அதிமுக கூட்டணி குறித்து எழுப்பிய கேள்வி - அமைச்சர் செந்தில் பாலாஜி சொன்ன பதில் என்ன?
கரூர் மாநகராட்சிக்கு பகுதிகளுக்கு கட்டளை காவிரி ஆற்றுப் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் குடிநீர் திட்டப் பணிகள் மேம்படுத்தும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தொடங்கி வைத்தார்.

கரூரில் குடிநீர் திட்ட பணிகளை துவக்கி வைக்க வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் அமித்ஷா சென்னை வருகை குறித்தும், அதிமுக கூட்டணி குறித்தும் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசக்கூடாது என்று பதில் அளித்தார்.
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளுக்கு நீரேற்று நிலையம் அமைந்துள்ள கட்டளை காவிரி ஆற்றுப் பகுதியில் ரூ.2 கோடி மதிப்பீட்டில் இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர். அப்போது பேட்டியளித்த அமைச்சர் செந்தில் பாலாஜி, கரூர் மாநகராட்சிக்கு சீரான குடிநீர் வழங்குவதற்காக 118 கோடி மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிவுற்றால் தற்போது 9 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படுவது 3 நாள்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கப்படும்.
கரூர் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகள் 50 சதவீதம் நிறைவு பெற்றுள்ளது. 3 மாத காலத்தில் பணிகள் நிறைவு பெற்று புதிய பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும் என்றார். மேலும், அமித்ஷா சென்னை வந்தது குறித்தும், அதிமுக கூட்டணி குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசக்கூடாது என்று அமைச்சர் பதில் அளித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

