மேலும் அறிய

Madurai: 1191 ஏக்கர் மதுரை ஆதீன நிலத்தினை மீட்க அறநிலையத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவு..!

Madurai: மதுரையில் உள்ள ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Madurai:  மதுரையில் உள்ள ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்ததை ரத்து செய்ய உத்தரவிட கோரி தொடரப்பட்ட வழக்கில், நிலத்தை மீட்கவும், தேவைப்பட்டால் காவல்துறை பாதுகாப்பில், இந்து சமய அறநிலையத்துறைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை ஆதினத்திற்குச் சொந்தமான நிலத்தினை மீட்க வேண்டி, சென்னை திருத்தொண்டர் சபை நிறுவனர் ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், “மதுரை ஆதீன மடம் என்பது மிகவும் பழமையான,  நன்கு  பிரசித்திபெற்ற மடமாக  நெடுங்காலமாக இருந்து வருகிறது இந்த மடத்திற்கு சொந்தமாக தமிழ்நாடு முழுவதும் சொத்துக்கள் உள்ளது. இந்த சொத்து மதிப்பானது தற்போதைய காலத்திற்கு  மதிப்பு பல நூறு கோடி ரூபாய் வரை வரும் எனவும், 

கடந்த 2008 ஆம் ஆண்டு அப்போது இருந்த மதுரை ஆதின மடத்தின்  292 ஆவது அருணகிரி ஆதீனம் தரப்பில் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள  மதுரை ஆதின மடத்துக்குச் சொந்தமான 1191 ஏக்கர் நிலங்களை புதுச்சேரியை சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு 99 வருடங்களுக்கு பவர் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. இந்த பவர் ஒப்பந்ததின்படி 2018 ஆம் ஆண்டு பத்திரப் பதிவும் நடந்துள்ளது. இது சட்டவிரோதமானது.  அதாவது, ஆதீன மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என சட்டமும் நீதிமன்ற தீர்ப்புகளும் உள்ளது. அப்படி இருக்கும்போது, ஆதீன மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலம் தனியார் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டிருப்பது என்பது சட்ட விரோதம். எனவே சட்ட விரோதமாக பதியப்பட்ட ஒப்பந்தத்தை ரத்து செய்து, நிலத்தினை மீட்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனு நீதிபதிகள் சத்திய நாராயண பிரசாத் மற்றும் மகாதேவன்  ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது, தற்போதுள்ள 293 ஆவது ஆதீனமான ஞான சம்பந்தர் தரப்பில் அருன் சாமிநாதன் என்ற வழக்கறிஞர் அறிக்கை தாக்கல் செய்தார். அந்த அறிக்கையில், மறைந்த 292 ஆவது ஆதீனம் இருந்தபோது போடப்பட்டா ஒப்பந்தம்தான் இது.  இந்த ஒப்பந்தம் தற்போது  ரத்து செய்யப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், சட்டத்தை மீறி பத்திர பதிவு செய்தவர்கள் வெளியேற மறுப்பதாகவும், அவர்கள் பண பலமிக்கவர்களாகவும் உள்ளனர்,  எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பித்து சட்ட விரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்களை வெளியேற்ற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், தீர்ப்பில் குறிப்பிட்டிருந்ததாவது, இந்து அறநிலையத்துறையானது மதுரை விமான நிலையம் அருகில் உள்ள மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்டு மதுரை ஆதீன மடத்திடம் ஒப்படைக்கவேண்டும் எனவும்,  தேவைப்படும் ஏற்படும்பட்சத்தில் காவல்துறை போதிய பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
அண்ணா பல்கலை. மாணவி விவரங்களோடு வெளியான எஃப்ஐஆர்; உடன்பட வைத்தது எப்படி?- பரபரப்புத் தகவல்கள்!
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
மாணவி பாலியல் வன்கொடுமை; குற்றவாளிக்கு நிகரானவர் உயிருக்கு பயந்து ஓடிய காதலன் - ஏன்?
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வெறும் ரூ.601 தான்... நண்பர்களுக்கு டேட்டாவை பரிசாக அளிக்கும் வசதி! அதிரடி ப்ளானை இறக்கிய ஜியோ!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
வாவ்! 1500ஆ? 2000ஆ? அதிகரிக்கப்போகும் மகளிர் உரிமைத் தொகை! மு.க.ஸ்டாலினின் மாஸ்டர் ப்ளான்!
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
Tsunami 2004 : மறக்குமா நெஞ்சம்.. ஆறாத வடுவாய் உள்ள காயங்கள்.. 20-ஆம் ஆண்டு சுனாமி நினைவு தினம்
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
IRCTC Down: தட்கல் நேரத்தில் தகராறு! முடங்கிய ஐஆர்சிடிசி இணையத்தளம்.. பயணிகள் தவிப்பு
"மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது தி.மு.க நிர்வாகி" அண்ணாமலை பகிரங்க குற்றச்சாட்டு!
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Accident: காலையிலே சோகம்! ஜிஎஸ்டி சாலையில் பிரிந்த 3 உயிர் - பீதியில் வாகன ஓட்டிகள்
Embed widget