’ ஜாகிர் உசேன் ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து வெளியேற்றப்பட்ட விவகாரத்தில் நடவடிக்கை’ அமைச்சர் சேகர் பாபு உறுதி..!
'இசுலாமியர் என்பதற்காக நடன கலைஞர் ஜாகிர் உசேன் அவமானப்படுத்தப்பட்டிருந்தால் அதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது’

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் இருந்து பிரபல பரத நாட்டிய கலைஞர் ஜாகிர் உசேன் வெளியேற்றப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

விசாரணை முடிவில் ஜாகிர் உசேனிடம் தவறாக நடந்துகொண்டு, சட்டத்தை தன் கையில் எடுத்துக்கொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரிடம் இது குறித்து ஆலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் தெரிவித்துள்ள அமைச்சர் சேகர் பாபு, இசுலாமியர் என்பதற்காக இதுபோன்ற சம்பவம் நடந்திருந்தால் அதை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் கூறியுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

