மேலும் அறிய

மயிலாடுதுறை: பறவைகள் கணக்கெடுப்பு தீவிரம்..! 14 இடங்களில் பறவைகள் இனம் கண்டுபிடிப்பு, பாதுகாப்புக்கு உதவும் தரவுகள்!

மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் வனத்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுக்கும் பணியை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளனர்.

மயிலாடுதுறை: தமிழகம் முழுவதும் 2025-26-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த நீர்வாழ் பறவைகள் (Synchronised Wetland Birds Census) கணக்கெடுப்பு டிசம்பர் 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மயிலாடுதுறை மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளில் வனத்துறை மற்றும் கல்லூரி மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட பறவைகள் கணக்கெடுப்புப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக மாவட்ட வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

பறவைகள் கணக்கெடுப்பு துவக்க விழா மற்றும் பயிற்சி நிகழ்வுகள் 

திருச்சி வனமண்டல தலைமை வனப்பாதுகாவலர் காஞ்சனா மற்றும் மயிலாடுதுறை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி இந்த ஆய்வுகள் திட்டமிடப்பட்டன.
கணக்கெடுப்பின் முதல் நாளான டிசம்பர் 27 அன்று, ஏவிசி (AVC) கலைக் கல்லூரி விலங்கியல் துறைத் தலைவர் பாஸ்கரன் தலைமை ஏற்று இந்தப் பணியைத் துவக்கி வைத்தார். சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான், பறவைகளை அடையாளம் காண்பது மற்றும் அவற்றை அறிவியல் பூர்வமாக கணக்கிடும் முறைகள் குறித்து விரிவான விளக்கங்களை வழங்கினார்.


தொடர்ந்து, இணைப் பேராசிரியர் பாண்டியன் பவர் பாயிண்ட் (Power Point) விளக்கக்காட்சி மூலம் பறவைகளின் வகைகள், அவற்றின் குணாதிசயங்கள் மற்றும் வலசை வரும் பறவைகளை கண்டறியும் நுணுக்கங்கள் குறித்து மாணவர்களுக்குப் பயிற்சி அளித்தார். உதவிப் பேராசிரியர் முனைவர் மூர்த்தி நன்றியுரை வழங்கினார்.

மாவட்டத்தின் 14 இடங்களில் தீவிர களப்பணி

இரண்டாம் நாளான டிசம்பர் 28 அன்று, சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் தலைமையில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்புத் தீவிரப்படுத்தப்பட்டது. இதற்காக ஏவிசி கல்லூரி மாணவ-மாணவிகள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் (NGOs) மற்றும் வனத்துறைப் பணியாளர்கள் என 60-க்கும் மேற்பட்டோர் பல்வேறு குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.
இந்தக் குழுக்கள் மயிலாடுதுறை மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகளான:

* பெருந்தோட்டம் ஏரி

*புதுப்பட்டினம் அலையாத்திக் காடுகள் (Mangroves)

* திருவாலி ஏரி

* திருமுல்லைவாசல் உப்பனாறு

 * தரங்கம்பாடி மற்றும் சின்னங்குடி

உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 14 முக்கிய இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். இந்த களப்பணியின் போது வனப்பணியாளர்கள் செல்வம், மோ.அனந்தீஸ்வரன் மற்றும் களப்பணியாளர்கள் குழுக்களுக்குத் தகுந்த வழிகாட்டிகளாக இருந்து உதவினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கண்டறியப்பட்ட பறவை இனங்கள்

இந்தக் கணக்கெடுப்பின் போது ஏராளமான உள்நாட்டு நீர்வாழ் பறவைகளும், வெளிநாடுகளில் இருந்து பருவகால மாற்றத்திற்காக வலசை வந்துள்ள (Migratory Birds) பறவைகளும் கண்டறியப்பட்டன. ஏரி மற்றும் சதுப்புநிலப் பகுதிகளில் பறவைகளின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் வாழ்விடச் சூழல் குறித்து விரிவான தரவுகள் சேகரிக்கப்பட்டன. இது எதிர்காலத்தில் பறவைகள் பாதுகாப்பு மற்றும் நீர்நிலை மேலாண்மைக்கு பெரும் உதவியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கணக்கெடுப்பு பணி நிறைவு விழா மற்றும் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கல்

கணக்கெடுப்புப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற கல்லூரி மாணவ - மாணவிகளை ஊக்குவிக்கும் வகையில் சீர்காழி வனச்சரக அலுவலர் அயூப்கான் சான்றிதழ்களை வழங்கினார். இறுதியாக வனவர்  அனந்தீஸ்வரன் நன்றியுரை ஆற்றினார். இயற்கை ஆர்வலர்கள் மற்றும் வனத்துறையினரின் ஒருங்கிணைந்த முயற்சியால், இந்த ஆண்டுக்கான நீர்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்று நிறைவு பெற்றுள்ளதாக வனத்துறையினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

I am a Journalist with 16 years of experience in 24/7 television news and digital media. A graduate of Media Studies, my fascination with a media career began in childhood and gradually transformed into a deep professional commitment to Journalism with truth and social responsibility. I entered Journalism during the early phase of digital platform growth and adapted to the evolving media landscape by effectively using MOJO tools to strengthen digital storytelling alongside mainstream Journalism. I am known for reporting facts exactly as they are, guided by firm ethical principles and an unshakeable commitment to honesty. I ensure unbiased coverage without yielding to threats, pressure or personal benefits. For me, Journalism is not merely a profession, but a responsibility towards society. As a consistent voice for the voiceless, I have made significant contributions to highlighting social issues, human-interest stories and political developments. I have also taken dedicated efforts to help ensure government welfare schemes reach those in genuine need. Every report I produce is driven by accuracy, integrity and a strong commitment to the public interest.

