மேலும் அறிய

தமிழ்நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக அரசு நிலைநாட்டும் - இபிஎஸ்க்கு துரைமுருகன் பதிலடி

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் திமுக அரசு தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களிடம் அடகு வைத்துள்ளது என காட்டமாக விமர்சித்திருந்தார்.

தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் திமுக அரசு தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களிடம் அடகு வைத்துள்ளது என காட்டமாக விமர்சித்திருந்தார். அதற்கு தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்துள்ளார். அதில் அவர், “ கேரள அரசு சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரைத் தடுக்கும் முயற்சி பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கள்ள மவுனம்" எதிர்க்கட்சித் தலைவருக்குக் கைவந்த கலை என்பதைக் காவிரி பிரச்சினையில் மட்டுமல்ல பல்வேறு அரசியல் பிரச்சினைகள், தேர்தல் கூட்டணியிலும் தமிழ்நாட்டு மக்கள் பார்த்திருக்கிறார்கள். அந்த வாசகத்திற்கு மறு உருவம் திரு. பழனிசாமிதானே தவிர வேறு யாருமல்ல! காவிரி இறுதித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்குக் கிடைத்த நீர் உரிமையில் 14.75 டி.எம்.சி நீரைக் கள்ள மவுனம் சாதித்துத் தாரை வார்த்தது இதே  பழனிசாமிதான் என்பதை இந்த நேரத்தில் அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன்.

தமிழ்நாடு அரசைப் பொருத்தவரை காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த தீர்ப்பு, உச்சநீதிமன்றம் 16.05.2018 அன்று வழங்கிய இறுதித் தீர்ப்பு ஆகியவற்றுக்கு மாறாக, கர்நாடக மற்றும் கேரள அரசுகள் நடந்துகொள்ள முயற்சிக்கும்போதெல்லாம் அதை அரசியல்ரீதியாக, ஒன்றிய அரசு வாயிலாக, காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டங்கள் வாயிலாகக் கடுமையாக எதிர்த்து வருகிறது தமிழ்நாடு அரசு என்பதுதான் உண்மை. அமராவதி ஆற்றின் கிளை நதியான தேனாறு "வட்டவடா" எனக் கேரளாவில் அழைக்கப்படுகிறது. இதைப் பொருத்தவரை சென்ற 04.04.2024 அன்று நடைபெற்ற 29-ஆவது காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்திலேயே "காவிரி வடிநிலத்தில் கேரள மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் சிறுபாசனம் பற்றிய விவரங்களைச் சேகரிக்க வேண்டும். கண்காணிக்க வேண்டும்" எனத் தமிழ்நாட்டின் உறுப்பினர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலர், நீர்வளத்துறை அவர்கள் அழுத்தம் திருத்தமாக வலியுறுத்தி இருக்கிறார். இதை இனி வரும் கூட்டங்களிலும் தொடர்ந்து வலியுறுத்துவார். ஆகவே, காவிரி தீர்ப்பினை மீறும் விதமாகக் கேரளாவோ, கர்நாடக அரசோ செயல்பட முயற்சித்தால் அதை உறுதியுடன் எதிர்த்து - தமிழ்நாட்டின் காவிரி உரிமையைச் சட்டரீதியாக மட்டுமல்ல அனைத்து விதத்திலும் தமிழ்நாடு அரசு நிலைநாட்டும் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

இதற்கு முன்னதாக எடப்பாடி பழனிசாமி  தனது எக்ஸ் பக்கத்தில், “தேர்தல் கூட்டணி ஆதாயத்திற்காக கள்ள மவுனம் சாதித்து தமிழ்நாட்டின் நதிநீர் உரிமைகளை மொத்தமாக அண்டை மாநிலங்களுக்கு அடகு வைத்துக்கொண்டிருக்கும் விடியா திமுக அரசின் முதல்வர் மு.க. ஸ்டாலின் நிர்வாக திறனற்ற ஆட்சியில் பாலாற்றில் ஆந்திர அரசு பல தடுப்பணைகளை கட்டியுள்ளது. மேகதாதுவில் காவிரியின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்ட முயற்சித்து வருகிறது . இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இனியாவது விடியா திமுக அரசின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூக்கத்தில் இருந்து விடுபட்டு தமிழகத்தின் உரிமைகளை நிலைநாட்ட உடனடியாக சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்துகிறேன்” என குறிப்பிட்டிருந்தார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget