பரியேறும்பெருமாளில் அம்பேத்கர் பதிலாக அப்துல்கலாமா? - மாரி செல்வராஜ் ஓபன் டாக்
ஒருவேளை பரியேறும் பெருமாள் தோற்று இருந்தால், பின் வருபவர்கள் யாரும் அது போன்ற கதையை யோசித்து இருக்கமாட்டார்கள் என்றும் கூறினார்.

சேலம் அரசு கலைக் கல்லூரியில் ஆங்கிலத் துறையின் ஒரு நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் கலந்து கொண்டார். பின்னர் மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர் பேசியது, நான் உதவி இயக்குனராக இருந்தபோது, எனது வாத்தியார் இயக்குனர் ராம். நாம் யாரை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்கிறோமோ அவரது அறிவும், நியாயமான விஷயங்கள் தான் எடுத்துக் கொள்வோம். இயக்குனர் ராமிடம் வேலை பார்க்காமல், வேறொரு இயக்குனரிடம் வேலை பார்த்து இருந்தால், எனது வாழ்க்கையை மறந்து வேறு ஒரு சினிமாவை கொடுத்துக் கொண்டிருப்பேன். ஒரு சிறந்த ஆசிரியர் எனக்கு கிடைத்தார். எனக்கு சினிமாவைப் பற்றி எதுவும் தெரியாது. எனக்கு தெரிந்ததை எனது வாழ்க்கையில் நிறைய கேள்விகள், வலிகள், அழுகைகள், பெரிய கனவுகள் உள்ளது. அதை சினிமாவாக ஆக்கியுள்ளதாக கூறினார்.
சினிமா இயக்குனர்கள் கதை செல்ல போகும்போது நிறைய விஷயங்கள் உள்ளது. பரியேறும் பெருமாள் திரைப்படத்தின் கதையை 100 தயாரிப்பாளர்களிடம் சொல்லி இருப்பேன். இறுதியாக ஒரு தயாரிப்பாளரிடம் சொல்லும்போது ஒரு காட்சியில் அம்பேத்கர் ஆக வேண்டும் என்று சொன்னபோது, அதனை அப்துல்கலாமாக மாற்றிக் கொள்ளலாமா என்று கேட்டார். நான் அதிர்ச்சியடைந்தேன். ஏன் என்று நான் கேட்டபோது அனைவருக்கும் பொதுவானதாக இருக்கும் என்றார். ஒரு சட்டம் படிக்கும் மாணவர் என்ன சொல்வார் என்று சொன்னதற்கு, அதை உடைத்து கடந்து செல்ல முடியாது. இந்த கதையை விற்கவே முடியாது என அப்படி அடைத்து நிறுத்தக்கூடிய மனிதர்கள் இருந்த காலம் என பேசினார். அப்பொழுது ரஞ்சித் வந்து ஆரம்பிக்கப்பட்டது, ஒருவேளை பரியேறும் பெருமாள் தோற்று இருந்தால், பின் வருபவர்கள் யாரும் அது போன்ற கதையை யோசித்து இருக்கமாட்டார்கள் என்றும் கூறினார். பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என்ற நம்பிக்கை உருவாக்கி வைத்திருந்தார்கள். இந்தத் திரைப்படம் திரைக்கு வந்தால் ஓடாது என்று மொத்த திரைத்துறை சொல்லினர். வேறு கதை பண்ணும்படி சொல்லி வந்தனர் தனது வலிகளை தெரிவித்தார்.
திரைப்படம் முடியும்போது தான் நல்ல திரைப்படம் என்று மக்கள் தீர்மானிக்கிறார்கள். படம் ஆரம்பிப்பதற்கு முன்பாகவே நல்ல படம் என்று யாரும் பார்ப்பதில்லை. அவ்வாறு பார்க்கும் படம் வேறு, வீட்டிலிருந்து கிளம்பும்போது அல்லது பர்ஸ்ட் லுக் விடும்போது ஆயிரம் கோடி அடிக்கும் என்று சொல்வது வேறு. படத்தைப் பார்த்ததற்குப் பிறகு கூறும் கருத்து நிலையானது. பரியேறும் பெருமாள் படம் வந்த பிறகு தட்டி திறக்கப்படாத கதவுகள் திறக்கப்பட்டது என்றும் கூறினார்.
