மேலும் அறிய

மேட்டூர் அணையின் நீர்வரத்து 80 கன அடியில் இருந்து 138 கன அடியாக உயர்வு

மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் உள்ள அணைகள் நிரம்பி உள்ளன. இருப்பினும் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 114 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 80 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 138 கன அடியாக குறைந்துள்ளது. 

மேட்டூர் அணையின் நீர்வரத்து 80 கன அடியில் இருந்து 138 கன அடியாக உயர்வு

நீர்மட்டம்:

அணையின் நீர் மட்டம் 41.17 அடியாகவும், அணையின் நீர் இருப்பு 12.70 டி.எம்.சி ஆகவும் உள்ளது. குறுவை, சம்பா சாகுபடி பாசனத்திற்காக மேட்டூர் அணையிலிருந்து 90 வது ஆண்டாக கடந்த ஆண்டு ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. சேலம், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் 12 டெல்டா மாவட்டங்களில் உள்ள 17 லட்சம் ஏக்கர் விவசாயம் கடந்த ஆண்டு நடைபெற்றது. ஆனால் நடப்பு ஆண்டு போதிய நீர் மேட்டூர் அணையில் இல்லாத காரணத்தினால் ஜூன் மாதம் 12ஆம் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் குருவை, சம்பா சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 2,100 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், வினாடிக்கு 1,500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் இருந்து குறைந்த அளவு தண்ணீர் மட்டுமே திறக்கப்பட்டுள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் சரிந்து வருகிறது. மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீரில் இருந்து அணை மின் நிலையம் மற்றும் சுரங்க மின் நிலையத்தின் வழியாக தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் மின் உற்பத்தி தொடங்கியுள்ளது. அணையில் தண்ணீர் மிகவும் குறைவாக உள்ளதால் 16 கண் மதகுகள் மூடப்பட்டுள்ளது. குடிநீர் தேவைக்காக கிழக்கு மற்றும் மேற்கு கால்வாய் பாசனத்திற்காக வினாடிக்கு 200 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேட்டூர் அணையில் இருந்து மொத்தமாக வினாடிக்கு 1,500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் அணையின் நீர்வரத்து 80 கன அடியில் இருந்து 138 கன அடியாக உயர்வு

கர்நாடக அணைகள்:

கர்நாடக அணைகளை பொறுத்தவரை நேற்று கிருஷ்ணராஜ சாகர் அணையின் நீர்மட்டம் 92.97 அடியாகவும் அணையின் நீர் இருப்பு 17.78 டி.எம்.சி ஆகவும் உள்ளது. அணைக்கு வினாடிக்கு 167 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில் அணையில் இருந்து வினாடிக்கு 4338 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையை பொறுத்தவரை அணையின் நீர்மட்டம் 50.38 அடியாக உள்ள நிலையில், அணையின் நீர் இருப்பு 11.38 டி.எம்.சி ஆகவும் உள்ளது, அணை வினாடிக்கு 151 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கும் நிலையில், அணையில் இருந்து வினாடிக்கு 2150 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன், மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்கக் கடலில் கலக்கிறது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"மருந்து பெயரை மாற்றி சொல்கிறார் அமைச்சர் " கள்ளச்சாராய விவகாரத்தில் பாயிண்டை பிடித்த இபிஎஸ்!
TN Assembly Session LIVE:  நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
TN Assembly Session LIVE: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
HBD Thalapathy Vijay: என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
Vijay Birthday: பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  : Suriya on Kallakurichi Kallasarayam: ”தமிழக அரசுக்கு கண்டனம்! 20 ஆண்டுகளாக அவலம்” கொந்தளித்த சூர்யா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"மருந்து பெயரை மாற்றி சொல்கிறார் அமைச்சர் " கள்ளச்சாராய விவகாரத்தில் பாயிண்டை பிடித்த இபிஎஸ்!
TN Assembly Session LIVE:  நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
TN Assembly Session LIVE: நினைத்ததை நினைத்த நேரத்தில் பேச முடியாது என்ற சபாநாயகர் - அதிமுக வெளிநடப்பு
HBD Thalapathy Vijay: என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
என்னுயிர்த் தம்பி விஜய்க்கு வாழ்த்துகள்.. முதல் ஆளாக வாழ்த்து சொன்ன சீமான்!
Vijay Birthday: பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
பிறந்தநாளில் விஜய் போட்ட அதிரடி உத்தரவு: புலம்பும் த.வெ.க. தொண்டர்கள்!
CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் -  CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
CSIR UGC NET Exam: தவிர்க்க முடியாத சூழல் - CSIR-UGC-NET தேர்வை ஒத்திவைப்பு - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
Rain Alert: தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - வாங்க பார்க்கலாம்!
தமிழகத்தில் இன்றும் 2 நாட்களுக்கு கனமழை..எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா? - வாங்க பார்க்கலாம்!
Breaking News LIVE: குறைந்த விலையில் “HD செட் ஆப் பாக்ஸ்’ - தமிழ்நாடு அரசு திட்டம்
Breaking News LIVE: குறைந்த விலையில் “HD செட் ஆப் பாக்ஸ்’ - தமிழ்நாடு அரசு திட்டம்
Public Examinations Act: அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள் - புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவு
Public Examinations Act: அடுத்தடுத்து கசிந்த வினாத்தாள்கள் - புதிய சட்டத்தை உடனடியாக அமல்படுத்தி மத்திய அரசு உத்தரவு
Embed widget