மேலும் அறிய

Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு நேரங்களில் ஏற்படும் மின்வெட்டிற்கு என்ன காரணம்? என்று அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக இரவு நேரத்தில் தொடர்ந்து மின்வெட்டு ஏற்பட்டு வருகிறது. இதனால், தவெக அரசை பலரும் விமர்சித்து வருகின்றனர். ஆட்சிப்பொறுப்பேற்ற இரு வாரங்களிலே இந்த நிலைமையா? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். 

இந்த சூழலில், மின்வெட்டு தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

மின்வெட்டிற்கு காரணம் என்ன?

எங்கெல்லாம் தொழில்நுட்ப கோளாறு வந்ததே அதையெல்லாம் சரி செய்யும் வேலைகள் நடைபெற்று சீர்செய்யப்பட்டது. அனைத்து சி அதிகாரிகளும் ஒவ்வொரு துணை மின்நிலையமும் நேரில் சென்று பார்வையிடுகின்றனர். நிறைய இடங்களில் பழைய மின்மாற்றிகள் உள்ளது. அதில் நிறைய பிரச்சினைகள் உள்ளது. கேபிளில் கோளாறுகள் உள்ளது. நிறைய இடங்களில் குழி தோண்டினாலும் கோளாறுகள் உள்ளது.

ஒரு சில இடங்களில் சில தனிநபர்களின் தவறுகளால் மின்சாரம் தடைபடுவதாக கணக்கிடப்பட்டது. அதற்கான நடவடிக்கைகள் இன்றுக்குள் எடுக்கப்படும். தனிநபர் நடவடிக்கையால் இதுபோன்று நடக்கிறதோ, யாருடைய தூண்டுதலினால் செய்கிறார்களோ அதுமாதிரியான நபர்கள் மீது இன்று இரவுக்குள் கணக்கு எடுக்கப்படும். 

2.50 லட்சம் கோடி கடன்:

கண்டிப்பாக மின்சார வாரியம் உங்களுக்குத் தெரியும் 20 ஆண்டுகள் ஒவ்வொரு நாளும் நலிவடைந்து உள்ளது. 2.50 லட்சம் கோடி கடனில் உள்ளது. 1.40 லட்சம் பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில் 70 ஆயிரம் பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். அதைத்தாண்டி பெரும்பாலான இடத்தில் மின்மாற்றிகள் மிகவும் பழைய மின்மாற்றிகளாக உள்ளது. 

5 வருடத்திற்கு முன்பு 235 உருவாக்க வேண்டும் என்று கணக்கிடப்பட்டு பெரும்பாலும் எந்த வேலையும் நடக்கப்படவில்லை. நிறைய இடங்களில் அதற்கான பணிகள் நடந்து வருகிறது. முடிந்த அளவு பொறியாளர்களை வைத்து அதை கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். தனிநபர் மீது தவறு இருந்தால் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும். 

மின் தட்டுப்பாடு இல்லை:

மின் தட்டுப்பாடு என்பது தட்டுப்பாடு இல்லை. தேவையான மின்சாரம் கையிருப்பில் உள்ளது. கண்டிப்பாக இதை முழுமையாக சீரமைக்கும் பணிகள் படிப்படியாக தொடங்கும். எங்கெல்லாம் சீரமைக்க வேண்டுமோ அதையும் சீரமைக்கிறோம். இதற்கு நாட்கள், மாதங்கள் பிடிக்கலாம். சில இடங்களில் லோடு அதிகமாக சென்றதாலும் இது நடந்ததாக கூறினார்கள். எந்தெந்த இடங்களில் இருக்கும் அதிகாரிகளால் தவறு நடந்ததோ, அவர்கள் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.

தனிநபர் தூண்டுதல் மூலமாக செய்யப்பட்டதாகவும் கருத்துக்கள் நிலவுகிறது. இதையெல்லாம் சரி செய்யும் பணிகள் நடக்கிறது. 99 சதவீதம் சிறப்பாக செயல்படும் இடத்தில் 1 சதவீதம் பேர் கருப்பு ஆடுகளாக செயல்படுகிறார்களோ என்பதையும் ஆய்வு செய்கிறோம். போதுமான ஊழியர் இல்லை என்பதை முதலிலே சொல்லிவிட்டோம். திருவள்ளூரில் ஒரு குறை இருந்தது. அதை முழுவதும் சரி செய்யும் பணிகள் இரவு நடந்தது. 

24 மணி நேர கால் சென்டர்:

நமது கால் சென்டரின் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இது 24 மணி நேரமும் செயல்படுகிறது. மின்வாரிய ஊழியர்கள் சரி செய்யும் பணியின்போது அழைத்தால் எடுக்காமல்கூட இருக்கலாம். கால்சென்டருக்கு தொடர்பு கொண்டால் உடனே பதில் இருக்கும். ஊழியர்கள் அனைவரையும் சொல்லவில்லை. 99 சதவீதம் ஊழியர்கள் இரவு முழுவதும் தூங்காமல் பணியாற்றியுள்ளார்கள்.

இப்போது வரை நேற்று முதல் இன்று மதியம் வரை பணியாற்றியுள்ளார்கள். பழைய மின்மாற்றிகள் ஒரு சவாலாக உள்ளது. அனைத்தையும் முழுமையாக சீரமைக்க முடியாது. தேவையான இடத்தில் இருக்கும் கையிருப்பை வைத்து மாற்றி வருகிறோம். கேபிள் பால்ஸ் எல்லாம் தற்காலிகமாக சீரமைத்து இருப்பதை கொடுத்து வருகிறோம்.

