மேலும் அறிய

அரசு மருத்துவமனைகளில் ரீல்ஸ்: 'யாருக்கும் தொந்தரவில்லை'- அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம்!

10 பேர், 15 பேர் தொலைபேசியில் எடுப்பதால் யாருக்கு எந்த தொந்தரவும் இல்லை. அரசு மருத்துவமனையில் நிறைய பிரச்சனைகள் உள்ளன- அமைச்சர் நிர்மல் குமார்

அரசு மருத்துவமனை போன்ற பொது நிகழ்ச்சிகளில் தவெகவினர் ரீல்ஸ் எடுப்பதால் பொதுமக்களுக்கு தொந்தரவு இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் நூதன விளக்கம் அளித்துள்ளார்.

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து முகாம் நிகழ்ச்சியில், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல்குமார் கூறியதாவது:

’’டெல்லி சிறப்பு பிரதிநிதி பதவி அது பெரிய பொறுப்பும் இல்லை. பெரிய பதவியும் இல்லை. அது பேச வேண்டிய அளவுக்கு பெரிய விஷயம் இல்லை.

மதுரை மாநகராட்சியில் தூய்மைப் பணிகளைக் கையாண்டு வரும் தனியார் நிறுவனம் குப்பைகளுக்கு பதில் மணலைக் கொண்டு சென்று கொட்டி வந்துள்ளார்கள். இது குறித்து ஏற்கனவே புகார் வந்த நிலையில் தற்போது மீண்டும் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்ய மதுரை மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மணலை கொண்டு சென்றபோது

சில வாரங்களுக்கு முன்பு 1000 டன் குப்பைகளுக்கு பதிலாக மணலை கொண்டு சென்றபோது லாரிகள் பிடிபட்டுள்ளது. குப்பைகளுக்கு பதில் மணலை அள்ளி கணக்கு காட்டுவதற்கு கொண்டு வந்துள்ளனர். அவர்கள் மீது புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

இது போன்ற நிறுவனங்களைத் தான் திமுக ஆட்சியில் போற்றி பாதுகாத்து வந்துள்ளார்கள். தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு கூட இரண்டு லாரிகள் அது போல பிடிபட்டிருக்கிறது. அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

அரசு மருத்துவமனை நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்ததோடு, அதிக பேர் போனில் ரீல்ஸ் எடுப்பது குறித்த கேள்விக்கு, ‘’கட்சி நிர்வாகிகள் வருகைக்காகவோ யாருக்காகவும் நாங்கள் எந்த நிகழ்ச்சியையும் நிறுத்த சொல்லவில்லை. எல்லா இடத்திலும் நிகழ்ச்சி நடத்த சொல்லி இருக்கிறோம்.

யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை

10 பேர், 15 பேர் தொலைபேசியில் எடுப்பதால் யாருக்கு எந்த தொந்தரவும் இல்லை. அரசு மருத்துவமனையில் நிறைய பிரச்சனைகள் உள்ளன. ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. செவிலியர் பற்றாக்குறை உள்ளது. மருத்துவர்கள் பற்றாக்றைவு உள்ளது. இடப்பற்றாக்குறை உள்ளது.

விரிவாக்க பணிக்கு இடம் கேட்டு 10 வருடமாக காத்துக் கொண்டுள்ளனர். அரசு மருத்துவமனையை விரிவாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எல்லா இடத்திலும் கட்டிடம் உள்ளது, ஆனால் ஊழியர்கள் இல்லை. கட்டிடங்களாக இருக்கிறது, ஆனால் பணி செய்ய ஆளில்லை. இதையெல்லாம் சரி செய்ய உள்ளோம்.

ஆட்சி அமைக்க திட்டம்

குதிரை பேரம் ஒட்டக பேரம் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து அவர்களுக்குள் செய்துள்ளார்கள். இரண்டு பேரும் எப்படியாவது குறுக்கு வழியில் ஆட்சி அமைக்க வேண்டும் என முயற்சி செய்ததன் விளைவாகத்தான் ஒவ்வொருவரும் விலகிச் செல்கிறார்கள். எங்களுக்கு தெரிந்து திமுகவில் இனிமேல் அவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்குமா என்று தெரியவில்லை. இரண்டு பேரும் சேர்ந்து கூட்டணி கட்சிகளை நிர்பந்தித்து ஆட்சி அமைக்க திட்டமிடுகிறார்கள்.

திமுகவில் இனி அரசியல் எதிர்காலம் இருக்காது அதை விட்டு ஒதுங்கிவிடலாம் என சிலர் நினைப்பதாக தகவல் வருகிறது.

எடப்பாடி பழனிசாமியும் ஸ்டாலினும் சேர்ந்து என்னென்ன செய்தார்கள் என்று ஆர்.பி.உதயகுமார் கேட்டு தெரிந்து கொள்ள சொல்லுங்கள். இப்படியே பேசிக் கொண்டிருந்தால் அவருக்கு கவுன்சிலர் தேர்தலே கடினமாகிவிடும்.

திமுக அதிமுக என எல்லோரும் ஒன்றிணைய தயாராகி விட்டார்கள். இரண்டு பேரும் கடைசியில் தங்கள் குடும்பத்தை காப்பாற்றலாம் என்ற முடிவுக்கு வந்து விட்டார்கள். அதிமுகவும் திமுகவும் ஒன்றிணை தயாராகி விட்டார்கள். விரைவிலேயே பாஜகவோடு இணைந்து அதிமுகவும் திமுகவும் சேர்ந்து அமைச்சர் பதவி கூட வாங்க தயாராக உள்ளார்கள். நாங்கள் மக்களை நம்பி தேர்தல் என்றும் தனியாக நின்று வெற்றி பெற்றோம். மக்கள் யாருக்கு வாக்களித்தார்கள் மக்கள் நம்பிக்கை யார் மீது வைத்துள்ளார்கள் என்று நன்றாகவே தெரியும்’’ என அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
விவசாயிகளே உஷார்! இந்த 3 பணிகளை முடிக்காவிட்டால் பி.எம்.கிசான் பணம் நிறுத்தப்படலாம்!
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
விளையாட்டு வீரர்களின் கனவுக்கு பூட்டு... அரசின் கோடிக்கணக்கான முதலீடு வீணாகும் அபாயம்: எங்கு தெரியுங்களா?
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget