(Source: ECI/ABP News/ABP Majha)
CM Stalin Assembly Speech: சென்னைக்கு அருகே மிகப்பெரிய விளையாட்டு நகரம் (மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைய உள்ளது - சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு..!
சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சட்டபேரவையில் கேள்வி நேரத்தின் போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
சட்டபேரவையில் 110விதியின் கீழ் பேசிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது, “அறிவு சக்தியை போன்று உடல் வலிமையையும் முக்கியம். அதில் விளையாட்டிற்கு முக்கியப்பங்கு இருக்கிறது. உடல்வலிமை, மனஉறுதி உள்ளிட்டவற்றை கொடுக்கும் விளையாட்டை வெற்றியையும், தோல்வியையும் சம்மாக பார்க்கும் மனநிலையை தருகிறது. சென்னைக்கு அருகே மிகப்பெரிய விளையாட்டு நகரம் (மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைய உள்ளது சட்டப்பேரவையில் முதலமைச்சர் என அறிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் நான்கு மண்டலங்களில் ஒலிம்பிக் அகாடமி அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதல்வரின் அறிவிப்புகள்
பன்னாட்டு போட்டிகளில் தமிழகத்தை சார்ந்த வீரர் வீராங்கனைகள் அதிக பதக்கங்கள் வெல்வதை ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு உதவித்தொகைகளை வழங்கி வருகிறது.
பன்னாட்டு மற்றும் சர்வதேச போட்டிகளில் தமிழக வீரர்கள் பதக்கங்களை வெல்வதற்கு ஏதுவாக, சென்னை அருகில் பிரம்மாண்டமான விளையாட்டு நகரம் ( மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி) அமைக்கப்படுவதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது.
ஒலிம்பிக் உள்ளிட்ட போட்டிகளில் பதக்கங்களை வெல்வதற்கு தேவையான பயிற்சிகளை மேற்கொள்ள, தமிழகத்தின் நான்கு மண்டலங்களில் தலா ஒன்று வீதம் ஒலிம்பிக் அகாடமிஸ் அமைக்கப்படும்.
அனைத்து சட்டமன்ற தொகுதியிலும் 3 கோடி செலவில் சிறுவிளையாட்டு அரங்கங்கள் நிறுவப்பட உள்ளது.
தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு வழிகாட்ட ஒலிம்பிக் தங்கம் தேடுதல் என்ற திட்டம் 25 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
வடசென்னை பகுதியில் நவீன குத்துச்சண்டை விளையாட்டு வளாகம் ரூ 10 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளது.
அலங்கா நல்லூரில் ஜல்லுக்கட்டுக்கென்றே தனி மைதானம் அமைக்கப்பட உள்ளது
சிலம்பம் விளையாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், சிலம்ப வீரர்களுக்கு அரசு வேலை வாய்ப்பில் 3 விழுக்காடு வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சென்னை ஓப்பன் டென்னிஸ் தொடரையும், கடற்கரை கையூந்து பந்து போட்டிகளையும் நடத்துவதற்கான ஏற்பாடு செய்யப்படும்.
44 வது உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் 28 -07 -2022 முதல் 10 -08 -2022 வரை உலகமே வியக்கும் வகையில் நடத்தப்பட உள்ளது. 180 நாடுகளை சேர்ந்த வீரர்கள் அதில் பங்கு பெறுவார்கள். அதற்கான குழு இன்று அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்