport: பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
பரபரப்பான சென்னை விமான நிலையம்.. உயிர் தப்பிய பயணிகள் - என்ன நடந்தது?
Embed widget