மேலும் அறிய

கண்ணீருடன் பிரியா விடை! வெளியேறும் இறுதி நேரத்திலாவது துயர் துடைக்குமா அரசு: எதிர்பார்ப்பில் மாஞ்சோலை மக்கள்.!

எங்களின் துயர் துடைக்க இறுதி நேரத்திலாவது அரசின் அறிவிப்பு வருமா? முதல்வரின் குரல் எங்களுக்காக ஒலிக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கூறுகின்றனர் மாஞ்சோலை மக்கள்...!

1963 ஆம் ஆண்டு  சிவாஜி கணேசன் சாவித்திரி நடித்த பஞ்ச அருணாச்சலம் தயாரிப்பில் கண்ணதாசன் கதை வசனத்தில் உருவான இரத்த திலகம் படத்தில் இடம் பெற்றுள்ள பசுமை நிறைந்த நினைவுகளே பாடித் திரிந்த பறவைகளே  என்ற பாடல் இடம் பெற்றிருக்கும். கல்லூரி தோழர்களான சிவாஜியும், சாவித்திரியும் கல்லூரி காலம் முடியும் நேரத்தில் இந்த பாடலை பாடிப் பிரிந்து செல்வர். 

இந்த நிலையில் ஐந்து தலைமுறைகளாக 95 ஆண்டுகள் மாஞ்சோலை மலை கிராமத்தில்  வசித்து வரும்  561 குடும்பத்தினர் அங்கிருந்து வெளியேற ஆயத்தமாகி வருகின்றனர். பாம்பே பர்மா டிரேடிங் நிறுவனத்தின் விருப்ப ஓய்விற்கு அனைவரும் கையெழுத்திட்ட  நிலையில் அவர்களுக்கு கிராஜுவெட்டி தொகையின் 25% காசோலையாக  வழங்கப்பட்டு வருகிறது. அவர்கள் அடுத்த 45 நாட்களுக்குள் வீடுகளை காலி செய்து செல்லும்போது மீதமுள்ள 75 சதவீதம் வழங்கப்படும் என தேயிலை  தோட்ட நிறுவனம் அறிவித்துள்ளது. இதனிடையே நிறுவனம் தொழிலாளர்களுக்கு வேலை கொடுப்பதை நேற்றோடு  நிறுத்தியுள்ளது.

கண்ணீருடன் பிரியா விடை! வெளியேறும் இறுதி நேரத்திலாவது துயர் துடைக்குமா அரசு: எதிர்பார்ப்பில் மாஞ்சோலை மக்கள்.!

இதனால் அப்பகுதி மக்கள் மாஞ்சோலையில் ஒன்று கூடி தங்களது பல ஆண்டு கால  பழைய  சம்பவங்களை நினைவு கூர்ந்ததோடு பசுமை நிறைந்த நினைவுகளே பாடலை தழுதழுத்த குரலில்  பாடி பிரியா விடை கொடுப்பதற்கான  ஆயத்த பணிகளை மேற்கொண்டனர். மூன்றாண்டுகள் கல்லூரியில் ஒன்றாக படித்து விட்டு பிரிந்து செல்லும் நண்பர்களுக்கு மிகப்பெரிய வேதனையை ஏற்படுத்தும் என்ற நிலையில் பல ஆண்டுகளாக ஒரே பகுதியில் வாழ்ந்து விட்டு அங்கிருந்து மறுகுடி அமர்விற்கு வேறு பகுதிக்கு செல்லும் மக்களின் நிலையை  நினைத்துப் பார்க்கவே கண்ணில் நீர் கோர்க்கிறது. 

கண்ணீருடன் பிரியா விடை! வெளியேறும் இறுதி நேரத்திலாவது துயர் துடைக்குமா அரசு: எதிர்பார்ப்பில் மாஞ்சோலை மக்கள்.!

அனைவரும் ஒரே இடத்தில் கூடி ஒருவருக்கொருவர் தங்களது அன்பை பறிமாறிக்கொண்டதுடன் ஒருவருக்கொருவர் கட்டி தழுவி கண்ணீர் விட்டு அழுது புலம்பிய காட்சிகள் அனைவரது மனதையும் கலங்கச் செய்தது. மக்களை பிரியும் அம்மண்ணும், தேயிலை தோட்டங்களும் கூட அவர்களின் பிரிவை நினைத்து கண்ணீர் வடிக்கும். அந்த அளவிற்கு அப்பகுதி வாழ்வியலோடு ஒன்றி பிணைந்த மக்கள் தான் பிறந்த மண்ணை விட்டு பிரிய மனமில்லாமால் பிரிந்து செல்லும் இறுதி காட்சிகள் வார்த்தைகளே இல்லாத வலியை மட்டுமே தாங்கி செல்வதை எடுத்துரைக்கிறது. அரசே எடுத்து நடத்தி மாஞ்சோலை மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் என அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் குரல் எழுப்பி வந்தனர். கண்ணீரும், கவலையுமாக இருக்கும் மாஞ்சோலை மக்களின் துயர் துடைக்க இறுதி நேரத்திலாவது அரசின் அறிவிப்பு வருமா? முதல்வரின் குரல் எங்களுக்காக ஒலிக்குமா என்ற எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கூறுகின்றனர் அங்குள்ள தோட்ட தொழிலாளர்கள்...!

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget