மேலும் அறிய
Advertisement
போர்க்கால அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபடும் - அமைச்சர் சேகர் பாபு
மழைக்காலத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்படும்போது போர்க்கால அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபடும் அமைச்சர் சேகர் பாபு உறுதியளித்துள்ளார்
மழைக்காலத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டால், போர்க்கால அடிப்படையில் உணவு தயாரிக்கும் பணியில் அறநிலையத்துறை ஈடுபடும் என அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தமிழக அரசின் சார்பில் கோயில்களுக்கு வரும் பக்தர்களுக்கு நாள் முழுவதும் பிரசாதம் வழங்கும் திட்டம் மற்றும் மேலும் ஐந்து கோயில்களுக்கு அதனை விரிவாக்கம் செய்யும் நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டு திட்டத்தினை தொடக்கி வைத்தார். சட்டமன்றத்தில் கடந்த 7.7.21ல் இந்து சமய அறநிலையத்துறையின் மானியக் கோரிக்கையில் இத்திட்டம் அறிவிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் 23ம் தேதி முதல் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. ஏற்கனவே 10 கோயில்களில் இந்த திட்டம் மூலம் பிரசாதம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது கூடுதலாக இருக்கன்குடி மாரியம்மன் கோவில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில், நாமக்கல் அருள்மிகு நரசிம்மார் கோவில், பொள்ளாச்சி மாசாணியம்மன் கோவில் உள்ளிட்ட 4 கோயில்களில் இந்த திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த 4 கோயிகளுக்கும் அமைச்சர் சேகர் பாபு காணொளி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மயிலை தா.வேலு, இந்து சமய அறநிலைத்துறை செயலாளர் சந்திரமோகன், அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன், மயிலாப்பூர் கோயில் இணை ஆணையர் காவேரி, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் சேகர் பாபு, நாள் முழுவதும் அன்னதானம் திட்டம் ஏற்கனவே பழனி, திருச்செந்தூர் உழிட்ட கோவில்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 3 கோவில்களில் வெகு விரைவில் இந்த அன்னதான திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார்.
பருவமழை குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சேகர் பாபு, உண்மையை உரக்க சொல்வதில் பயமில்லை. 10 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை செய்யாததால் கடந்த ஆண்டு பருவ மழையில் சென்னையே ஸ்தம்பித்ததை மறக்க முடியாது. தமிழ்நாடு முதல்வர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதில் இரவு பகல் பாராது உழைத்தார். அதன் தொடர்ச்சியாக, இதனை சவாலாக ஏற்றுக்கொண்டு இந்த ஆண்டு இந்த நிலையை மாற்றுவோம் என உறுதி ஏற்றார்.
அந்த நடவடிக்கை காரணமாக இந்த ஆண்டு வட கிழக்கு பருவ மழையை எதிர்கொள்ள 1,200 கிலோ மீட்டர் தூரத்தில் 2,500 கோடி ரூபாய் செலவில் மழை நீர் வடிகால் பணிகள் தொடங்கப்பட்டது. அதன் விளைவாக சென்னையில் பல பகுதிகளில் மழை நீர் தேக்கம் இல்லாமல் உள்ளது. கொளத்தூரில் 11 செ.மீ மழை பெய்துள்ளது. கடந்த ஆண்டு 3 செமீ மழைக்கே கொளத்தூரில் மழை தேங்கி நின்றது. ஆனால், இன்றைக்கு அங்கு ஒரு இடத்தில் கூட ஒரு சொட்டு மழைநீர் கூட தேங்கி நிற்கவில்லை. ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல் இந்த பணிகள் இன்னும் ஒரு மாத காலம் இருந்திருந்தால், அனைத்து பணிகளையும் நிறைவேற்றி இருக்க முடியும். ஒரு சில இடங்களில் சிறு சிறு பணிகள் நிறைவேறாத நிலையில் அங்கு மின் மோட்டார்கள் கொண்டு மழைநீர் வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் வரும் காலங்களில் மழை நீரால் மக்கள் பாதிக்கப்படாத சூழலை இந்த ஆட்சி உருவாக்கும்.
ஆளுநருக்கு வேலை இல்லை, ஏதாவது பேசிக் கொண்டிருப்பார் நமக்கு பல வேலைகள் உள்ளது. போற்றுவார் போற்றட்டும் புழுதி வாரித் தூற்றுபவர் தூற்றட்டும். தொடர்ந்து செல்வேன் ஏற்றதொரு கருத்தை எனதுள்ளம் என்றால் எடுத்துரைப்பேன். எவர்வரினும் நில்லேன் அஞ்சேன் என்ற கொள்கையின் படி செயல்படுகிற முதலமைச்சர், ஆளுநர் பேசுவதை குறித்து கவலை கொள்ள மாட்டார். மக்களுடைய தேவையை நாட்டினுடைய வளர்ச்சியை மக்களினுடைய பொருளாதாரத்தை மையப்படுத்தி இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. ஆகவே இது போன்ற தேவையற்ற விமர்சனத்திற்கு பதில் கூறிக்கொண்டு நேரத்தை வீணாக்குவது தேவையற்றது. மழைக்காலத்தில் ஒரு அசாதாரண சூழ்நிலை ஏற்படும் பொழுது துறை அலுவலர்களுடன் கலந்தாலோசித்து முதல்வரிடம் உத்தரவை பெற்று போர்க்கால அடிப்படையிலே உணவு தயாரிக்கிற பணியில் ஈடுபடுவோம். போர்க்காலத்தில் தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்ள முதல்வர் தயாராக உள்ளார்.
குழந்தைகளுக்கு பால் விநியோகத்திற்கு தடை இல்லாமல் இருப்பதற்கும், சுகாதாரக் கேடு இல்லாமல் பாதுகாப்பாதற்கு மருத்துவ முகாம்களும், மரக்கிளைகள் மின்கம்பிகள் சாய்ந்து கிடந்தால் அதை அப்புறப்படுத்துவதற்கும், அனைத்து துறைகளும் உபகரணங்கள் பணியாளர்கள் என முன்னெச்சரிக்கையாக அனைத்தையும் கொண்டு தயாராக உள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
சேலம்
மயிலாடுதுறை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion