''பாஜகவின் மதவெறுப்பு அரசியல்! அமைச்சரை பார்த்து மன்னிப்பு..'' பாஜகவில் இருந்து விலகும் சரவணன்!
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது காலணி எறிந்ததால் பாஜகவில் இருந்து இன்று விலகபோவதாக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீது காலணி எறிந்ததால் பாஜகவின் இருந்து இன்று விலகபோவதாக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்று மதுரை விமான நிலையத்தில், ராணுவ வீரர் லட்சுமணின் உடலுக்கு அஞ்சலி செலுத்த சென்றார். அப்போது பாஜக-வினரும் கூட்டமாக வந்ததாக கூறப்படுகிறது. அரசு சார்பில் முதலில் மரியாதை செலுத்திய பிறகு பாஜக-வினர் அஞ்சலி செலுத்துமாறு, அமைச்சர் கூறியதாக கூறப்படுகிறது. இதற்கு பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.
View this post on Instagram
பின்பு அமைச்சர் அஞ்சலி செலுத்திவிட்டு செல்லும்போது, அமைச்சருக்கு எதிராக பாஜகவினர் கோசங்கள் எழுப்பினர். அப்போது கூட்டத்தில் இருந்து அமைச்சர் காரின் மீது காலணியை பாஜகவினர் எறிந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தநிலையில் பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் பாஜகவில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “ இந்த சூழலில் அமைச்சரின் மீது தாக்குதலை ஏற்படுத்திய மிகப்பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை நினைத்து தூக்கம் வரவில்லை. அமைச்சர் பி.டி.ஆர்., தியாகராஜன் அவர்களது வீட்டிற்கு அடிக்கடி, வந்துள்ளேன். இதுவும் ஒரு தாய் வீடு போல தான். அதனால் அமைச்சரை பார்க்க வேண்டும் என அனுமதி கேட்டு சந்தித்தேன். அவரிடம் என்னுடைய வருத்தத்தை தெரிவித்துக்கொண்டேன். ஏற்கனவே கார்கில் போரில் நடைபெற்ற சம்பவத்திற்கு வீர வணக்கம் செலுத்தியுள்ளேன்.
அப்போது நான் எம்.எல்.ஏ.,வாக இருந்தேன். தற்போது நான் மருத்துவராகவும், மாவட்ட தலைவராகவும் இருந்தாலும் பொது ஜனம் தான். எனவே அந்த இடத்தில் இருந்திருக்க கூடாது. இருந்த போதிலும் மாநில தலைவர் அண்ணாமலை, புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரன், நான் உட்பட அனைவரும் அஞ்சலி செலுத்தினோம். ஆனால் தொண்டர்கள் கட்டுப்பாட்டை இழந்து கசப்பான சம்பவம் நடைபெற்றுவிட்டது. இது மிகுந்த வருத்தம் ஏற்பட்டது. அமைச்சரிடம் இது குறித்து விளக்கத்தை அளித்துள்ளேன். இதனை அமைச்சர் கேசுவலாக எடுத்துகொண்டுள்ளார். ஆரம்பத்தில் இருந்து சுயமரியாதை இயக்கத்தில் வளர்ந்தவன். இந்த சூழலில் துவேசமான அரசியலை செய்ய நானும் ஒரு ஆளாக இருந்துவிடக்கூடாது என்ற அடிப்படையில் அமைச்சரை சந்திதேன். தற்போது மைண்ட் ப்ரீயாக உள்ளது. இனி நிம்மதியாக தூங்குவேன்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்