Read More
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
Anbumani: மு.க.ஸ்டாலின் 3 மாதங்கள் தூங்கிவிட்டு, இப்போது போலியாக புலம்புவது ஏன்? அன்புமணி கேள்வி
துரோகத்தின் மறுபெயர் எடப்பாடி பழனிசாமி! - கனிமொழி எம்.பி அதிரடிப் பேச்சு
துரோகத்தின் மறுபெயர் எடப்பாடி பழனிசாமி! - கனிமொழி எம்.பி அதிரடிப் பேச்சு
அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே இப்படியா? தமிழகத்தில் கொளுத்தப் போகும் வெயில் - ஷாக்கில் பொதுமக்கள்!
அக்னி நட்சத்திரத்திற்கு முன்பே இப்படியா? தமிழகத்தில் கொளுத்தப் போகும் வெயில் - ஷாக்கில் பொதுமக்கள்!
பெரம்பூர் தொகுதியை விஜய்க்கு விட்டுக்கொடுத்தது ஏன்? மனம் திறந்த தவெக மாவட்டச் செயலாளர் சிவா!
பெரம்பூர் தொகுதியை விஜய்க்கு விட்டுக்கொடுத்தது ஏன்? மனம் திறந்த தவெக மாவட்டச் செயலாளர் சிவா!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

’’அம்மாவுக்கு ஓட்டு போடுங்க’’அன்புமணி மகள்கள் பிரச்சாரம்! ஆரத்தழுவிய மக்கள்
35 COMPANY மறைத்த ஆதவ்?வேட்புமனுவில் இழுபறி!கடைசியில் நடந்த ட்விஸ்ட்!
காசும் இல்ல, சீட்டும் இல்ல! மநீம தொண்டர்கள் கதறல் ..ஏமாற்றிய கமல்?
அண்ணாமலைக்கு NO சீட்!விஜயதரணிக்கு JACKPOT பாஜக வேட்பாளர்கள் LIST

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Pope Leo: இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
இது உங்களுக்கே ஓவரா தெரியல.! ஏசு போல் சித்தரித்து புகைப்படம்; போப் லியோவையும் வெளுத்த ட்ரம்ப்
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Ramadoss: சென்னை அப்பலோவில் ராமதாஸ் அட்மிட், போன் போட்ட முதலமைச்சர் - பாமக நிறுவனருக்கு என்ன ஆச்சு?
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Noida Protest: சம்பளத்தை உயர்த்தாத நிறுவனம் - கலவரமான தொழிலாளர்களின் போராட்டம், பற்றி எரிந்த வாகனங்கள்
Iran Warning Video: “தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
“தாக்கப் போகிறோம்“'; ஹார்முஸில் அமெரிக்க கப்பலுக்கு வார்னிங்; ஈரான் வெளியிட்ட பரபரப்பு வீடியோ
US Iran War: “ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)“; எதுவும் புரியலையா.? இது அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள ‘கணித‘ எச்சரிக்கை
“ΔO_BSOH>0 ⇒ f(f(O))>f(O)“; எதுவும் புரியலையா.? இது அமெரிக்காவிற்கு ஈரான் விடுத்துள்ள ‘கணித‘ எச்சரிக்கை
GOLD SILVER RATE Apr. 13th: சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
சபாஷ்.! வாரத்தின் முதல் நாளிலேயே சரிந்த தங்கம், வெள்ளி விலை; தற்போது எவ்வளவு தெரியுமா.?
Affordable Safe Cars: குடும்பத்தோட Safe-ஆ போகணுமா.? வாங்கக்கூடிய விலை; உச்ச பாதுகாப்பு; எந்தெந்த கார்கள் தெரியுமா.?
குடும்பத்தோட Safe-ஆ போகணுமா.? வாங்கக்கூடிய விலை; உச்ச பாதுகாப்பு; எந்தெந்த கார்கள் தெரியுமா.?
TN Election 2026: ஆளுங்கட்சி வேண்டுமா? எதிர்க்கட்சி வேண்டுமா? - நச்சுன்னு 3 பாயிண்ட்ஸ் - துரை வைகோ பரப்புரை
TN Election 2026: ஆளுங்கட்சி வேண்டுமா? எதிர்க்கட்சி வேண்டுமா? - நச்சுன்னு 3 பாயிண்ட்ஸ் - துரை வைகோ பரப்புரை
Embed widget