இப்பொழுது என்ன சொல்கிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கிறது. நீங்கள் படம் எடுத்தால் ஓடிவிடும் உங்கள் மக்களே பார்த்து ஓட வைத்து விடுவார்கள். இதற்கு முன்பாக இந்த மக்கள் படம் பார்க்கவில்லையா? உங்கள் படங்களை பார்க்கவில்லையா என்ற கேள்வி எழுகிறது. இதிலும் எனது திறமையை ஒரு வட்டத்திற்குள் கொண்டு செல்ல பார்க்கிறார்கள். ஒட்டுமொத்த சமூகத்திற்கு தான் படம் உருவாக்கப்படுகிறது. உங்கள் சமூகம் சார்ந்த மக்கள் தான் கருத்து என்பதை உடைக்க, மடைமாற்றம் செய்ய பணிகள் செய்து வருகிறேன் எனவும் பேசினார்.
எனது படங்கள் வெற்றி பெற்று ஓடுவதற்கு பொது சமூகம் தான் காரணம். என் சமூகம் கிடையாது. எனது சமூகத்திற்கு அனைத்து கதையும் தெரியும். பொதுசமூகத்திடம் மறைக்கப்பட்ட, திரித்துக் கூறப்பட்ட கதைகளை தெளிவாக, நண்பனாக உரையாடுவது அவர்களுக்கு பிடித்துள்ளது என்றார்.
ஒரு படைப்பில் மறைத்து வைக்கப்பட்ட பிரச்சினைகளை சமூகத்திற்கு, தெரிந்த பிறகுதான் நம்பிக்கை வந்துள்ளது. சாதாரண கமர்சியல் படங்களில் கூட ஒரு பெண்ணைத் தவறாக காட்டக்கூடாது. அந்த நிலையில் காட்டிக் கொண்டிருந்த இயக்குனர்களே மாறி உள்ளனர். கதை சொல்லும் விதத்தில், ஒரு மனிதரை மேலே கீழே என்று இழிவாக காட்டக்கூடாது என்று நான் செய்ததால் தான்; இன்றைக்கு தமிழ் சினிமாவில் மற்ற இயக்குனர்களுக்கு பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு, ஆயிரம் பிரச்சனையுடன் செல்லும் என்னை கொண்டாட விடாமல் செய்வதாக பேசப்படுகிறது. இந்த படங்களை எடுத்தால் யோசிக்க வேண்டும், பயணப்பட வேண்டும் என்று பேசினார். சினிமாவை பார்க்கும் சாதாரண பார்வையாளர் கமர்சியல் படத்தில் லாஜிக்கல் கேட்கிறார். பழைய படங்களில் லாஜிக்கல் பற்றி கேட்காத நிலையில், தற்பொழுது மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு செய்தியை கேள்விப்படும்போது அதற்கு உடனடியாக நம் கருத்துகளை வெளிபடுத்துகிறோம். உண்மையா என்பதை தெரிந்து கொள்ளும் வரை காத்திருப்பதில்லை. பின்னர் தவறு என்று தெரிந்த பிறகு, தவறாக நினைத்தேன் என்பதை நாம் வெளிப்படுத்துவதில்லை என்றும் கூறினார்.
சேலத்தில் திரைப்படம் எடுத்தால் திரைப்படங்கள் ஓடாது என்று சொல்கிறார்கள். இதுகுறித்து உதயநிதி ஸ்டாலினிடம் கூறினேன். அவரிடம் சொன்ன உடனே சார் என்று தயக்கத்துடன் பேசினார், பார்த்துக் கொள்ளலாம் என்று கூறினேன் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

