TN Corona Spike: வீரியம் குறைவு.. தமிழ்நாட்டில் க்ளஸ்டர் பாதிப்புகள் இல்லை.. கொரோனா பரவல் குறித்து அமைச்சர் மா.சு விளக்கம்..
தமிழ்நாட்டில் Cluster (க்ளஸ்டர் எனப்படும் குழு பாதிப்புகள்) பாதிப்புகள் இல்லை என்றும் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் cluster பாதிப்புகள் இல்லை என்றும் கொரோனா சிகிச்சைக்கான அனைத்து வசதிகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை வார்டுகளை பார்வையிட்டு மருத்துவர்களிடம் தயார் நிலையில் உள்ள படுக்கைகள் மற்றும் மாதிரி பயிற்சிகளை ஆய்வு செய்த பின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் மத்திய அரசு அரசு மருத்துவமனைகளில் இன்றும் நாளையும் கொரோனா ஒத்திகையை செய்திட அறிவுறுத்தியது. இதன் காரணமாக, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் இன்றும் நாளையும் கொரோனாவிற்கான ஒத்திகை பயிற்சிகள் நடைபெறுகிறது. முதலமைச்சர் அறிவுறுத்தலின்படி மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் மாதிரி பயிற்சிகள் நடைபெறுகிறது. இந்த மாதிரி ஒத்திகை ஏற்கனவே 2022 டிசம்பர் 26ம் தேதி நடைபெற்றது தான் எனவும் அவர் கூறினார். உறுமாறிய கொரோனா பாதிப்பு வீரியம் குறைவாக உள்ளது. தற்போது தமிழ்நாட்டில் cluster பாதிப்புகள் இல்லை. தனி தனி பாதிப்புகள்தான் உள்ளது. அதனால் தான் ஆக்சிஜன் உதவியோ, தீவிர சிகிச்சையோ இல்லாத நிலைக்கு உள்ளது. BA2, XBB வகை கொரோனா தொற்று இந்தியா முழுவதும் பரவி வருகிறது. மக்கள் அச்சப்பட தேவையில்லை” எனவும் கூறினார்.
அதே போல, ”தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில், கொரோனாவிற்கு, படுக்கைகள் வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் வசதிகள், மருந்துகள், முக கவசம், பிபி கிட் கள் உள்ளிட்டவை எவ்வளவு இருக்கிறது என்பது போன்றவை ஆய்வு செய்து தயார் நிலையில் வைக்கப்பட உள்ளது. முன்னெச்சரிக்கையாக அரசு மருத்துவமனைகளில் கொரோனாவிற்காக 64,281 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. அதில், 33,664 ஆக்சிஜன் படுக்கைகளும், 22820 சாதாரண படுக்கைகளும், 7997 ஐசியு படுக்கைகளும் தயார் நிலையில் உள்ளது. 24500 ஆக்சிஜன் உற்பத்தி கலன்கள், 260 பிஎஸ்ஏ ஆக்சிஜன் பிளான்ட்களும், 130 ஆக்சிஜன் சேமிப்பு கலன்களும், 2067 மெட்ரிக் டன் திரவ நிலை ஆக்சிஜன் கையிருப்பு உள்ளது. மேலும் தினசரி 11ஆயிரம் பேர் வரை கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.
இன்ஃபுளுயன்சா காய்ச்சலுக்காக காய்ச்சல் முகாம்கள் நடத்தப்பட்டது. அதன் மூலம், 53,205 முகாம்கள் நடத்தப்பட்டதில், 11,159 பேருக்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் அனைவரும், நலமுடன் உள்ளனர். முன்னெச்சரிக்கையாக, இன்ஃபுளுயன்சா காய்ச்சல் தடுப்பூசி அரசு தரப்பில் இலவசமாக செலுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. அதற்காக 5500 தடுப்பூசிகள் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதனை இன்று முதல் அரசு மருத்துவர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு இன்ஃபுளுயென்சா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரமாகத்தான் உள்ளது. பொதுமக்கள் முக கவசம் அணிவது, கை கழுவுதல் தொடர்ந்து அறி.வுறுத்தப்பட்டு வருகிறது” எனவும் அமைச்சர் கூறினார். நீட் தேர்வு பயிற்சி மையங்களுக்கு போதுமான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ள மன உறுதியுடன் உள்ளனர்” எனவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )