மேலும் அறிய

திராவிடத்தையும் மகாத்மா காந்தியடிகள் கருத்தையும் பிரித்து பார்க்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

மகாத்மா  தமிழ் மொழி உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளை காட்டிலும் இனிமையானது என்றும் அதனை அனைவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார் என காந்தி சிலை திறந்துவைத்து அமைச்சர் எ.வ.வேலு பேசினர்

திருவண்ணாமலை தேரடி வீதியில் மகாத்மா காந்தி திருவுருவச் சிலையை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி மாவட்ட ஆட்சித்தலைவர்
தெ.பாஸ்கர பாண்டியன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொதுப்பணித்துறை அமைச்சர் பேசுகையில் :

திருவண்ணாமலை தேரடி வீதியில் மகாத்மா காந்தி திருவுருவச்சிலை திறக்கின்ற பாக்கியம் எனக்கு கிடைக்கப் பெற்றுள்ளது. மகாத்மா காந்தி  தான் இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்றது. சுதந்திரத்திற்கு முன்பு இந்தியா பல்வேறு மகாணங்களாக அரசர்களின் கீழ் வெவ்வேறு மொழி பேசும் மக்கள் வாழ்ந்து வந்தனர். இவ்வாறு அனைத்து மாகாணங்களையும் ஒன்றிணைத்து இந்தியா என்ற நாட்டை உருவாக்கிய பெருமை மகாத்மா காந்தி உண்டு என்றால் அது மிகையாகாது. காந்தி தமிழ்நாட்டுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. மகாத்மா 1915-ம் ஆண்டுதான் முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடி என்ற கிராமத்திற்குத்தான் வருகை புரிந்தார். தமிழ்நாட்டுக்கு வருவதற்கு முன்பாக கோர்ட் சூட் உடையை போட்டுக் கொண்டிருந்தவர் பின்பு நமது பாரம்பரிய உடையான வேட்டி மற்றும் துண்டு அணிந்து எளிமையாக வாழ்ந்து வந்தார்.

திராவிடத்தையும் மகாத்மா காந்தியடிகள் கருத்தையும் பிரித்து பார்க்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

நமது தமிழ்நாட்டின் பாரம்பரியத்தையும் உடை கலாச்சாரத்தையும் மிகவும் விரும்பினார். மகாத்மா  தமிழ் மொழி உலகத்தில் உள்ள அனைத்து மொழிகளை காட்டிலும் இனிமையானது என்றும் அதனை அனைவரும் கட்டாயம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். சுதந்திரப் போராட்டத்தில் காந்தியடிகள்  முன்பாகவே நமது தமிழ்நாட்டைச் சேர்ந்த பாரதியார் பாடல்கள் வாயிலாக பல்வேறு புரட்சியை உருவாக்கியவர். சுதந்திரப் போராட்டத்தில் தமிழ்நாட்டு மக்களின் பங்களிப்பு மிகவும் இன்றியமையாததாகும். மகாத்மா அவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஊர் நமது திருவண்ணாமலை என்று குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் வருகை புரிந்தது நமக்கெல்லாம் மிகவும் பெருமையாகும். கேரளாவில் தீண்டாமையை ஒழிப்பதற்காக காந்தியடிகள், தந்தை பெரியார் வைக்கும் போராட்டத்திற்கு அனுப்பி வைத்தார். அதனை நினைவு கூறும் வகையில் அங்கு பிரம்மாண்டமான நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. இன்னும் சில மாதங்களில் தமிழ்நாடு முதலமைச்சர், கேரளா மாநில முதலமைச்சர் இணைந்து தந்தை பெரியார் புகைப்பட தொகுப்புகள் கொண்ட நூலகம் கட்டிடத்தை திறந்து வைக்க உள்ளார்கள்.

திராவிடத்தையும் மகாத்மா காந்தியடிகள் கருத்தையும் பிரித்து பார்க்க முடியாது - அமைச்சர் எ.வ.வேலு

திராவிட சித்தாந்தத்தையும் காந்தியடிகள் பிரித்து பார்க்க முடியாது. தந்தை பெரியார் உந்து சக்தியாக இருந்தவர் காந்தியடிகள் ஆகும். எடுத்துக்கொண்ட காரியத்திலும் கருத்துக்களிலும் தந்தை பெரியார் மிகவும் தீவிரமான மனப்பான்மை கொண்டவர் காந்தியடிகள் தமிழர்கள் மிகவும் உழைப்பாளிகள் என்றும் தர்மத்தை கடைப்பிடித்து வாழ்பவர்கள் என்றும் வெள்ளை உள்ளத்துக்கு சொந்தக்காரர்கள் என்று தெரிவித்துள்ளார். மேலும் உழைப்பவரே உயர்ந்தவர் என்பதுதான் எனது தாரக மந்திரமாகும்.  மகாத்மா காந்தியடிகள் இந்திய திருநாட்டிற்கு மட்டுமல்லாமல் உலகத்தில் உள்ள மனித குலத்திற்கு வழிகாட்டியாக இருப்பவர்.  திராவிடத்தையும் மகாத்மா காந்தியடிகள் கருத்தையும் பிரித்து பார்க்க முடியாது என்று மீண்டும் ஒருமுறை சொல்லிக்கொண்டு திருஉருவச் சிலை அமைய காரணமாக இருந்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என பேசினார். இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance : அதிமுகவுடன் தவெக கூட்டணி?விஜய் திடீர் அறிவிப்பு குஷியில் தொண்டர்கள்!Tirupur Bakery Fight : ’’டீ கேட்டா தரமாட்டியா’’பேக்கரி ஊழியர் மீது தாக்குதல்! போதை ஆசாமிகள் அராஜகம்Vijay on DMK : Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
TN Rain: வேகமாக வீட்டுக்கு போயிருங்க! இன்று இரவு 13 மாவட்டங்களில் மழை இருக்கு மக்களே.!
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருச்செந்தூர் கோயில் யானை மிதித்து 2 பேர் பலி - 45 நிமிடங்கள் அடைக்கப்பட்ட கோயில் நடை! நடந்தது என்ன?
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
திருமா வைத்த கோரிக்கை! உறுதி கொடுத்த ஸ்டாலின் - விளாசித் தள்ளிய தமிழிசை!
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
“தயவுசெய்து இதை பண்ணாதீங்க” பேராபத்து வரப்போகுது.. அரசை எச்சரிக்கும் வேல்முருகன் 
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
கூகுள் மேப்பை நம்பி போனவருக்கு நேர்ந்த கதி... 7 மணி நேரம் தவித்த ஐயப்ப பக்தருக்கு என்ன ஆனது?
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
Nayanthara : அந்த கதை எல்லாம் ரொம்ப மோசம்...சிம்புவுடனான காதல் தோல்விக்கு நயன்தாரா பதில்
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
மேலும் ஒரு விக்கெட் காலி! முக்கிய புள்ளி விலகல்! தள்ளாடும் நாதக: என்ன செய்யப்போகிறார் சீமான்?
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
School Education: இளம் கவிஞர் விருது; மாணவர்களுக்கு கவிதைப் போட்டி- பள்ளிக் கல்வித்துறை அழைப்பு!
Embed widget