முதலீட்டாளர்கள் சந்திப்பு:

கண்டிப்பாக எங்கெல்லாம் பிரச்சினை இருக்கிறதோ அதை சரி செய்கிறோம். 20 வருடமாக நலிவடைந்த ஒரு நிறுவனத்தை சீரமைக்கும் பணிகள் ஒவ்வொரு நாளும் நடக்கிறது. சூரிய மின் உற்பத்திக்கு பல அளவுகளில் முறைகேடு இருந்தது. அந்த தவறுகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. சுலபமாக முதலீடு செய்து இங்கு முதலீடு செய்யும் பணிகள் நடக்கும். வரும் திங்கள் கிழமை அதற்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு வைத்துள்ளோம். 

ஒரு விண்ணப்பம் போட்டு அவர்கள் வாங்க வேண்டியது இருந்தது. பல தனி நபர்களை சந்தித்து வாங்க வேண்டிய சூழல் இருந்தது. அதையெல்லாம் இனி நடக்காது. ஒவ்வொரு இடத்திலும் தவறுகளை சரி செய்வோம். உற்பத்திக்கான திட்டங்கள் திட்டமிட்டு அறிவிப்புகள் விரைவில் வரும். இரவு நேரத்தில் என்னென்ன செய்யலாம்? என்பதை திட்டமிட்டு வருகிறோம். அதற்கான அறிவிப்புகள் வரும். கணக்கீடு பணிகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
Power Cut: இரவு நேர மின்வெட்டிற்கு யார் காரணம்? உண்மையை உடைத்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார்!
’’ஆட்சி மாறினாலும் காட்சி மாறலை; கோவை சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி’’- எகிறிய எஸ்பி வேலுமணி!
’’ஆட்சி மாறினாலும் காட்சி மாறலை; கோவை சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 கோடி’’- எகிறிய எஸ்பி வேலுமணி!
CM Joseph Vijay: சூலூர் கொடூரம்!
CM Joseph Vijay: சூலூர் கொடூரம்!"மன்னிக்க முடியாத குற்றம்... குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உறுதி!" - முதல்வர் விஜய் அதிரடி!
சிவகங்கை மாவட்ட அரசு அலுவலகங்களில் புதிதாக நிரப்பப்படவுள்ள பணிகள்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சிவகங்கை மாவட்ட அரசு அலுவலகங்களில் புதிதாக நிரப்பப்படவுள்ள பணிகள்.. சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Advertisement
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

Advertisement
Advertisement

வீடியோ

Mr.CLEAN அவர கூப்பிடுங்க..தலைநகருக்கு அழைத்த விஜய்! யார் இந்த அமல்ராஜ் IPS?
போராளி அமைச்சரான கதை! திருமாவின் தளபதி! யார் இந்த வன்னி அரசு?
தவெக குதிரை பேரம்?
மத்திய அமைச்சரையே ஓடவிட்டவர் TVKவில் தலித் பெண் அமைச்சர் யார் இந்த கமலி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
பாய்ந்த போக்சோ வழக்கு!! கோவை சிறுமி வழக்கில் மேற்கு மண்டல IG ரம்யா பாரதி பகீர் தகவல்...
Ebola-US Ban Entry: மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
மிரட்டும் எபோலா.! அச்சத்தில் அமெரிக்கா.! க்ரீன் கார்டு வைத்திருப்போர் நுழைய ரெட் கார்டு போட்ட ட்ரம்ப்
CV Shanmugam: செல்வாக்கை இழக்கும் சிவி சண்முகம்? நேரம் பார்த்து காய் நகர்த்தும் அதிருப்தியாளர்கள்!
CV Shanmugam: செல்வாக்கை இழக்கும் சிவி சண்முகம்? நேரம் பார்த்து காய் நகர்த்தும் அதிருப்தியாளர்கள்!
Vijay Vs Nainar: விஜய்யை விடாமல் வம்புக்கிழுக்கும் நயினார்; 'தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு' என விமர்சனம்
விஜய்யை விடாமல் வம்புக்கிழுக்கும் நயினார்; 'தமிழகத்தை இருளில் மூழ்கடித்த தவெக அரசு' என விமர்சனம்
ஒரே சார்ஜில் 261 கி.மீட்டர் மைலேஜ்! வரப்போது Ulraviolette Tesseract இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 261 கி.மீட்டர் மைலேஜ்! வரப்போது Ulraviolette Tesseract இ ஸ்கூட்டர் - விலை எவ்ளோ?
Best CNG Cars: டிமாண்ட் கூடுது.! விலை உயர்றதுக்குள்ள ஒரு CNG கார வாங்கிடுங்க; மலிவான பெஸ்ட் கார்கள் லிஸ்ட் இதோ
டிமாண்ட் கூடுது.! விலை உயர்றதுக்குள்ள ஒரு CNG கார வாங்கிடுங்க; மலிவான பெஸ்ட் கார்கள் லிஸ்ட் இதோ
Watch Video: இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? - இணையத்தில் வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?
Watch Video: இந்த காலத்தில் இப்படி ஒரு பெண்ணா? - இணையத்தில் வைரலாகும் வீடியோ.. நடந்தது என்ன?
CM Joseph Vijay: சூலூர் கொடூரம்!
CM Joseph Vijay: சூலூர் கொடூரம்!"மன்னிக்க முடியாத குற்றம்... குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை உறுதி!" - முதல்வர் விஜய் அதிரடி!
Embed widget