மேலும் அறிய

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் தமிழக பாஜக: அமைச்சர் சேகர்பாபு காட்டம்

தமிழக பாஜக தினமும் அவதூறு பரப்பி,  சட்டம் ஒழுங்கை கெடுப்பது, மதவாதத்தை தூண்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவதாக அமைச்சர் குற்றச்சாட்டு

சமூக விரோதிகளின் கூடாரமாக தமிழக பாஜக மாறுவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு விமர்சித்துள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு தினத்தை ஒட்டி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளை தமிழக அரசு நடத்தி வருகிறது. மருத்துவமனை திறப்பது, நூலகம் அமைப்பது, நலத்திட்ட உதவிகள் வழங்குவது, கருத்தாக்க நிகழ்ச்சிகளை நடத்துவது உள்ளிடவைகள் திமுக மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் சென்னையில் 160 திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அதில், அமைச்சர் சேகர்பாபு, மேயர் பிரியா ராஜன் மற்றும் பரதநாட்டிய கலைஞர் நர்த்தகி நடராஜன் ஆகியோர்  பங்கேற்றனர். 

இந்த நிகழ்வில் பங்கேற்ற இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, பாஜகவை கடுமையாக சாடினார். திமுகவில் உள்ளவர்கள் ரவுடிகள் என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா விமர்சித்ததற்கு பதிலளித்து பேசிய அமைச்சர், “இந்த ஆண்டு சமூக விரோதிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையின் பட்டியலில் பாஜகவினரே அதிகம் இருப்பதாகவும், தமிழக பாஜக சமூக விரோதிகளின் கூடாரமாக இருப்பதாகவும் கூறினார். அவர்கள் தினமும் அவதூறு பரப்பி,  சட்டம் ஒழுங்கை கெடுப்பது, மதவாதத்தை தூண்டுவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார். ஒற்றுமையாக இருக்கும் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடும் சமூக விரோதிகள் மீது முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்றும், விரைவில் அவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்றும் தெரிவித்தார். 

அவதூறு பரப்பும் வகையில் திமுகவினர் பேசினாலும், சிறிய தவறு செய்தாலும் கூட அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என்றார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் நடைப்பயணம் குறித்து பேசிய அமைச்சர், 100 அண்ணாமலை வந்தாலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் முதலமைச்சர் தலைமையிலான கூட்டணியே 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்றார். மேலும், அண்ணாமலை மேற்கொள்ள நடைப்பயணத்தில் வைக்கப்படும் புகார் பெட்டியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் பாஜகவினர் செய்யும் கட்டப் பஞ்சாயத்து, ரவுடித் தனத்தை பற்றித்தான் மக்கள் புகார் தெரிவிப்பார்கள் என கூறினார். 

மேலும் படிக்க: Manipur Violence: சுதந்திரப் போராட்ட வீரரின் மனைவி உயிரோடு எரித்து கொலை.. மணிப்பூரில் மீண்டும் கொடூரம்..

Chennai Rains: சென்னையில் பலத்த காற்றுடன் மழை... அடுத்த 3 மணி நேரமும் இப்படிதான் இருக்குமாம்! வானிலை மையம் அலர்ட்!

CM Stalin: கொந்தளித்த முதலமைச்சர் ஸ்டாலின்.. ”மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் தமிழ்நாட்டுக்கு வாங்க” என அழைப்பு

தலைப்பு செய்திகள்

Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget