மேலும் அறிய

Minister Ponmudi: இறுதி கட்டத்தில் செம்மண் குவாரி வழக்கு... அப்செட்டில் அமைச்சர் பொன்முடி

செம்மண் குவாரி வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டு, இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

விழுப்புரம்: அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கில் இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

அமைச்சர் பொன்முடி செம்மண் குவாரி வழக்கு

விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள  பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் கடந்த 2007-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை தி.மு.க. ஆட்சிக்காலத்தின் போது அளவுக்கு அதிகமாக அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தம், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம்

இவ்வழக்கு விசாரணை விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட லோகநாதன் ஏற்கனவே உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

நீதிமன்றத்தில் ஆஜர் ஆகாத அமைச்சர் பொன்முடி

இந்நிலையில் நேற்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன்  ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து தி.மு.க. வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் கூடுதலாக சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி கேட்டு ஏற்கனவே அரசு தரப்பில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அம்மனு மீதான விசாரணைக்காக இவ்வழக்கு விசாரணையை 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து மாவட்ட நீதிபதி பூர்ணிமா உத்தரவிட்டார். 

இறுதி கட்டத்தை எட்டிய செம்மண் குவாரி வழக்கு

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு தற்பொழுது இறுதி கட்டத்தை எட்டி உள்ளதால் அமைச்சர் பொன்மொழி அப்செட்டில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் வழக்கு விசாரணை சூடு பிடித்துள்ள நிலையில் தற்போது வரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர். இருப்பினும் அரசு தரப்பு வழக்கறிஞரின் கேள்விகளுக்கு அதிகாரிகள் பதிலளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

நான் ஒன்றும் நிதிஷ் குமார் அல்ல! - டீக்கடையில் எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ரங்கசாமி ‘ஷாக்’ பதில்!
நான் ஒன்றும் நிதிஷ் குமார் அல்ல! - டீக்கடையில் எதிர்க்கட்சிகளுக்கு முதல்வர் ரங்கசாமி ‘ஷாக்’ பதில்!
துண்டுப் பிரசுரம் கொடுத்த விவசாயிகள் மீது திடீர் தாக்குதல்.! பரபரப்பான கரூர்- நடந்தது என்ன.?
துண்டுப் பிரசுரம் கொடுத்த விவசாயிகள் மீது திடீர் தாக்குதல்.! பரபரப்பான கரூர்- நடந்தது என்ன.?
Jananayagan Vijay : இணையத்தில் வெளியான ஜனநாயகன்.! ஷாக்கான விஜய்- படக்குழு சொன்ன முக்கிய அறிவிப்பு
இணையத்தில் வெளியான ஜனநாயகன்.! ஷாக்கான விஜய்- படக்குழு சொன்ன முக்கிய அறிவிப்பு
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83%% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03%% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38%% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
TN 10th 12th Exam 2026: இனி சென்டம் கஷ்டம்தானா? 10, பிளஸ் 2 பொதுத்தேர்வில் மாணவர்கள் விடைத்தாளை ஆய்வுசெய்ய உத்தரவு- சாதகமா பாதகமா?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
LIK Twitter Review: லவ் இன்சூரன்ஸ் கம்பெனி எக்ஸ்பைரி ஆயிடுச்சா? பிரதிப் ரங்கநாதனின் முதல் ஃப்ளாப்பா? படம் எப்படி இருக்கு?
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
கருணாநிதி மறைந்தபோது மெரினாவில் இடம் கொடுக்காதது ஏன்.? இது தான் காரணம்- இபிஎஸ் சொன்ன ரகசியம்
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
Chennai Candidates: ஸ்டாலின் Vs விஜய் Vs உதயநிதி - சென்னையில் மட்டும் 419 வேட்பாளர்கள்? யாருக்கு எதிராக எத்தனை பேர் போட்டி?
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
மெட்ரோ ரயிலில் பயணித்த ஸ்டாலின்.! போட்டி போட்டு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த பயணிகள்
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Mukul Choudhary: குட்டிப்பயா யாருடா நீ? ”பிறப்பதற்கு முன்பே கிரிக்கெட்டராக சபதம்” தோனியின் சிஷ்யன் முகுல் சவுத்ரி
Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: மும்மொழிக்கொள்கைக்கு அரசு கெடு, சென்னையில் 419 வேட்பாளர்கள், நாசா அப்டேட் - 11 மணி வரை இன்று
EPS election campaign : அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
அதிமுக ஆட்சி வந்ததும் மூன்றே மாதத்தில் கஞ்சா முழுவதுமாக ஒழிக்கப்படும்.! அடித்து சொன்ன எடப்பாடி பழனிசாமி
Embed widget